தி ராஜாசாப்- விமர்சனம்

ஒரு ஆக்சன் திரில்லரில் ஹாரரைச் சேர்த்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மாருதி. படத்தின் கதைப்படி ஹீரோ பிரபாஸின் தாத்தாவான சஞ்சய் தத் காணாமல் போகிறார். அதனால் அவரின் பாட்டி மிகுந்த சோர்விலிருக்கிறார். பெரும் சமஸ்தானத்தின் வாரிசாக வாழ்ந்த தனது பாட்டியின் சோகத்தைப் போக்க பிரபாஸ் தாத்தாவைத் தேடிச் செல்கிறார். செல்லும் இடத்தில் நிதி அகர்வாலைச் சந்திக்கிறார்..அவர் மேல் காதல் கொள்கிறார். அடுத்த ட்விஸ்டாக தாத்தா சஞ்சய் தத் நல்லவர் இல்லை என்றும் அவர் பேயாக இருந்து தொல்லைகள் கொடுப்பதாகவும் அறிகிறார் பிரபாஸ். அதன்பின் தாத்தா பேரன் சண்டை துவங்குகிறது. தாத்தாவான சஞ்சய் தத் என்னென்ன பிரச்சனைகள் செய்தார் என்பதும், அதை பிரபாஸ் எப்படிச் சமாளித்தார் என்பதுமே படத்தின் கதை ஆஜானுபாகுவான தோற்றத்தோடு வழக்கம் போல் வசீகரிக்கிறார் பிரபாஸ். சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். மூன்று ஹீரோயின்களோடு ஆடும் நடனத்திலும்…

Read More

பராசக்தி- விமர்சனம்!

1964 கால கட்டத்தில் உச்சத்திலிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் மையக்கதை என்றாலும் சினிமாவிற்காக அந்தக் கதையை கமர்சியலாக கையாண்டுள்ளார் இயக்குநர். கதைப்படி சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் புறநானுற்றுப் படையின் முக்கியஸ்தர். அவரை ஒடுக்கும் அதிகாரியாக ரவிமோகன் வருகிறார். பர்சனலாக சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். அந்த இழப்பின் காரணமாக சிவகார்த்திகேயன் போராட்டக்களத்திலிருந்து பின் வாங்குகிறார். அதன்பின் அவரது தம்பி போராட்டத்தை கையிலெடுத்து இறந்து போகிறார். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் வெகுண்டெழுகிறார். போராட்டத்தில் வெற்றியடைந்தாரா? என்பதே பரபரப்பான பராசக்தி இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் போராளியை சிவகார்த்திகேயன் கண்முன் நிறுத்துகிறார். அவரின் அபார நடிப்பு படத்திற்கு யானை பலம். ரவிமோகன் வில்லனத்தில் புதிய மைல்கல்லை…

Read More

அனலி  – திரை விமர்சனம்

  நாயகி சிந்தியா லூர்டே தனது 10 வயது மகளுடன் தனது தோழியை சந்திக்க ஊரிலிருந்து சென்னை வருகிறார். தோழியின் வீட்டுக்கு கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் புறப்படுபவர், ஆட்டோ டிரைவர் செய்த குளறுபடியால் நகரின் ஒதுக்குப்புறத்தில் சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்யும் சக்திவாசுவின் வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அந்த கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் மகளை தொலைத்து விடுகிறார். அதோடு கையோட கொண்டு வந்த விலைமதிப்பற்ற கைப்பை ஒன்றையும் மிஸ் செய்து விடுகிறார். இப்போது அவர் வெளியே எங்கேயும் போக முடியாது. மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடிக்க வேண்டும். மகளுக்கு நிகரான அந்த கைப்பையையும் கண்டுபிடித்தாக வேண்டும். இரண்டும் அவருக்கு சாத்தியமானதா என்பதற்கு பதில் சொல்கிறது பரபரப்பான கிளைமாக்ஸ். ஹீரோயினாக ‘அனலி’ என்ற…

Read More

மார்க் – திரைவிமர்சனம்

  முதலமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சித் தலைமை அனுபவம் ஆற்றல் வாய்ந்த சீனியர் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, இறந்து போன முதலமைச்சரின் மகனோ, ‘நாளை நானே முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்’ என்கிறார், அதிரடி பிளஸ் அடாவடியாக. எதிர்த்து கேட்பவர்களின் வாயை பணத்தால் அடைக்கிறார். இதே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப் படுகிறார்கள். அவர்களை மீட்பதற்கு காவல்துறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட சுதீப் போராடுகிறார். அவரிடம் முதலமைச்சரின் கொலைக்கு ஆதாரமான வீடியோ இருக்கும் தகவல் சொல்லப்பட்டு, அதைத் தேடி கண்டுபிடிக்கும் பணியும் தரப்படுகிறது. ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி சாகச பயணம் மேற்கொள்கிறார் கிச்சா சுதீப். இந்த இரண்டு சம்பவங்கள் இடையிலான தொடர்பையும் கண்டு பிடிக்கும் கிச்சா, அதில்…

Read More

சல்லியர்கள் – திரை விமர்சனம்

  விடுதலைப் புலிகளின் மருத்துவ அணிக்குத்தான் சல்லியர்கள் என்று பெயர். போர் சமயத்தில் காயம் பட்ட வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது இந்த சல்லியர்கள். இந்தப் போரில் குண்டடி பட்டு உயிருக்கு போராடும் விடுதலை புலிகளை மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்றினர் என்பது தான் மனிதநேயத்தின் மகத்துவம் சொல்லும் வரலாறு. இப்படி உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது ஆளும் அரசின் அதிகாரப்பார்வை விழுகிறது. அவர்களை அழிக்க முயல்கிறது.அந்தத் தாக்குதல்களை மருத்துவமனை சல்லியர்கள் குழு எப்படி எதிர்கொண்டது என்பது கிளைமாக்ஸ். சிங்களப் படையை எதிர்த்து போரிடும் புலிகள் காயமடைந்தால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய போர்க்களத்தில் பதுங்குகுழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அப்படி அமைக்கப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி,ஓய்வு ஒழிச்சலின்றி அதே நேரம் கொஞ்சமும் சலிப்பின்றி…

Read More

டியர் ரதி – திரை விமர்சனம்

ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம். எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் அவருக்கே உரிய கூச்ச சுபாவம் குறுக்கே வந்து தடை பண்ணி விடும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ என்னவோ அவரை தேடி வந்த 2 காதல் கூட பிரேக் அப்பில் முடிகிறது. இப்படி இரண்டு காதல் கைவிட்டு போனதில் விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறார். பெண்களிடம் அவருக்கு இருக்கும் இப்படியான கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக அவரது அலுவலக நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு முதன் முதலாக கூச்ச சுபாவம் விலகி நட்பு பாராட்ட தோன்றுகிறது. அதனால், அந்தப் பெண்ணுடன் நட்பை தொடர விரும்புபவர், அவருடன்…

Read More

தி பெட் – திரைப்பட விமர்சனம்

நாம் தூங்க பயன்படுத்தும் ஒரு பெட் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பெட் கதை சொல்வது போல் படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் குழு வீக் எண்ட் கொண்டாட்டம் என்ற பெயரில் அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று வர திட்டமிடுகிறார்கள். .அவர்களுடன் பாலியல் தொழிலாளி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அறை எடுத்து தங்குகிறார்கள் மதுவருந்தி போதை தலைக்கேறிய நேரத்தில் சிருஷ்டி டாங்கே மீது நண்பர்கள் காமப் பார்வை வீச,நாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் காதல் பார்வை வீசுகிறார். அவரை அடைய நண்பர்கள் தவிக்க, ஸ்ரீகாந்த் யாரும் தொட முடியாதபடி அவர்களை போதையில் தூங்க போட்டு விடுகிறார். இந்நிலையில் திடீரென்று சிருஷ்டி காணாமல் போகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக… கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை இந்த…

Read More

சிறை – திரைப்பட விமர்சனம்

கொலைக் குற்றவாளியாக கருதப்படும் இளைஞன் அப்துல் ரவூப் ஐந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாகவே இருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது வழக்கம்போல வாய்தா போட்டு விடுவார்கள். இப்படி 5 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் தொடர் வாய்தாக்கள் அவரை விசாரணைக் கைதியாகவே வைத்திருக்கிறது. இந்த அப்துலுக்கும் கனவுகள் உண்டு. கண்ணான ஒரு காதலி உண்டு. ஒரு இரவில் தன் தாயை தாக்க வந்தவரை அப்துல் ஆவேசமாய் தள்ளிவிட, அவர் தலை கல்லில் நொறுங்கி உயிர் போய் விட… இந்த மோதலில் அப்துல் தாயும் மரணிக்க , இனி அவனுக்கென்று இருப்பது காதல் நிறைந்த உயிர்க் காதலி தான். காதலியின் தந்தை தான் இங்கே கொலை செய்யப்பட்டவர். கொலையாளி இந்த அப்துல் ரவூப். வழக்கம்போல விசாரணை கைதிகளை கோர்ட்டில்…

Read More

ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்

பாண்டிச்சேரியில் பெற்றோர் இன்றி அனாதையாக வாழும் அருண் விஜய், தன்னைப் போலவே யாருமின்றி அனாதையாக இருக்கும் சித்தி இத்னானியை காதலிக்கிறார். ஆனால், சித்தி இத்னானிக்கோ காதலை விட பணத்தின் மீது அதீத மோகம். காதலியை சந்தோஷப்படுத்துவதற்காக அதிக பணம் சம்பாதிக்கும் முடிவுக்கு வரும் அருண் விஜய்க்கு, பணக்கார அருண் விஜய்யின் நட்பு கிடைக்கிறது. பணக்கார அருண் விஜய்யின் பணத்தின் மீது ஆசைப்படும், சித்தி இத்னானி, பணக்கார இளைஞனின் அதே சாயலை கொண்ட தன் காதலர் அருண் விஜய் மூலம் அவரது பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம் அதிரி புதிரி ஆட்டம். இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கணிசமான வேறுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் பல இடங்களில் ரிஸ்க் எடுத்து இருக்கும் அருண் விஜய்,…

Read More

பருத்தி -திரை விமர்சனம்

குழந்தை நட்சத்திரம் திலீப்ஸ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அவரின் தோழி சுகன்யா மேல் தட்டு வகுப்பை சேர்ந்தவர். பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிப்படிப்பை படிக்கும் போது நண்பர்கள் ஆகிறார்கள். இவர்கள் நட்பு மற்றவர்கள் பார்வையில் சாதி வேற்றுமையை மையப்படுத்தி வெளிப்படுகிறது. இதே ஊரில் உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலிக்க, இளைஞனின் தந்தை அந்தப் பெண்ணை தன் வேலையாட்களுக்கு விருந்தாக்கி அவள் வாழ்க்கையை சீரழிப்பதோடு தன் மகனை இனிப்பில் விஷம் வைத்து சாகடிக்கிறார். காதலன் இறந்த சோகத்தில் காதலியும் உயிரை விடுகிறார். படத்தில் வரும் இந்த ஜோடியின் சோக முடிவே அடுத்து படம் எப்படி போகும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. துவக்கப்பள்ளியில் படிக்கும் திலிப்ஸ் சுகன்யா நட்பு, உண்மையான நட்பு மட்டுமே என்று இயக்குனர் சொல்லி இருந்தாலும்,…

Read More