வெஞ்சென்ஸ் – விமர்சனம்

ஏசி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்க, ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி நடித்துள்ள பரபரப்பான அரசியல் படம் ‘வெஞ்சென்ஸ்’.

கதை…

சிறு வயது முதலே தன் பெயர் எப்போது முதன்மையாக இருக்க வேண்டும் தன்னைப் பற்றி பலரும் புகழ வேண்டும் பேச வேண்டும் என விரும்புபவர் அபர்ணதி..

எனவே நன்றாக படித்து மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார்.. அதன் பின்னர் அடுத்தடுத்து படித்து பெரிய அளவில் உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வருகிறார்.

இவரின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் எப்போதும் இவரது பெயர் பல செய்திகளில் வருகிறது.. அரசியல்வாதிகளை இவரை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்..

இவர் வளர்ந்து வருவதால் அரசியல் எதிரிகள் உருவாகுகின்றனர்.. இதனால் அடுத்தது என்ன நடந்தது.? அரசியல்வாதிகளை எப்படி இந்த கலெக்டர் சமாளித்தார் என்பது தான் மீதிக்கதை..

நடிகர்கள்…

அபர்ணதி, காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர்.

‘ஜெயில்’, ‘தேன்’, ‘உடன்பால்’, ‘டீமன்’, ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களில் நடித்துள்ள அபர்ணதி.. இந்தப் பட கதை நாயகி.. சில ஆண்டுகளுக்கு முன் விஜயசாந்தி நடித்த முதன்மை கதாபாத்திரம் போல அசத்தலான கேரக்டரில் அசத்தி இருக்கிறார் அபர்ணதி..

நாட்டில் எது நடந்தாலும் தன்னுடைய பெயர் புகழ் அனைத்து முதன்மையாக இருக்க வேண்டும் என இவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும்.. இப்படி கூட செய்யலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்..

காளி வெங்கட் கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..

ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் மெரட்டலான அரசியல்வாதிகளாக அசத்தியுள்ளனர்.. கலெக்டர் அபர்ணதியை கண்டு மிரளும் அரசியல்வாதிகளாகவும் அதே சமயம் வில்லத்தனத்திலும் வித்தியாசமான நடிப்பை காட்டி உள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கார்த்திக் ராஜா இசை அமைக்க, அருண் ராஜ் பின்னணி இசை அமைத்துள்ளார். இம்ரான் எடிட்டிங் செய்ய, வைரபாலன் அரங்கம் அமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராகுல் அசோக் இயக்கி உள்ளார்.. தமிழகத்தில் பல அரசியல் படங்கள் வந்தாலும் ஆட்சியர் கதாபாத்திரத்தை முன்வைத்து இப்படி ஒரு படம் வந்தது இல்லை என்னும் அளவுக்கு பழி வாங்கும் திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்..

Related posts

Leave a Comment