வழக்கமான கூலிப்படை கதை. அதை வழக்கத்துக்கு மாறாக திரில்லருடன் சுவாரஸ்யம் இணைத்து தந்திருக்கிறார்கள். மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு தாராளமாக அதிரடி தடாலடி என வலம் வருபவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார். அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. இதனால் கட்சி எம் எல் ஏ வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஒருவரை இவரே ஆள் வைத்து போட்டுத் தள்ளுகிறார். அவரது நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன். நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டு தள்ளியவன், அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக சேர்கிறார். தனது…
Read MoreCategory: விமர்சனம்
மாஸ்க் – திரை விமர்சனம்
நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள். அரசியல்வாதி பவனால் ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்கும் தேர்தல் செலவுக்குமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அது. சிலர் நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு இந்த கொள்ளையை நடத்துகிறார்கள். கொள்ளை போன பணம் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிய தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார். சமூக சேவைகள் என்ற பெயரில் சமூக விரோத செயல்களைய செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள். இவர்களில் பணம் யார் வசம் கிடைத்தது? என்று சொல்வதே ’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கும்…
Read Moreமிடில் கிளாஸ் – திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பங்களின் ஒட்டுமொத்த கனவே பணத் தேவையாகத்தான் இருக்கும். மற்றவர் முன் தங்களை உயர்வாக காட்ட விரும்பும் இவர்களில் சிலர் தங்கள் ஆடம்பர கனவுகளுக்கு வடிவம் கொடுத்து கடனில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதிலும் குறிப்பாக உறவினர்கள் பணம் படைத்தவர்களாக இருக்க, அவர்களுக்கு இணையாக தங்களை காட்டிக் கொள்ளும் முனை ப்பில் இதே நடுத்தர குடும்பம் பந்தாவுக்கு செலவழித்து நொந்து போனதும் உண்டு. இதற்கெல்லாம் மேலாக பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி மட்டும் இதே நடுத்தர குடும்பத்தில் அமைந்துவிட்டால் கணவன் கடன் வாங்கியே காலாவதியாகி விடுவான். இங்கே நம் கதையின் நாயகனுக்கோ கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமிக்கோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என் பது லட்சியம். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி…
Read Moreதீயவர் குலை நடுங்க — திரை விமர்சனம்
கொஞ்ச இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு துப்பறியும் கதை. அதை யூகிக்க முடியாத சஸ்பென்ஸோடு சொல்லி இருக்கிறார்கள். பிரபல எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் விசாரிக்கிறார். இந்த விசாரணை ஒரு கட்டத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷி டம் வந்து நிற்கிறது. இந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியை. திருமணமாகாத இவர் திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அவரைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ள பழகத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் வருங்கால கணவராக கருதப்படும் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார். அது…
Read Moreயெல்லோ – திரை விமர்சனம்
காதல் தோல்வி, தந்தை உடல்நலக் குறைவு என்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாயகி பூர்ணிமா ரவிக்கு மன அழுத்தத்தை கூட்டி வைக்க… மன உளைச்சலோடு மல்லுக்கட்டும் மகளை அப்படி காண சசிக்காத தந்தை, மகளின் மனநிலையில் மாற்றம் காண விரும்புகிறார். பிடித்த இடத்துக்கு சுற்றுலா சென்று வர கேட்டுக்கொள்கிறார். மகளும் அதன்படி, தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்க.. இருவரும் இணைந்து பயணத்தை தொடர்கிறார்கள். இந்த பயணம், அவர்கள் இருவரது வாழ்விலும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்தது? நாயகி தேடிச் சென்ற நண்பர்கள் கிடைத்தார்களா? என்பதை பயணம் வழியே நம் மனம் சந்தோஷ நிறைவில் பொங்கி வழிய வழிய தருவதே இந்த ‘யெல்லோ’. யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, சில…
Read Moreஆட்டோகிராப் – திரை விமர்சனம்
மழை பெய்ததும் குபீ ரென வெளிப்படுமே ஒருவித மண் வாசனை… அந்த வாசனை நாசி வரை போய் மனதை நிறைக்குமே… அப்படி ஒரு சுகானுபவம் தான் இந்த ஆட்டோகிராப். தோல்வி என்று தெரியாமலே தோற்றுப் போன பள்ளிக் காதல்… காதல் கைகூடி வந்தநேரத்தில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு அவமானத்தில் முடிந்த கல்லூரிக் காதல்… இந்த சோகத்துக்கு நடுவே ஒரு சுகராகமாக வந்து சேர்கிறாள் ஒரு சினேகிதி. காதல் வலியில் திணறிக் கொண்டிருந்த அவனுக்குள் தனது நட்பால் புது வெளிச்சம் பாய்ச்சு கிறாள் இந்த சினேகிதி. இப்போது சினேகிதி அவனுக்கு ஒரு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்து அவன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறாள். இப்போது நாயகனுக்கு திருமணம். பெண் பார்த்ததே இந்த சினேகிதி தான். திருமணத்துக்கு தன் முன்னாள் காதலிகளை அழைக்க விரும்புகிறான் நாயகன். அவர்கள் இப்போது எங்கே எப்படி…
Read Moreமதராஸ் மாபியா கம்பெனி — திரை விமர்சனம்
சென்னையில் பெரிய மாஃபியாவாக இருக்கும் ஆனந்தராஜுக்கு சென்னையின் பல இடங்களில் கிளைகள். எல்லாருமே அந்தந்த ஏரியாவுக்கு அவரால் நியமிக்கப்பட்ட ரவுடிகள். அதே நேரம் எந்த கிளை நிறுவனமும் தலைமை அனுமதி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. தலைமை உத்தரவிட்டால் யோசிக்காமல் உடனே செய்து முடித்து விட வேண்டும். இப்படியாக அடிதடியில் தொடங்கி கொலை வரை குற்ற செயல்கள் தடையின்றி நடந்து வருகின்றன. நகரில் எத்தனை குற்ற செயல்கள் நடந்தாலும் போலீசில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவாகாது. இதுதான் போலீசுக்கு தலைவலியாக இருக்கிறது. இந்நிலையில் ஆனந்தராஜ் மகள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவனை மிரட்டி தாக்கியதில் அவன் இறந்தே போகிறான். ஆனாலும் இளைஞரின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதற்கிடையே ஆனந்தராஜூக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுகிறது சம்யுக்தா தலைமையிலான போலீஸ் குழு. இதே…
Read Moreகும்கி-2 – திரை விமர்சனம்
மலைப்பகுதியில் வாழும் மதிக்கு தந்தை இல்லை. தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். அவர்கள் ‘குடி’யும் கும்மாளமுமாக பெரும்பாலும் மதி மயங்கிய நிலையிலேயே இருக்க, இவர்களால் சிறுவன் மதி பாதிக்கப்படுகிறான். பள்ளியிலும் அவனுக்கென்று நண்பர்கள் யாரும் இல்லாமல் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறான். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் அவனை அரவணைக்கிறார். அன்பு காட்டுகிறார். மனிதன் நேசிக்கா விட்டால் என்ன… இயற்கையை நேசி. அது உன்னை நேசிக்கும் என்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்துக் காட்டில் ஒரு யானைக் குட்டி பள்ளத்தில் தவறி விழுந்து விட, அதை பள்ளத்திலிருந்து மீட்கிறான். அது முதல் மதியும் யானைக் குட்டியும் இணை பிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். இதனை அறிந்து கொண்ட அவனது தாய் அந்த யானையை பெரிய விலைக்கு விற்க ஏற்பாடு செய்கிறாள். மதிக்குத் தெரியாமல் ஒரு நாள் விற்றும் விடுகிறாள். இது தெரியாமல் மதி யானையைத் தேடி…
Read Moreகாந்தா – திரைவிமர்சனம்
திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘இதுதான் படம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆழமும் அகலமும் ஆன ஒரு படைப்பு இந்த காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் கொடி கட்டி பறப்பவர் டி.கே.மகாதேவன். (துல்கர் சல்மான்).அவரை தனது படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி). முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தேடி வர, அதுவரை அவர் நடித்த 10 படங்கள் தொடர் வெற்றியில் இணைகின்றன. இப்போது பல ஆண்டுகளுக்குப் பின் குரு சிஷ்யன் இருவரும் பிரபல படநிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணைகிறார்கள். அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம். முன் போல் இல்லை அவர். தனது இன்றைய இமேஜ்க்கு தக்கபடி கதையில் சில…
Read Moreதாவூத் – திரை விமர்சனம்
தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தாவூத், அங்கே போதைப்பொருள் கடத்தலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார். தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதைப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை ஈடுபடுகிறது. அதே சமயம், தாவூத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவூத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் காவல்துறை உதவி ஆணையர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது. இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் இந்த தொழிலில் கரை கண்ட எதிரிகள் ஆட்டையை போட்டு விடுவார்கள் என்பதால்,…
Read More