“போஸ்ட் கார்டு”(indipendent film)!!

பில்லா பாண்டி, குலசாமி, கிளாஸ்மேட்ஸ் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குனரும் நடிகருமான குட்டி புலி சரண சக்தி அவர்களின் இயக்கத்தில்
சக்தி டாக்கீஸ் ப்ரொடெக்ஷனில் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ குலசாமி’ அயலி, போன்ற 40க்கும் மேற்பட்ட பல்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த… நடிகர் Mp முத்துப்பாண்டி இந்தப் படத்தில்
கதையின் நாயகனாக நடிக்க.. மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில்
பேராசிரியர் ராமசீனிவாசன் அவர்கள் ரிஷி மற்றும் பலர் நடிப்பில் இந்த இன்டிபென்டென்ட் திரைப்படமான போஸ்ட் கார்டு உருவாகியுள்ளது.
இயக்குனர்: சரவண சக்தி : இணை இயக்குனர்கள்
Mp முத்துப்பாண்டி
சங்கர பாண்டி
அசோசியேட் இயக்குனர்: கார்த்திக்
ஒளிப்பதிவு: MRM ஜெய் சுரேஷ் மற்றும்
மகேஷ் தியாகு.
இசை: பிரித்திவி
பாடலாசிரியர்: சீர்காழி சிற்பி
பாடல் பாடியவர்: ரிக்ஷிதா ஜவகர்.
எடிட்டர்: ராஜவர்மன்
இந்த திரைப்படம் நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதார போராட்டங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தின் கதை களத்தில் உள்ள , இடங்கள் இசை’ பாடல்கள்’ இயல்பான மனிதர்கள் என அனைவரும் நம் நெஞ்சில் பசுமரத்து ஆணி போல் நம் நெஞ்சத்தில் பதிகின்றனர். இந்தப் படம் இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தியின் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை கட்டமைப்புகள் போன்ற அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்துமே போராட்டமாக அமைந்துள்ளது என்பதை ஆணித்தரமாக எடுத்து கதைக்களமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சரவண சக்தி.
இதில் கதையின் நாயகனாக நடித்த எம்பி முத்து பாண்டி அவர்களின் நடிப்பினை பற்றி சொல்லியே ஆக வேண்டும்…


தனது மனைவியின் உயிரை காப்பாற்ற துடிக்கும் துடிப்பாக இருக்கட்டும் … மனைவியின் இறப்பினை தாங்காத முடியாத வலியாகட்டும்..
தனது தாயில்லா பிள்ளைகளை வளர்க்க போராடும் தந்தையாக இருக்கட்டும்..
தனது மகள் பயத்தில் காலைக்கடனை முடிக்காமல் கூறும் வார்த்தைகளைக் கேட்டு மனம் வருந்துவதாகட்டும்.. அந்தக் காட்டையும் மக்களையும் நேசிக்கும் பாங்கான… முகமாகட்டும்… பஞ்சாயத்து தலைவரிடம் ஏமாந்து போவதை அறியாமல் பணம் கொடுத்து ஏமாந்து வருவதாகட்டும்… தனது காடு தனது வீடு போல… என்பதை வெளிக்கொணரும் வீரமாகட்டும் அனைத்திலும் நடிப்பில் முற்றிலும் மாறுபட்டு எதார்த்தத்தில் நம் நெஞ்சங்களில் கரைந்து மிரட்ச்சியூட்டுகிறார் நடிகர் எம்பி முத்துப்பாண்டி.
இதுவரை அவரது திரைத்துறை பயண நடிப்பில் கடந்து வந்த அத்தனை நடிப்பையும் சேர்த்து பார்த்தால் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பதை நம்மால் உணர முடிகிறது. இனிமேல் இவரை கதையின் நாயகனாக நாம் தொடர்ந்து காண்போம் என்று உறுதியக கூறலாம்…இவரை கூறும் அதே வேளையில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் துளசி கதாபாத்திரத்தை ஏற்ற பவித்ரா நடிப்பும் வில்லனாக வரும் நடிகர் ரிஷி யின் நடிப்பும்.. ஹோட்டல் ஓனராக வரும் நடிகர் அமிர்தலிங்கம் அவர்களின் நடிப்பும் பிரதமர் மோடியாக வரும் வியாஸ் குமார் அவர்களின் நடிப்பும் மற்றும் இதில் பங்கெடுத்த அனைவருமே எதார்த்த நடிப்பின் உச்சங்கள்… மொத்தத்தில் ஒரு போஸ்ட் கார்டு மூலமாக ஒட்டுமொத்த கிராமமும் எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்பதை எதார்த்த மீறாமல் எடுத்துக்காட்டிய குட்டிப்புலி சரவண சக்திக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவிக்கலாம்!! இந்தப் படைப்பிற்கு பெற்றிருக்கின்ற 32 சர்வதேச விருதுகள் மட்டுமல்ல…இன்னும் பல விருதுகள் கிடைக்கும் என்பது நிச்சயம்.
மொத்தத்தில் நமக்கு புதுமையான ஒரு மலை பயணத்தை கொடுத்த இந்த போஸ்ட் கார்டு போஸ்ட் கார்டு அல்ல இது ஒரு-கோல்ட் கார்டு. காணத்தவறாதீர்கள்.L

Related posts

Leave a Comment