எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர்.அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர். “என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே, ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு…
Read MoreCategory: அரசியல்
அரசியல்
மீனவர்களுக்காக கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் காசிமேடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாயமான 5 பேரையும் உயிருடன் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை சடலமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து இறந்தவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று இறுதிச் சடங்கு செய்ய தனது சொந்த பணத்தில் இருந்து தலா 10 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் அவர். உயிரோடு மீட்டு விடலாம் என்று நினைத்தால் இப்படி பார்க்க வேண்டிய சூழல் வந்து விட்டதை எண்ணி கண்கலங்கி அவர் இறந்தவர்களின்…
Read More135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..!
கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கின. சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்துவித…
Read Moreசட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயார் – டி டி வி தினகரன்
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இசக்கி சுப்பையா, அதிமுகவுடன் இணைந்தார். இதனால், கட்சிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட்காட் சாலையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு 50 அடி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. சிறந்த கூட்டணி அமைத்து போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டுவோம். அமமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் போன்றோர் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு என்பது எங்களுக்கு ஓர் அனுபவம். ஒரு சிலர்…
Read Moreநான் அப்செட் ; மா. செ. கூட்டத்திற்கு பின் ரஜினி பேட்டி – முழு விபரம்!
தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என, காட்டமாக பேட்டி அளித்தார். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் குறித்தும், கட்சி அறிவிப்பது பற்றி விவாதித்து உள்ளனர். மன்ற…
Read Moreஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் – தங்க தமிழ் செல்வன்!
அமமுகவிலிருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எம்எல்ஏக்கள் எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுள் இவரும் ஒருவர். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுடன், தங்க தமிழ்ச்செல்வனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்ட நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை நீக்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டேன், எனவே அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார். தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையக்கூடும் என்று சமூக…
Read Moreகாங்கிரஸைக் கழட்டி விட்டு விட்டு தனித்து போட்டி! – திமுக வில் கோஷம்!
காங்கிரஸூக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது.. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. தமிழ் நாட்டில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நேரு, கூட்டணி குறித்தும் காரசாரமாக கருத்து தெரிவித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும்…
Read Moreமக்களைவையை தமிழ் மொழியால தெறிக்க விட்ட புது எம்பி-க்கள்!
மக்களவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 38 உறுப்பினர்களும் தாய்மொழியான தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.. 17-ஆவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் எம்பிக்கள் உள்ளிட்டோர் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கில எழுத்துகள் வரிசைப்படி மாநிலம் வாரியாக உறுப்பினர்கள் பதவியேற்றதால், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள்…
Read Moreஅதிமுகவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடும் போட்டி !
அதிமுகவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் வரிந்துகட்டிக் கொண்டு போட்டியில் குதித்துள்ளனர். இந்த நிலையில் பாஜ, பாமக கட்சிகளும் தங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கேட்பதாலும், ஜாதிக்கு ஒரு சீட் வேண்டும் என்று முன்னோடிகள் கேட்பதாலும், அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இதனால், அதிமுக கட்சியில் எடப்பாடி – ஓபிஎஸ் இடையே கடுமையான கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்திற்கான 6…
Read Moreசர்ச்சையைக் கிளப்பிய ட்விட்-டை நீக்கிய முதல்வர் எடப்பாடியார்!
தமிழை மற்ற மாநிலங்களின் 3வது மொழியாக்க வேண்டும் என கூறி பிரதமர் மோடிக்கு போட்ட டிவிட்டை முதல்வர் நீக்கியுள்ளார். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்ளை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கல்வி கொள்கையில் ஹிந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஹிந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3 வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை பிரமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், பிற மாநிலங்களில் தமிழை 3 வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான…
Read More
