கதை…
தமிழில் பாட்டி என்ற சொல்.. ஆங்கிலத்தில் கிராண்ட் மதர்.. அது சுருக்கமாக கிரானி..
நாக ஆனந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களின் மாற்று திறனாளி குழந்தைகளுடன் ஒரு பங்களா வீட்டுக்கு குடியேறுகின்றனர்.. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்து அதில் ஆர்வம் வைத்து விவசாயம் செய்து குடும்பத்தை வழி நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அந்த வீட்டில் வடிவுக்கரசி பாட்டி தவறுதலாக வந்து விடுகிறார்.. அவர் வந்த பிறகு தான் அந்த வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது..
குழந்தைகளையும் கணவன் மனைவியும் கொல்ல முயல்கிறார்.. அவர்கள் இதயத்தை எடுக்கிறார்.. இவரின் நோக்கம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்…
வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த்நாக்
இந்த வயதிலும் கதையின் நாயகியாக வடிவக்கரசி.. இவரின் பெயர் டைட்டில் கார்டில் வரும்போது நடிப்புக்கு அரசி என்ற பெயருடன் வருகிறது.. அதற்கு ஏற்ப அவரும் தன் முழு திறமையை பேசாத கேரக்டரில் கூட பேச வைத்திருக்கிறார்..
ஸ்மார்ட் ஆக வரும் ஆனந்த் நாக்.. அவரின் முடிவு பரிதாபம்.. அவரை ஒரு ஆக்ஷன் பைட் போட வைத்திருக்கலாம்..
போலீசாக திலீபன் மற்றும் சிங்கம் புலி.. இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம்.. இதில் திலீபன் கம்பீரம் என்றால் சிங்கம் புலி காமெடி போலீஸ்..
கஜராஜா கேரக்டர் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என நம்பி எதிர்பார்த்து இருந்தால் கேரக்டர் பெரிய வலுவில்லை..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவு : மணிகண்டன்
இசை : செல்லையா பாண்டியன்
தயாரிப்பு : விஜயாமேரி யுனிவர்சல்
இயக்கம் : விஜயகுமாரன்
இசையும் ஒளிப்பதிவும் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.. அதுபோல் கலை இயக்குனர் கைவண்ணம் பாராட்டுகுரியது.. அந்த சூப்பர் பங்களா எங்கிருக்கிறது தெரியவில்லை.. அதில் ஏதாவது ஒன்று திருகினால் கதவுகள் திறக்கும் மாயஜால வித்தைகள் பார்ப்பதற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது..
விஜயகுமாரன் என்பவர் இயக்கியிருக்கிறார்.. எப்போதும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற பேராசைகாரர்களின் கதை தான்.. இந்த படத்தின் ஒன்லைன்..
அதற்கு பலமான விஷயங்களை புகுத்தி வித்தியாசமான முறையில் கதை சொல்லி இருக்கிறார்.. ஆனால் வடிவுக்கரசி எல்லாரையும் போட்டு அடிப்பது திடீரென பெரிய உருவமாக மாறுவது நம்பும்படியாக இல்லை..

