கதை…
ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.. அது பற்றிய விசாரணை இறங்குகிறார் போலீஸ் சமுத்திரக்கனி.. தடயம் எதுவும் பெரிதாக கிடைக்காத சூழ்நிலையில் விசாரணையில் தடுமாறுகிறார் சமுத்திரக்கனி.
இந்த சூழ்நிலையில் ஒரு தனிப்படையை ஷிவதா தலைமையில் அமைகிறது காவல்துறை.. சமுத்திரக்கனியின் விசாரணை அறிந்து கொண்ட ஷிவதா அவரையும் குழுவில் சேர்த்து கொள்கிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா.? கொலை நோக்கம் என்ன.? எத்தனை கொலைகள் நடைபெற்றன.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
வழக்கமான சமுத்திரகனியாக அல்லாமல் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. கொலைக்கான காரணம் அதற்கான தடயம் ஆகிய விசாரணையில் சபாஷ்..
அழகிய கண்களாலும்.. திறமையான நடிப்பாலும் ஈர்த்து விடுகிறார் ஷிவதா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் ஷிவதா
புஷ்பா’ பட புகழ் ராஜ் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்..
காவல்துறை அதிகாரியாக மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன் ஆகியோரின் கேரக்டர்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
1990களில் நடந்த கதைகளம்.. கே.கே-வின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் இசை, தினேஷ் குமாரின் படத்தொகுப்பு ஆகியோரின் பணி சிறப்பு.. முக்கியமாக கலை இயக்குனர் பணி பாராட்டுகுறியது.. மணிகண்டன் சந்திரசேகரின் கலைப் பணிகளை செய்து இருக்கிறார்..
நவீன் குமார் பழனிவேல் என்பவர் இயக்கியிருக்கிறார்.. விறுவிறுப்பான திரில்லர் திரைக்கதை அமைத்து பல ட்விஸ்ட் சீன்களை இணைத்து இந்த தடயம் வெப் தொடரை சிறப்பாக்கி இருக்கிறார்..
ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது… ஆக ஒரு திரில்லர் அனுபவத்தை அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நவீன் குமார்..

—
