அறிவான் – விமர்சனம்…

கதை…

நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் ஆனந்த் நாக்.. நேர்மையாக இருப்பதால் இவருக்கு அடிக்கடி பணி இடமாற்றம் கிடைக்கிறது.. இப்படியான இவரது போலீஸ் வாழ்க்கையில் ஒரு பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அதைப்பற்றி விசாரித்து ஒருவரை கைது செய்து விசாரிக்கும் போது அவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்..

இப்படியான விசாரணை சென்று கொண்டிருக்க எந்த துப்பும் கிடைக்காமல் அவதிப்படுகிறார் நாயகன்..

நாயகனின் நிலை அறிந்து அவருக்கு உதவுகிறார் நாயகி ஜனனி.. அதன் பிறகு என்ன நடந்தது.? கொலைக்கான காரணம் என்ன.? கொலையாளி யார்.? துப்பு கிடைத்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை.


நடிகர்கள்…

கதாநாயகனாக காவலராக ஆனந்த நாக் அசத்தல்.. கேரக்டருக்கு பக்காவாக பொருத்தியிருக்கிறார்.. ஆனால் அடிக்கடி மற்றொரு போலீசை கிண்டல் அடிப்பது தேவையற்றது..

நாயகி ஜனனி குணசீலன் குற்றவியல் நிபுணர்.. வெறுமனே வந்து போகும் ஹீரோயின் இல்லாமல் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பது சிறப்பு..

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர் ஆகியோரின் பங்களிப்பு உண்டு..


தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜி.. – ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் காட்சிகளுக்கு கூடுதல் சிறப்பு..

கார்த்திக். ஈ.ஆர்.ஏ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் பெறுகின்றன..

சத்யமூர்த்தி.ஆர்.. படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாமோ என்று கேட்க தோன்றுகிறது.?

இயக்குநர் எஸ்.அருண் பிரசாத்.. – தொடர் கொலைகள்.. கொலையாளி யார்.? போலீஸ் விசாரணை என வழக்கமான கதையாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்டி திரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

கொலையாளியை கண்டறிந்த பிறகு அதற்கான பின்னணியில் அதற்கான சோசியல் மெசேஜும் கவனம் பெறுகின்றன.. ஒரு சஸ்பெண்ஸ் திரில்லருக்கான கதையை கொடுத்திருப்பதில் அருண் பிரசாத் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.

Related posts

Leave a Comment