கதை…
வயதான பெண்மணி ராதிகா.. இவருக்கு மூன்று மகன்கள் & ஒரு மகள்.. கணவரை இழந்த ராதிகா வருமானத்திற்காக தன் பணத்தை எல்லாம் வட்டிக்கு விட்டு செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.. மகன்கள் கஷ்டப்பட்டாலும் அவரவர் உழைப்பில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்..
இவரிடம் வட்டிக்கு பணம் பெறாதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.. இதனால் ஊரில் இவருக்கு மரணமே வராதா என்று பலரும் சாபம் கொடுக்கும் சூழ்நிலை.

ஒரு நாள் இவருக்கு பக்கவாதம் போல கை கால்கள் முடங்கி படுத்த படுக்கையாகிறார். இந்த சூழ்நிலையில் இளவரசு வந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ராதிகா 160 பவுன் நகைகளை வாங்கி வந்தார் என்கிறார்.
அந்த நகைகள் எங்கே இருக்கிறது தெரியாமல் என மகன்கள் குழம்பில் இருக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா.? நகைகளை எங்கே வைத்திருந்தார்.? ராதிகாவிடம் உண்மையை பெற முடிந்ததா.?என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
சினிமாவில் கத்துக்கிட்ட அனைத்து வித்தைகளையும் ஒரே படத்தில் இறக்கி வைப்பது போல பவுனுத்தாயி கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் தாய் கிழவி ராதிகா.. மேக்கப் உடல் மொழி என அனைத்திலும் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.. இவருக்கு விருதுகள் நிச்சயம் கிடைக்கும்..
ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக ரைச்சல் ரபேக்கா, மருமகனாக முத்துக்குமார், உறவினராக முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக இளவரசு ஆகியோர் சென்டிமென்ட் காமெடி என அனைத்திலும் அசத்தி இருக்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பாடல்களும் இசையும் அருமை.. ஜெகன் கவிராஜ் என்பவர் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறார். பாடல் வரிகள் சிறப்பு…
விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்திருக்கிறார்..
மண் சார்ந்த மணத்துடன் திரைக்கதை அமைத்து தாய் கிழவியை சிறப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் சிவக்குமார் முருகேசன்..
பெரும்பாலும் கிராமத்து மக்கள் என்றாலே குழந்தைகள் மீது பாசமாக தான் இருப்பார்கள்.. ஆனால் இதில் பாசம் இல்லாமல் அடவாடித்தனம் செய்யும் ஒரு கிழவியாகவே ராதிகாவை காட்டியிருக்கிறார் இயக்குனர்.. சொத்து பணம் எல்லாம் தனக்கே என்னும் திமிர் பிடித்த ராதிகாவை காட்டி இருப்பது ஏனோ.?
இந்த லாஜிக் எல்லாம் மறந்து காமெடி மற்றும் கமல்ஹாசன் பாடல்களை கேட்டு ரசித்து வரலாம்..

