இருசக்கர வாகன பேரணிகளுக்கு தடை

தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தேர்தல் பரப்புரையில் இருசக்கர வாகனத்தில் பேரணி செல்ல தடை விதித்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. சில இடங்களில் பைக்கில் பேரணியாக சென்றும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் பரப்புரையில் பைக் பேரணி என்ற பெயரில் மக்களை அச்சுறுத்துவதாக புகார் வந்துள்ளது. அதனால், பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருசக்கர வாகன பேரணிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக இருந்த தடையை, தற்போது 72 மணி நேரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளுக்கும் பொருந்தும்.

இதுகுறித்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் (https://eci.gov.in-) உள்ளன என தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment