அமரன் – திரை விமர்சனம்

2014 இல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதை. அதை சினிமாவுக்கான சமரசம் இன்றி அதேநேரம் இதயம் நெகிழும் விதத்தில் தந்ததற்காக படக்குழுவுக்கு முதலில் ஒரு ஹாட்ஸ் ஆப். பள்ளியில் படிக்கிற காலம் தொட்டு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவன் முகுந்த்தின் கனவு. கல்லூரி காலத்தில் அதை செயல்படுத்த முனையும் போது தான் ஒரு பக்கம் பெற்றோரின் எதிர்ப்பு. இன்னொரு பக்கம் முகுந்த் காதலிக்கும் மலையாள பெண்ணின் குடும்பம் இதற்காகவே பெண் தர மறுக்கிறது. எதிர்ப்பை சரி செய்து காதலியை ஒருவழியாக கரம் பிடிக்கும் முகுந்த், அடுத்தடுத்த பதிவு உயர்வுகளில் மேஜர் ஆகிறார். அன்பு மனைவி அழகு குழந்தை என மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் காஷ்மீர் தீவிரவாதிகளை களை எடுக்க…

Read More

பிரதர் – திரை விமர்சனம்

எளிதான தலைப்பில் வந்திருக்கும் அக்கா தம்பி பாசக் கதை. எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி. அவரது பாசமிகு அக்கா பூமிகா. அக்கா திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகள் என்று செட்டிலாகி விட… தம்பி ஜெயம் ரவியோ அனுதினமும் தனது லா பாயிண்ட்டில் பெற்றோருக்கு தலைவலி தர, ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு அதுவே நெஞ்சு வலியில் முடிய, பதறிப் போய் ஊட்டியில் இருந்து ஓடிவரும் அக்கா, தம்பியை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துப் போகிறார். அங்கே ஒரு ஆறு மாத காலம் தங்க வைத்து தம்பியை திருத்தி அனுப்பி வைப்பதாக அப்பாவுக்கு வாக்கு கொடுக்கிறார். ஆனால் போன இடத்தில் ஜெயம் ரவியின் லா பாயிண்ட் இன்னும் பிரச்சனையாகிறது. எதற்கும் எல்லாவற்றுக்கும் டைம் டேபிள் போட்டு வாழும் அந்த குடும்பத்தில் இருந்து அக்கா குடும்பம் பிரிய தம்பியே…

Read More