ஆழி – விமர்சனம்

கதை…

சரத்குமார் ஒரு போட் மெக்கானிக்.. படகு ரிப்பேர் செய்பவர்.. அதே சமயம் பல குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்.. இவரது மகள் தேவிகா சகமாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார்..

இவர்களின் காதலை பிடிக்காத சரத் தன் மகளின் காதலனை கடத்தி நடுகடலுக்கு சென்று படகில் சித்திரவதை செய்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது.? அவனால் தப்பிக்க முடிந்ததா.? காதலர்கள் இணைந்தார்களா.? சரத்குமாரின் நிலைப்பாடு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..


நடிகர்கள்…

சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றிய படத்தின் முழு கதை.. இடையில் வையாபுரி உள்ளிட்ட சில கேரக்டர்களும் வந்து செல்கிறது..

சரத்குமாரின் கெட்டப் தோற்றம் அனைத்தும் அருமை.. அழகான கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார் தேவிகா.. நாயகன் இந்திரஜித் அனுதாப நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்..

தொழில் நுட்ப கலைஞர்கள்…

அழகே உயிர் நீயடி.. உயிரில் கலந்தாயடி… என்ற பாடல் எப்போதும் மனதில் ஒலிக்கும் பாடலாக அமைந்திருக்கிறது.. பாடல்களை விட பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட்.

ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் சவுண்ட் பணிகளை கவனித்திருக்கிறார்.. ஆழ்கடல் சத்தம்.. இயந்திரம் கடல் வீசும் அலைகள் என அனைத்து சப்தங்களும் அருமை.

மாதவ் ராமதாசன் என்பவர் இயக்கி இருக்கிறார்.. மலையாள பட பாணியில் பொறுமையாக திரைக்கதையை அமைத்து நீட்டி இழுத்து இருக்கிறார்.. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு போதுமான பொறுமை இல்லை.. அவர்கள் கமர்சியல் ஆக்ஷன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை..

குறும்படமாக எடுக்க வேண்டிய திரைக்கதையை 2 மணி நேரத்திற்கு நீட்டியிருக்கிறார் எடிட்டர்.. ஆழ்கடலை பார்க்கும் அளவிற்கு நமக்கு ஆழ்ந்த பொறுமை இல்லை..

Related posts

Leave a Comment