பாரதிராஜாவுக்கு பதிலடி – சொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவருகிறது தணிக்கைக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசு வழங்கும் சிறுபடங்களுக்கான மானியம் ஆகிவற்றுக்கு இந்த சங்கமே அங்கீகார சான்றிதழ்கள் இன்றுவரை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, புரடியூசர் கில்டு என வேறு இரண்டு அமைப்புகள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்புகள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அதிகாரம் செலுத்த முடிவதில்லை பிற மொழி, மற்றும் மொழிமாற்று படங்களின் படத்தயாரிப்பாளர்களுக்கான அமைப்பாகவே இயங்கிவருகின்றன இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நவம்பர் 22/2020 அன்று  நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு முரளி@ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போட்டியாக தொடங்கப்பட்டுள்ள நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் அனைவருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது இதனை அறிந்த நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தை எச்சரிக்கும் வகையில் கீழ்கண்ட அறிக்கையை 9.3.2021 அன்று மாலை வெளியிட்டார் அதில்
மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல்  தயாரிப்பாளர்களுக்கு
சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானது.அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன்.
புது சங்கங்கள் உருவாவதென்பது கால மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டது. ஒன்று பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து கொள்கைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும் , அல்லது மற்ற சங்கங்களுடன் கலந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதை விடுத்து மற்ற சங்கங்களையும் அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, இவை சார்ந்த துறையையே மொத்தமாக நிர்மூலமாக்கிவிடும். இதற்கு சான்றாக தமிழ் திரைப்பட (TFPC) தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது.இது காலம் வரை TFPC இதற்கு இணையான இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து தயாரிப்பாளர்களுக்கு சேவையாற்றி வந்துள்ளது ,இதை இந்த புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும்.TFAPA-ல் உள்ள உறுப்பினர்கள்  பெரும்பான்மையோர் இந்த மூன்று சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர். பதவி அதிகாரம் என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் ஆனால்,சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு சேவை புரியத்தான், இதை TFPC திரும்ப உணர வேண்டும்தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு TFPC என்றுமே ஒரு தாய்ச்சங்கமாகும். சமீபத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து மிரட்டியும் நிர்வாகிகளுக்கு அவர்களின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் TFPC இன்னும் பல கூறுகளாக உடைந்து அதன் பொலிவிழக்கக் காரணமாக இந்த புதிய நிர்வாகம் இருக்கும் என்பதையும், என் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் பட்சத்தில் முதல் ஆளாக நின்று அதை எதிர்ப்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன் என கூறியுள்ளார் இந்த அறிக்கைக்கு நேரடியாக பதில்கூறாத தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு செயற்குழு உறுப்பினர் G.M. டேவிட்ராஜ் மூலம் பாரதிராஜாவுக்கு கடுமையாக, நக்கல், நையாண்டியுடன் பதில் அளித்திருக்கிறார் அதில்
எந்த அமைப்பெல்லாம் ஒற்றுமையாக செயல்படுகிறதோ அந்த அமைப்பை எல்லாம் உடைப்பது என்பதை உங்கள் லட்சியமாக கொண்டு நீங்கள் செயல்படுவதை மீண்டும் ஒருமுறை நிருபித்து அதை கடிதத்திலும் கண் பார்ம் செய்வது உங்களுக்கு மட்டுமே கைவந்த கலை புற்றீசல்கள் போல சங்கங்கள் என்று உங்கள் அறிக்கையில் உங்கள் சங்கத்தை நீங்களே புற்றீசல்கள் என்று ஒத்துக்கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
வீரம் விளைந்த மண்ணில்தான் நாங்களும் இருக்கிறோம் என்பதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தெளிவாக இருந்ததைப்போல உங்கள் அறிக்கைகள் தெளிவாக இல்லை காரணம் இந்த அறிக்கை உங்களுடையதா? இல்லை சங்கம் என்றபெயரில் உங்களை இயக்குபவர்களின் கைவண்ணமா? சந்தேகமாக இருக்கிறது தேர்தலில் அனைத்து தயாரிப்பாளர்களும் நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என்ற சங்க விதியை புறந்தள்ளி வாக்களிக்க வராமல் இருந்த நீங்கள் அறிக்கை வெளியிடுவது விந்தைதான்
பத்து பதினைந்து தயாரிப்பாளர்கள் மட்டும் வாழ்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்துவார்த்தை ஜால அறிக்கை விடும் உங்களுக்கு ஒன்று தெரியுமா தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் பெரிய மற்றும் சிறு முதலீட்டு படத்தயாரிப்பாளர்கள் ஏறக்குறைய 4000 ம் பேருக்காக போராடுவது தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நோக்கம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
பத்து பதினைந்து பேரின் சுயநலம் பெரியதா 400 பேரின் வாழ்வாதாரம் பெரியதாயோ சியுங்கள் பேப்பர் விளம்பர கட்டணம் உயர்வு என்றதும் கட்டணத்தை குறைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சு வார்தை நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த போது நீங்கள் வேறு வழி சென்று அதற்கு இடையூறு செய்தீர்களே எதற்கு? தயாரிப்பாளர்கள் VPF கட்டணம் செலுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது கியூப், யூ எப்ஓ நிறுவனங்களிடம் தன்னிச்சையாக திரைமறைவு ஒப்பந்தம் செய்து ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தினீர்களே எதற்கு? நீங்கள் உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் புற்றீசல் சங்கத்தின் சாதனை இது தானா? தயாரிப்பாளர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிர்வாகத்திற்கு எதிராக நியமிக்கப்பட்ட தலைவரான நீங்கள் வேதம் ஓதுவது சாத்தானை குறிக்கும் செயலாகும்
எளிமையே வலிமை என்று செயல்படும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமானதாய் சங்கத்தை உதாசீனப்படுத்தும் இழிசொற்களை பயன்படுத்த எச்சரிக்கை விடுவது கண்டனத்திற்குரியது முதல் போட்டு படம் தயாரிக்க முதல் தொழிலாளியாக களத்தில் இறங்கி பவரே முதலாளி என்று அழைக்கப்படுகிறார் அந்த தயாரிப்பாளர்களை பிரித்தாள நினைக்கும் உங்களையும் ஒரு தயாரிப்பாளர்தான் இயக்குனராக்கினர் என்பதை மறந்துவிடாதீர்கள்
“எந்நன்றி கொன்றார்க்கும் உயர்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்று அய்யன் வள்ளுவன்குறளையும் மறக்காதீர்கள். மூத்த தயாரிப்பாளரான நீங்கள் இளைய தயாரிப்பாளர்களுக்கு ஒற்றுமையே உயர்வு என்று நல்வழிநடத்திட வேண்டுமே தவிர தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடாது யாராவது அழைத்துச் சென்றாலும் அதற்கு உடன்படக்கூடாது சிறு வயதில் படித்த நான்கு மாடுகள் ஒரு சிங்கம் கதை உங்களுக்கு தெரிந்தது தான் சிங்கத்திற்கு இரையாகாமல் இருக்க ஒற்றுமையை உயர்த்திப்பிடிப்பது அவசியம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உயர்ந்தோங்க உழைப்பவர்களை குறைகூறுவதை விட்டு விட்டு சினிமா சிதற நீங்கள் செய்த செயல்களை சிந்தித்து பாருங்கள்” ஒரு முறை பேச இருமுறை யோசி என்பார்கள் பாமரனுக்கும் படம் பண்ணிய நீங்கள் இனியாவது யோசித்து செயல்படுகள் என குறிப்பிட்டுள்ளார் டேவிட்ராஜ்

Related posts

Leave a Comment

fifteen + 9 =