கதை…
போர்த் ஃப்ளோர் தலைப்பிலேயே படத்தின் கதை அமைந்திருக்கிறது.. நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை..
நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி வருகிறார் நாயகன் ஆரி.. இவர் வந்தது முதல் அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த அப்பார்ட்மெண்டில் இவரது கண்களுக்கு மட்டும் மரணமடைந்த சிலர் தென்படுகிறார்கள்.
மற்றவர்கள் பார்க்க முடியாத உருவம் ஆரிக்கு மட்டும் தெரிவது ஏன்.? அதன் பின்னணி.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நடிகர் ஆரி அசத்திருக்கிறார்.. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க இளைஞனாக இருப்பதால் முகத்தில் பயமில்லை..
பவித்ரா மற்றும் தீப்ஷிகா இரண்டு ஹீரோயின்ஸ்.. பெரிய வேலையில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப இவர்களது கேரக்டர் பயணிக்கிறது.
தலைவாசல் விஜய் மற்றும் சுப்பிரமணிய சிவா இருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
தரண் குமார் இசையில் பாடல்களை விட பின்னணி இசை சூப்பர்.. ஒரு திரில்லர் மிரட்டலுக்கான இசையை கொடுத்திருக்கிறார்..
லக்ஷ்மன் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. அழகான அப்பார்ட்மெண்ட் வீடுகளை பயங்கரமாக காட்டி பயமுறுத்தி இருக்கிறார்..
ராம் சுதர்சன் எடிட்டிங் செய்து இருக்கிறார் ஒரு திரில்லர் படத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக எடிட்டிங் செய்திருக்கிறார்..
எல் ஆர் சுந்தரபாண்டியன் இயக்கியிருக்கிறார் ஒரு விறுவிறுப்பான எதிர்பார்ப்பு மிக்க திரைக்கதையை கொடுத்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு விடை இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது முக்கியமாக பேய் பிடித்துக் கொள்கிறது என்றும் சொல்லலாம்..

