டைட்டானிக் – விமர்சனம்…

கதை…

கலையரசன் – காளி வெங்கட் – ராகவ் விஜய் மூவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள்.. இவர்கள் மூவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை.. ஒருவர் திருமணத்திற்காக பயணிக்கிறார்.. ஒருவர் பிரிந்து சென்ற மனைவியின் வீட்டுக்கு செல்கிறார் ஒருவர் விலகிச் சென்ற காதலியை தேடிச் செல்கிறார்..

ஏதோ ஒரு காரணத்தினால் இவர்கள் மூவரின் காதல் கதையும் பிரச்சனையில் இருக்கிறது.. டைட்டானிக் கப்பல் போல காதல் மூழ்கி கிடக்கிறது.. அதன் பிறகு என்ன ஆனது.? இவர்கள் காதலில் வென்றார்களா என்பது தான் மீதிக்கதை..

நடிகர்கள்…

ஒரே ரயிலில் பயணித்து காதல் கதையால் நண்பர்கள் ஆகிறார்கள் கலையரசன் – காளி வெங்கட் – ராகவ் விஜய்.. ஒவ்வொருவரும் அவரவர் காதல் கதையில் அதை சொல்லும் விதத்தில் நடிப்பில் கவர்கிறார்கள்..

தனது அப்பாவித்தனமான நடிப்பில் கவர்கிறார் கயல் ஆனந்தி.. பள்ளி கல்லூரி என இரண்டிலும் கவர்ந்து விடுகிறார்.. ஆஸ்னா சாவேரி தன்னுடைய சுறுசுறுப்பான நடிப்பில் இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்..

மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமார், சிறப்பு தோற்றத்தில் பாலாஜி மோகன், காயத்ரி ஆகியோரும் கேரக்டரில் ரொம்ப பொருத்தம்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நிவாஸ் கே பிரசன்னா இசையில் மனதை வருடும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.. ஒளிப்பதிவாளர் பல்லு கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கி ரசிக்க வைக்கிறார்..

பள்ளி காதல் – கல்லூரி காதல் – அலுவலக காதல் என அனைத்தையும் கலந்து ஒரு கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஜானகிராமன்… காதலில் உள்ள புரிதல் அதில் உள்ள சிக்கல் என இரண்டையும் அலசி இருக்கிறார்..

Related posts

Leave a Comment