சென்னை, 5 டிசம்பர், 2023: இந்தியாவின் முன்னணி இன்டர்நேஷனல் K12 பள்ளிகளில் ஒன்றான ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, இன்று தனது மிகப்பெரிய நாடு தழுவிய டெக் கார்னிவல், MECHATHLON 2023 -ஐ நடத்தியது, அதில் இந்தியா முழுவதிலும் உள்ள இப்பள்ளி மாணவர்களின் புத்திசாலித்தனம், புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. புத்தாக்கம் உத்வேகத்தை சந்திக்கும் இடமாக இந்த விழா அமைந்ததால், மாணவர்கள் தங்கள் அறிவின் எல்லைகளைக் கடந்து ஆர்வத்துடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னதமான தளமாக இது மாறியது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஆர்க்கிட்ஸ் பள்ளிகளில் இந்த விழா நடத்தப்பட்டது. வகுப்புகள் பள்ளி வளாகம் 4 & 9 மணப்பாக்கம் 4 & 9 பெரும்பாக்கம் டெக் கார்னிவல் என்னும் இந்த தொழில்நுட்ப திருவிழாவானது பன்முகக் கற்றல் பயணத்தை வழங்கி, மாணவர்களின் சவால்களைத்…
Read MoreCategory: தமிழக செய்திகள்
மிக்ஜம் புயலால் பாதித்த தங்கள் குடியிருப்புவாசிகளுக்கு நிவாரண உதவி அளித்த சின்னத்திரை நடிகர் பாலா
தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.…
Read Moreமிக்ஜம் புயலின் பாதிப்புகளால் மனம் நொந்துபோய் ஆதங்கத்துடன் நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை.
Dear Media Friends Herewith sending the Statement from Director & Actor R.Parthiban Good morning friends, நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை. தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும்,இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? அதிவேக புல்லட் ரயில்,அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை…
Read Moreமிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக நடிகர் ஆனந்தராஜ் பதிவு
மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் அடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இந்த நாலு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொல்லனாத் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மிக கனமழை விடாமல் பெய்து வருவதால், சென்னையின் முக்கியமான பகுதிகளான கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, பல்லாவரம், அனகாபுத்தூர், வேளச்சேரி, அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடக்கின்றது. இதோடு மின்வெட்டும் இருப்பதால் மக்களின் அன்றாடப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றவும், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும் முழு மூச்சில் பணியாற்றும் வந்தும் கூட, பல இடங்களில் இது போன்ற பணிகள் வேகமின்றி…
Read Moreஎஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2023
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சி.கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் முன்னால் மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு அனைவருக்கும் கிடைப்பது இல்லை, நீங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் சேர்ந்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது. உங்களுக்கான வாழ்க்கையை நீங்களே வாழுங்கள், எதையும் எதிர்நோக்கி வாழ்கையில் வருந்தாதீர்கள், மகிழ்ச்சியான தருணங்களுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் சுமார் மூன்று ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றாக சந்தித்தனர். அப்போது தங்களின் பழைய நினைவுகள், கடந்த கால…
Read Moreயூடியூபர் மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த மதன் என்பவர் TOXIC MADAN 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, பப்ஜி விளையாட்டு குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளி வந்துள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக மதன் மீது அளிக்கப்பட்ட 167 புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான மதனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் மதன்…
Read Moreமகேஷ்பாபுவை இயக்கபோகும் லோகேஷ் கனகராஜ்
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்கி முடித்த பின், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறது. இதற்கிடையில், தெலுங்கில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவீஸ் என்ற பட நிறுவனம் லோகேஷ் கனகராஜை சந்தித்து தங்கள் நிறுவனத்துக்காக ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து தரும்படி, கேட்டுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக லோகேஷ் கனகராஜிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறதாம். மேலும் பிரபாஸ், ராம் சரண் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள். இப்போது விஜய் நடிக்கும் 66-வது படத்தை முடித்த பின், மகேஷ்பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக கூறப்…
Read Moreகதை எழுதியதும் – தயாரிப்பாளரான அனுபவமும்-ஏ. ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”.இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை…
Read Moreஉருமாறிய கொரோனா – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை ‘இன்சாகாக்’ குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன்…
Read Moreஒரே தொகுதியில் ஏழு முறை களம் காணும் மனிதர்!
அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.ஆனால் தான் பிறந்த மண்ணில் தொடர்ந்து ஏழு முறை தொகுதி மாறாமல் களம் காணும் ஒரே மனிதர் யார் என்றால் அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். 1991 முதல் 2021 வரை ஏழு முறை ராயபுரம் தொகுதியின் ஒரே வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் அதிமுக தலைமை இவரைத்தான் வெற்றி வேட்பாளராக களம் இறங்குகிறது. காரணம் தொகுதி மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்பது அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் ஏழு முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1991 முதல் ராயபுரம் மக்களின் குறைதீர்க்கும் மனுநீதிச்சோழனாய்…
Read More