சாலா விமர்சனம் 3.5/5.. BAR WAR

 கதை…

நாயகன் – தீரன்.. நாயகி – ரேஷ்மா..
குடி குடி என்பதுதான் நாயகனின் தாரக மந்திரம்.. குடிக்காதே குடிக்காதே நன்றாக படி என்பது நாயகியின் தந்திரம்..

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்… 23 வருடங்களாக பூட்டிக் கிடக்கும் பார்வதி ஒயின்சுக்கு இரண்டு கோஷ்டிகள் அடித்துக் அடித்துக் கொல்கின்றனர்.. இவர்களின் சண்டையை ஓரமாக நின்று மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம்.

குடியை ஆதரிக்கும் நாயகன்.. குடியை எதிர்க்கும் நாயகி ஒரு கட்டத்தில் நண்பர்களாகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? யார் திருந்தினார்கள்? என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை..

நடிகர்கள்…

ஆறடி உயரம் அதிர வைக்கும் கம்பீரம் நீண்ட தலை முடி நீண்ட தாடி என வில்லன் தோற்றத்தில் நாயகனாக மிரட்டி இருக்கிறார் தீரன்.. ஒரு பார் சண்டைக் காட்சியில் 30 அடியாள்களை அடிப்பதற்காகவே 8 மாதங்கள் பயிற்சி செய்து உடலை மாற்றிக் கொண்டாராம் இந்த அதிரடி நாயகன் தீரன்.. இதற்காகவே அவருக்கு பெரிய பூங்கத்து கொடுத்து பாராட்டலாம்.. நல்லவேளை இவருக்கு ரொமான்ஸ் காட்சிகள் வைக்கவில்லை அதனால் தப்பித்துக் கொண்டார்.

ரேஷ்மா வெங்கடேஷ் இதில் குடியை எதிர்க்கும் குடும்பமான பாங்கான பெண்ணாக நடித்திருக்கிறார்.. சமூகப் பொறுப்புள்ள ஆசிரியராக தன் பொறுப்பை கேரக்டராக உணர்த்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீநாத் காமெடியில் கலக்கி இருக்கிறார்.. மாமுலான போலீசாக நடித்து கடைசியில் நேர்மையாக மாறியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம்..

ஹீரோவுக்கு இணையான கேரக்டராக அருள்தாஸ் அசத்தியிருக்கிறார்.. சாலாவை எடுத்து வளர்த்து பெரிய ஆளாக்கி அவருக்கு உறுதுணையாக இருக்கும் கேரக்டரில் உயர்ந்து நிற்கிறார்..

சார்லஸ் வினோஸ் வழக்கம் போல தன் அனுபவ நடிப்பில் கவர்ந்திருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வைரபாலன் கலை இயக்கத்தில் ஒயின் ஷாப் காட்சிகள் மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும்..

ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.. டீசல் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது..

சாலமன் என்ற கேரக்டரை சுருக்கி சாலவாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் மணிப்பால்.. ஆனால் படத்தின் தலைப்புதான் ஏதோ ஹிந்தி பட பெயர் போல் இருக்கிறது.. அதை மாற்றி தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயரை வைத்திருக்கலாம்.. படத்தின் வசனங்கள் பாராட்டுக்குரியது முக்கியமாக டாஸ்மாக் எதிர்க்கும் வசனங்கள் சூப்பர்..

30 வருடங்களுக்கு முன்பு 5 கருத்தரிப்பு மையங்கள் மட்டுமே இருந்தன.. ஆனால் இன்று குடி குடித்து இந்த சமூகம் சீரழிந்து கிடப்பதால் தெருவுக்கு தெருவ) கருத்தரிப்பு மையங்கள் வளர்ந்திருப்பதை சுட்டி காட்டி இருக்கிறார் இயக்குனர்..

நாம் சாதாரணமாக நினைக்கும் ஒயின்ஸ் மற்றும் பார்களுக்கு பின்னால் பெரிய அரசியல் நடப்பதையும் இதன் மூலம் சாராய வியாபாரிகள் வளர்ந்து நிற்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார்..

பீர்களை தேடிச் செல்லும் பள்ளி மாணவர்கள்.. மதுவை எதிர்க்கும் பள்ளி குழந்தைகள் என இரு மாணவ சமுதாய வேறுபாட்டையும் இயக்குனர் காட்டி இருப்பது புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..

Related posts

Leave a Comment