கதை...
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய் நாயகி மீனாட்சியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. இருவரும் காதலிக்க அவர்களின் திருமணம் சுபமாக முடிகிறது.. இதனையடுத்து தேன் நிலவுக்கு கொடைக்கானல் செல்கின்றனர்.. அங்கு கருடா ராம் நடத்தும் ரிசார்டில் தங்குகின்றனர்.. அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உருவாகிறது..
ஒரு பக்கம் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் மீனாட்சி அப்பா அமைச்சர் அஜய். மறுபக்கம் நண்பரும் இவரை கட்டிக்க ஆசைப்படுகிறார்.. இப்படியான சூழ்நிலையில் மீனாட்சி என்ன செய்தார்.? ஜெய்யுடன் மீண்டும் இணைந்தாரா.? இவர்களுக்கு பிரச்சனை எப்படி உருவானது.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
கிட்டத்தட்ட விஜய்யின் ரசிகராகவே சில இடங்களில் உருவெடுத்து இருக்கிறார் ஜெய்.. சமீபத்தில் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்து இருந்தார். அதன் பிரதிபலிப்பு என்னவோ..??
ஐடி கம்பெனி துள்ளல் இளைஞராக ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார் ஜெய்.. காதல் செண்டிமெண்ட் ரொமான்ஸ் என மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன்.. நண்பர் மீது வெறுப்பு.. ஜெய்யுடன் காதல்.. அப்பாவுடன் கோபம்… என கவர்ந்து விடுகிறார்..
யோகி பாபுவின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது.. இவரும் ஆதித்யா கதிரும் வரும் காட்சியில் துப்பாக்கிக்கு பதிலாக செல்போனை கொடுத்துவிட்டு துப்பாக்கியா நினைச்சி வச்சுக்கோ என கலாய்த்து இருப்பார்..
நிறைய காட்சிகளில் விஜய்யின் ரெஃபரன்ஸ் சீன்கள் இருக்கிறது..
கருடா ராம் மற்றும் அஜய் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டல்..
இவர்களுடன் சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
தொழில்நுட்ப குழு…
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் அமைந்துள்ளது.. கொடைக்கானல் ட்ரிப் அடித்த ஃபீலிங் வருகிறது..
க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.. பாடல்களும் பின்னணி இசையும் கை கொடுத்துள்ளது
பாபு விஜய் என்பவர் இயக்கியிருக்கிறார், இவர் முருகதாஸ் இடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.. காதல் கதையாக தொடங்கி த்ரில்லர் க்ரைம் ஆக மாற்றி இருக்கிறார்.. தம்பதிகளின் ரகசியங்கள் இணையம் மூலம் எப்படி லீக் ஆகிறது.. நாம் எப்படி எச்சரிக்கையாக தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் எனவும் மெசேஜ் கொடுத்திருக்கிறார்..
Sattendru Maarudhu Vaanilai Movie review
