அறிமுக நடிகைகளின் அட்டகாசம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவரை நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர் அது தங்களுக்கு ஒரு புரமோஷன் என்று பெருமை கொண்டனர் நடிகர்கள், இயக்குனர்கள் புதிய படங்கள் தயாரிப்பதை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியபின் எல்லா நடைமுறைகளும் மாறிப்போனது திரைப்படம் தொடங்கி படம் வெளியாவதற்குள் பல முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெறும் நாயகன் முதல் அனைத்து நடிகர்களும் இதில் பங்கேற்கும் வழக்கம் அடியோடு அழிந்துபோனது மூத்த, முன்னணி நடிகர் நடிகைகள் படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்வுகளுக்கு வருவதை தவிர்த்து அந்த பழக்கத்தை நிரந்தரமாக்கிவிட்டனர் அதனை தற்போது நடிக்க வரும் புதுமுக நடிகைகளும் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர் என்கின்றனர்சிறுபடத் தயாரிப்பாளர்கள்

இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படம் தயாராகி இரண்டு வருடங்களாக வியாபாரம் ஆகாமல் முடங்கி இருந்த இப்படத்தை தயாரிப்பாளரே நாளை(12.03.2021)  நேரடியாக தமிழகம்முழுமையும்

வெளியிடுகிறார் இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தீதும் நன்றும்’ படத்தில் நடித்த பிறகுதான் அபர்ணாவுக்கு ‘சூரரைப் போற்று’ பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் அபர்ணா ‘தீதும் நன்றும்’ படத்தின் பிரமோஷனுக்கு அழைத்த போது வரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.சில தினங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்த அவரிடம் ஒரு மணி நேரம் ஒதுக்கி தீதும் நன்றும் பட புரமோஷனுக்காக பேட்டி தர கேட்டிருக்கிறார்கள். அதற்கும் அபர்ணா மறுத்திருக்கிறார். அபர்ணா வரவில்லை என்றால் நானும் வரவில்லை என லிஜோமோளும் கழண்டு கொண்டாராம்.

இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய இயக்குனர்

  ராசு ரஞ்சித் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார். எங்கள் படத்துக்கு ஒப்பந்தமான போது அவர்கள் இருவரும் சிறிய நடிகைகள். இப்போது பெரிய நடிகைகள் ஆகிவிட்டார்கள். அதனால் வர மறுக்கிறார்கள்… என்று வருத்தப்பட்டார் அவர்.இதுபோன்று படத்தின் புரமோஷனுக்கு வர தயங்கும் நடிகைகள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல காலமாகவே தயாரிப்பாளர்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது இருந்த
போதிலும் இது போன்று அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் நடிகைகள் மீது சங்கங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கின்றனர் தயாரிப்பாளர்கள் பதவிக்கும், பஞ்சாயத்து செய்வதற்கும் இங்கு புதிது புதிகாகசங்கங்கள் இருந்தும் இப்படி தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்

Related posts

Leave a Comment