பாசமிகு அப்பா, கனிவு காட்டும் அம்மா, அண்ணன், அண்ணி என்று சின்ன குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் ரூபா குடவையூர்.ஆஸ்துமா பேஷண்டான அவர் ஒருநாள் தனது அப்பா கோபத்தில் கன்னத்தில் அறைந்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கில் தொங்கிவிடுகிறார்.ரூபா தற்கொலை செய்து கொண்டார் என்பது வெளியே தெரிந்தால் ஊரார் பலவிதமாக கதை கட்டுவார்கள் என பயந்த குடும்பத்தார், அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது தான் பிரச்சனை ஆரம்பம். தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருக்க, சடலத்தை தூக்க முயன்றவர்கள் சடலத்தில் ஏற்பட்ட திடீர் அசைவுக்கு பயந்து அலறி அடித்து வெளியே ஓடி வருகிறார்கள்.மீண்டும் சடலத்தை தூக்க இப்போது முன்பை விடவும் அதிகம் பேர் வருகிறார்கள்.…
Read MoreCategory: விமர்சனம்
சப்தம் – திரை விமர்சனம்
குன்னூர் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக தகவல் பரவ, மாணவர்கள் மத்தியில் அச்சம். அவர்கள் அச்சத்தை போக்க கல்லூரி நிர்வாகம், அமானுஷ்யங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நாயகன் ஆதியை மும்பையில் இருந்து வரவழைக்கிறது. அவரது ஆய்வில் 42 அமானுஷ்ய சக்திகள் இருப்பது உறுதியாகிறது. அதோடு அந்தக் கல்லூரியின் பெண் பேராசிரியருக்கும் அமானுஷ்ய சக்தி பாதிப்பு இருப்பதை அவர் கண்டறியும் போது அதிர்ச்சி இன்னும் அதிகரிக் கிறது.அந்த அமானுஷ்ய சக்திகளின் நோக்கம் என்ன? என்பது நெஞ்சுக்குள் ஈரம் சொட்டும் கிளைமாக்ஸ் நாயகனாக வரும் ஆதி அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் வேடத்துக்கு கன கச்சிதமாக பொருந்திப் போகிறார். லட்சுமி மேனனை ஒரு தீயசக்தி பின் தொடர்வதைக் கண்டுபிடிக்கும் இடத்தில் பதற்றம் இல்லாத அந்த நடிப்பில் அனுபவம் தெரிகிறது.நீண்ட…
Read Moreகூரன் – திரை விமர்சனம்
மனிதனோ விலங்கோ எல்லோருக்கும் உயிர் ஒன்றுதான் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கும் படம். விபத்தில் சாகடிக்கப்பட்ட தன் குட்டியின் உயிருக்கு நீதி கேட்டு நீதிமன்ற படியேறிய ஏறிய ஒரு நாயின் அதாவது தாயின் கதை இது. கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் நடந்து செல்லும் நாய்க்குட்டி தாறுமாறாக வந்த கார் மோதி இறந்து விடுகிறது. தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் தாய் நாயின் உணர்வை புரிந்து கொள்ளும் பிரபல வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாயின் புகாரை ஆரம்பத்தில் ஆட்சியை படுத்திய காவல்துறையை ஏற்க வைக்கிறார். அந்த வழக்கில் வாதிட்டு தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க போராடுகிறார். அவரது போராட்டம் வென்றதா…நாய்க்கு நீதி கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ். படத்தின் நாயகன் அந்த நாய் தான். தனது குட்டி விபத்தில் பலியானதும் காவல் நிலையம் போவது,…
Read Moreஅகத்தியா – திரை விமர்சனம்
சித்த மருத்துவத்தின் சிறப்பை ஒரு திகில் கதை வழியே நம்முள் கடத்திருக்கிறார்கள். கதை சொன்ன விதத்தில் படம் ரசிகனுக்கு புதிய அனுபவம் ஆகி விடுகிறது. அதாவது இனிய அனுபவம். சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ரூ.6 லட்சம் செலவழித்து அரண்மனை செட் போடுகிறார். செட் வேலை முடிந்த நிலையில் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட, செட்டுக்காக போட்ட பணத்தை திரும்ப எடுக்க அந்த செட்டை திகில் பங்களா வடிவில் மாற்றியமைத்து அதில் பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்கிறார்கள். கூடவே பிரச்சனையும் வந்து சேர்கிறது. அந்த அரண்மனை செட்டிற்குள் உள்ளே சென்ற காதல் ஜோடி ஒன்றில் காதலன் மாயமாகி விட, செட்டை இழுத்து மூடுகிறது அரசாங்கம்.ஏற்கனவே குணப்படுத்த முடியாத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை நினைத்து கவலையாக இருக்கும் ஜீவா…
Read Moreசுழல்-2 இணையத்தொடர் விமர்சனம்
முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தை விட இதில் காட்சி அமைப்புகள் இன்னும் மிரட்டலாக அமைந்திருப்பது சிறப்பு. முதல் பாகத்தில் சொந்த சித்தப்பாவாலேயே பாலியல் பலவந்தம் பண்ணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், துப்பாக்கியால் சுட்டு சித்தப்பாவை சாகடிக்கிறார். அதற்காக கைதாகி ஜெயிலில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்காக வாதாடுகிறார், பிரபல வழக்கறிஞர் லால். கிட்டத்தட்ட வழக்கு வெற்றி பெறும் நிலையில் நான் அவரது கடற்கரை பங்களாவில் பிணமாக கிடக்கிறார், அதுவும் தலையை தோட்டா துளைத்த நிலையில். வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் கதிரிடம் ஒப்படைக்கும் டி.ஐ.ஜி. அந்த ஏரியா காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து செயல்பட உத்தரவிடுகிறார். ஆய்வாளர் சரவணன் அது தற்கொலை தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அது கொலை என்பதற்கு ஆதாரமாக லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில்…
Read Moreட்ராகன் – திரை விமர்சனம்
ப்ளஸ் டூ வில் 96 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற ராகவன் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கே படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு கெத்து காட்டுவதில் மட்டும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார். இதனால் நான்காம் ஆண்டு கல்லூரி முடிக்கும் காலகட்டத்தில் 48 அரியஸ் வைத்து வெளியேறுகிறார். இந்தக் கல்லூரியில் அவர் சம்பாதித்தஒன்று காதல். நாயகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் காதலி அனுபமா பரமேஸ்வரன்.. கல்லூரியில் இருந்து விடைபெற்ற நேரத்தில் காதலி அவனை சந்திக்கிறாள். பெற்றோர் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாக கலக்கத்துடன் கூறுகிறாள். ஆனால் அதை சட்டை செய்யாத நாயகன் வார்த்தைகளால் காதலியை காயப்படுத்துகிறான். பதிலுக்கு காதலியும், ‘உனக்கு படிப்பும் இல்லை. வேலையும் இல்லை. வருங்கால கணவருக்கு மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க துப்பில்லாத உன்னைப் பற்றி…
Read Moreநிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -திரை விமர்சனம்
காதல் தோல்வியால் திருமணத்தை தவிர்க்கும் பிரபுவை (பவிஷ் நாராயண் ) வற்புறுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே போன பிறகுதான் அவர்கள் பார்க்கப் போன பெண் அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) என்று தெரிய வருகிறது. இருவரும் பேசும்போது தோற்றுப்போன தன் முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறான் பவிஷ். அதைக் கேட்டு முடித்ததும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு திருமண பேச்சுக்கு வரலாம் என்கிறார் பள்ளிக்கால தோழி. இதேநேரத்தில் அடுத்த கட்ட அதிர்ச்சியாக முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிகை வர, நீ போய் உன் பழைய காதலியை பார்த்து விட்டு வா என்கிறாள் தோழி. நண்பனுடன் நிலா திருமணத்திற்கு செல்லும் பிரபுவுக்கு அங்கே…
Read Moreராமம் ராகவம்- திரை விமர்சனம்
நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி. அவரது ஒரே மகன் தனராஜ் அப்பாவுக்கு நேர் எதிர். சிறு வயதில் இருந்தே சிகரெட் , சூதாட்டம், மது என்று எல்லா கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள, படிப்பு அவரிடமிருந்து விடைபெற்று போய் விடுகிறது. மகனின் இந்த செயல்களுக்காக அவனை வெறுத்தாலும் உள்ளூர மகன் திருந்தி விட மாட்டானா என்ற நப்பாசை அப்பாவுக்கு. மகனோ திருந்துவதாக இல்லை. வேலைக்குப் போகும் இடங்களிலும் போர்ஜரி செய்து மாட்டிக்கொண்டு அப்பாவுக்கு தலைவலி தர… ஒரு கட்டத்தில் அப்பாவே மகனை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். தன் எதிர்கால சந்தோஷங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இந்த அப்பாவை இனி கொன்றால் தான் ஆயிற்று என்று முடிவெடுக்கிறான் மகன். அதற்காக தனக்குத் தெரிந்த லாரி டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்கிறான்.ஆனால் மகனின் சதி திட்டம் தெரிந்த அப்பா என்ன முடிவு எடுக்கிறார்?…
Read Moreஒத்த ஓட்டு முத்தையா- திரை விமர்சனம்
ஒத்த ஓட்டு முத்தையா எப்படி மொத்த ஓட்டு முத்தையாவாக மாறுகிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கும்படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படமும் கூட. அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டும் முத்தையாவுக்கு திருமண வயதில் மூன்று தங்கைகள். மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அது தொடர்பாக விளம்பரமும் செய்கிறார். ஆனால் அவரது மூன்று தங்கைகளும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 3 இளைஞர்களை காதலிக்கிறார்கள். அதனால் அப்பா தங்கள் காதலுக்கு நிச்சயம் ஓகே சொல்ல மாட்டார் என்பதால் மூன்று இளைஞர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை நம்ப வைக்க போலி பெற்றோரை செட்டப் செய்கிறார்கள். இதே நேரம் மனைவியுடன் சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் சிங்கமுத்து ஏற்கனவே சிறையில் இருந்து…
Read Moreகாதல் என்பது பொதுவுடமை – திரை விமர்சனம்
முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணிக்கு ஒரே பெண். கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் கலங்காமல் அன்பை கொட்டி மகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் மகள் லிஜாமோல் ஜோஸ் தனது காதல் பற்றி பேச வேண்டும் என்று அம்மாவிடம் கூற… அம்மாவும் மகிழ்ந்து ‘அழைத்து வா என் மருமகனை’ என்க… மகள் அழைத்து வந்ததோ ஒரு பெண்ணை. அப்போது தான் மகளின் தன்பாலின ஈடுபாடு தெரிய வர… இப்போது அப்பா அழைத்து வரப்படுகிறார். மகளுடன் வாழ வந்த பெண்ணை பார்த்ததும் அவரும் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் பக்குவமாக பேசி பார்க்கிறார். மகள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க, அப்பாவின் எதிர்வாதம் எடுபடாமல் போகிறது. அம்மாவும் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. முடிவு என்ன தான் ஆகிறது என்பது பரபர திரைக்கதை. படத்தில் எல்லாரையும் விட…
Read More