இந்திய கம்யூனிஸ்ட் கட்சிட போட்டியிடும் தொகுதிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது.  இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:- 1.பவானிசாகர் (தனி). 2.திருப்பூர் வடக்கு. 3.சிவகங்கை. 4.திருத்துறைப்பூண்டி. 5.வால்பாறை (தனி). 6.தளி

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் ம.தி. மு.க.வினரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நேர்காணல் நடத்தினர். அதன்பின்னர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வைகோ நேற்றிரவு வெளியிட்டார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:- 1. மதுராந்தகம் (தனி) – மல்லை சி.ஏ.சத்யா (ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர்). 2. சாத்தூர்-டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்). 3. பல்லடம்-க.முத்துரத்தினம் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்). 4. மதுரை தெற்கு-மு.பூமிநாதன் (மதுரை மாவட்ட செயலாளர்). 5. வாசுதேவநல்லூர் (தனி) – டாக்டர் சதன் திருமலைக்குமார் (உயர்நிலை குழு உறுப்பினர்). 6. அரியலூர்-வக்கீல் கு.சின்னப்பா (அரியலூர் மாவட்ட வக்கீல்…

Read More

தமிழ்நாடு பா.ஜ.க கட்சி உயர் மட்ட குழு ஆலோசனை-வேட்பாளர் தேர்வில் தீவிரம்

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் உயர்மட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை மந்திரியுமான கிஷன்ரெட்டி, சி.டி.ரவி. தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பா.ஜ.க. விரும்பிய 20 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி ஒதுக்கி உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய தலைமை விரைவில் வெளியிட இருக்கிறது. இதில் யாரை அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கும் உழைக்க வேண்டும். அதேபோல் மக்கள்…

Read More

பாஜகவில் இணைந்தார் காமெடி நடிகர் செந்தில்

அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகர் செந்தில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின் போது தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமையிடமான கமலாலயத்திற்கு நேற்று காலை வருகை தந்த நடிகர் செந்தில், பா.ஜ.க. மாநிலத்தலைவர் எல்.முருகன் மற்றும் அகில இந்திய பா.ஜ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை நேற்று இணைத்து கொண்டார். மாநில தலைவர் எல்.முருகன், அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார். பின்னர் மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுமக்கள் நலன் கருதி பிரதமர் கொண்டு வரும் நல்ல திட்டங்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் பிரபலமானவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழ் சினிமா உலகில் காமொடி நடிகராக பல…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுதொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறத அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுத்தாக்கலின்போது பின்பற்றுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…

Read More

தினகரன்கோவில்பட்டிக்கு தொகுதி மாறியது ஏன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமல்லாமல் இன்னொரு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக நேர்காணலின் போது அறிவித்தார். அந்த வகையில் அவர் தேனி மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும், தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கட்சிக்குள் எழுந்துகொண்டிருந்தன. இந்நிலையில்தான் நேற்று (மார்ச் 11) வெளியிடப்பட்ட அமமுகவின் இரண்டாம் கட்ட்ப் பட்டியலில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியை தினகரன் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? “கோவில்பட்டி தொகுதிக்குள் கோவில்பட்டி ஒன்றியம், கயத்தாறு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்கள் இருக்கிறது. கயத்தாறு ஒன்றியத்தில் முக்காவாசி 2008 இல் மறு சீரமைப்பின் போது கோவில்பட்டி தொகுதிக்குள் வந்துவிட்டன. கயத்தாறு ஒன்றிய சேர்மனுக்கு 16 கவுன்சிலர்கள். அதில் 10 கவுன்சிலில் அமமுகவினர் ஜெயித்துவிட்டார்கள். அதிமுக சார்பில் 2 கவுன்சிலர்கள். இந்த ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் கடம்பூர் மாணிக்கராஜா. இந்த…

Read More

பாரதிராஜாவுக்கு பதிலடி – சொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவருகிறது தணிக்கைக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசு வழங்கும் சிறுபடங்களுக்கான மானியம் ஆகிவற்றுக்கு இந்த சங்கமே அங்கீகார சான்றிதழ்கள் இன்றுவரை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, புரடியூசர் கில்டு என வேறு இரண்டு அமைப்புகள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்புகள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அதிகாரம் செலுத்த முடிவதில்லை பிற மொழி, மற்றும் மொழிமாற்று படங்களின் படத்தயாரிப்பாளர்களுக்கான அமைப்பாகவே இயங்கிவருகின்றன இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நவம்பர் 22/2020 அன்று  நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு முரளி@ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்…

Read More

அறிமுக நடிகைகளின் அட்டகாசம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவரை நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர் அது தங்களுக்கு ஒரு புரமோஷன் என்று பெருமை கொண்டனர் நடிகர்கள், இயக்குனர்கள் புதிய படங்கள் தயாரிப்பதை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியபின் எல்லா நடைமுறைகளும் மாறிப்போனது திரைப்படம் தொடங்கி படம் வெளியாவதற்குள் பல முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெறும் நாயகன் முதல் அனைத்து நடிகர்களும் இதில் பங்கேற்கும் வழக்கம் அடியோடு அழிந்துபோனது மூத்த, முன்னணி நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்வுகளுக்கு வருவதை தவிர்த்து அந்த பழக்கத்தை நிரந்தரமாக்கிவிட்டனர் அதனை தற்போது நடிக்க வரும் புதுமுக நடிகைகளும் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர் என்கின்றனர்சிறுபடத் தயாரிப்பாளர்கள் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படம் தயாராகி இரண்டு வருடங்களாக வியாபாரம் ஆகாமல் முடங்கி…

Read More

சினிமாவை கற்றுக்கொள்ள படம் தயாரித்த நடிகர்

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் ‘டிக்  டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். இவ்விழாவில் படத்தைத் தயாரித்துக் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற  ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு…

Read More

தமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும்

தமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று திமுகவின் பொருளாளர், மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆர்நீக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நாயகனாக நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்காலத்தில் பல தடைகளைக் கடந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தை பல முறை ரி-ரிலீஸ் செய்து வெளியிட்டும் ஒவ்வொரு முறையும் பல ஊர்களில் அந்த சமயத்தில் வெளியாகும் புதிய படங்களுக்குப் போட்டியாக ஓரிரு வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்திருக்கிறதுவெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதை யோசித்து கூட பார்க்க முடியாக காலகட்டத்தில் ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் உலகம் சுற்றும்…

Read More