தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது அடுத்த பெரும் முயற்சியாக விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமைப்படுகிறது. *டயங்கரம் ” என்கிற இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாக கொண்டுள்ளது. அந்த வார்த்தைக்கு இப்போது திரையில் புதிய பரிமாணத்தில் அதிரடியும் உணர்ச்சி கலந்த கலகல காலேஜ் கேம்பஸ் குரலாக உருவாகிறது. தனது துள்ளலான பேச்சுத் திறன் யூத் கனெக்ட் மற்றும் சமூக ஊடகங்களில் அசைக்க முடியாத பெர்சனாலிட்டி மூலம், விஜே சித்து தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். சினிமா இயக்குனராகவும் ஹீரோவாகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படிக்கல் ஆகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஐசரி கே…
Read MoreCategory: சினிமா செய்திகள்
லோயோலா கல்லூரி Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 போட்டியில் வெற்றி பெற்றது
சென்னை, மே 2025 – ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற Turf Town வழங்கும் PORKKALAM சீசன் 3 பட்டம் பெறும் இறுதிப் போட்டியில், லோயோலா கல்லூரி கால்பந்து அணி STEDS HCLF SFC அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றது. இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக டாக்டர் ஆர். ஆனந்த குமார், IAS, மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியின் சிறப்பம்சங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 18 முன்னணி அணிகள் மூன்று மாதங்கள் நீண்ட இந்த போட்டியில் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முன்னணி நான்கு அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் லோயோலா கல்லூரி மற்றும் STEDS HCLF SFC அணிகள் தீவிரமாக மோதின. விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள் 1. மிஸ்டர்…
Read Moreநடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!
Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த…
Read Moreஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோ தக்ஷன் விஜய்!
அசோக், தக்ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளார். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் C.பியூலா மகிழ். படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது! “I AM WAITING” என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!
Read Moreலிங்கேஷ் – லியா நடிப்பில் உருவாகியுள்ள `என் காதலே’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், தனது முதல் படமாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்… இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்…
Read Moreநேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!
நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை…
Read More‘தேவதாசின் தேவதை’ : காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!
ஆல்பங்கள், தனிப்பாடல்கள் புதுமையாக இருக்கும் போது கவனம் பெறுகின்றன. தற்காலத்தில் இவை திரை நுழைவுக்கு ஒரு படிக்கட்டாகவும் அமைகின்றன.மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.ரம்யா ,கவி சுஜய், ஆனந்த் ரெய்னா இதில் நடித்துள்ளனர். தயாரிப்பு ஷீரடி ஓம் சாய்ராம்,ட்ராக் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது. ‘தூக்கத்தை தூக்கிட்டுப் போனாளே, தூரத்தில் நின்றென்னைக் கொன்றாளே ‘ என்று தொடங்கும் இந்த ஆல்பம் பாடலை இயக்கியுள்ள மாஸ் ரவி சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’,விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர். இந்த மாஸ் ரவி ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் அப்படம் வெளிவர உள்ளது.மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து இயக்கி வருகிறார். பாடலாசிரியர் கவி சுஜய்,…
Read Moreசூரியின் ‘மாமன்’ பட டிரெய்லர் வெளியானது
Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த…
Read Moreசார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் KK ராதாமோகன் தயாரிக்க, லக்ஷ்மி ராதாமோகன் வழங்கும், மிக முக்கியமான பான் இந்தியா திரைப்படமான, “போகி” — #Sharwa38இல் முதல் முறையாக இணைந்துள்ளனர். 1960 களின் பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன், விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க்…
Read Moreமக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்
இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது. இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார்.…
Read More