‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘செவப்பி”

நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் ‘செவப்பி’ என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார். 1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள்…

Read More

தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதிக்கும் பாபி பாலச்சந்திரனின் ‘பி டி ஜி யுனிவர்சல்’

  உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது BTG யுனிவர்சல் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் தமிழ் திகில் திரைப்படமான ‘டிமான்டி காலனி 2’ உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது தொடர்பாக பாபி பாலச்சந்திரன் பேசுகையில், ”டிமான்டி காலனி 2 இந்த தசாப்தத்தில் மிகவும் விரும்பப்படும் திகில் படமாக இருக்கும்…

Read More

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது ‘புரொடக்ஷன் நம்பர் 2’ ஃபேண்டஸி கதையான ‘சிரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் ‘பதினெட்டாம் படி’ மற்றும் ‘வாலாட்டி’ போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற அக்ஷய் ராதாகிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்டிஃபைட் கமர்ஷியல் பைலட்டான நடிகை பிரார்த்தனா சாப்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, ‘போர் தோழில்’ புகழ் லிஷா சின்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினரின் சரியான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இப்படத்தை எழுதி இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார். மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான…

Read More

கே ஜி எப் பில் கோலாகலமாக துவங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை

  இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 23.12.23 KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக துவங்கியது . வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சென்னை, மதுரை கோவை என்று பல ஊர்களில் நடைபெற்று வந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இந்த வருடம் கே ஜி எப் மற்றும் ஓசூரிலும் , சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக ஓசூரில் துவங்கியது. புத்தர் வாழ்த்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்புறை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது கே ஜி எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து இந்த மக்களோடு…

Read More

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்’. இந்தத் திரைப்படத்தில் அவருடன் ‘ஜெயிலர்’ ஹர்ஷத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.…

Read More

”நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் தடுக்க நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில்  இயக்குநர் பா.ரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.   படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது,   இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும்…

Read More

”இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்” -சிக்லெட்ஸ் பட இயக்குநர்

  ‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்…

Read More

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

கிறிஸ்துமஸ் தினத்தின் முன்னிரவு நேரத்தில் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் இடையே மெல்லிய புரிதல் ஏற்படுகிறது. அந்தப் புரிதலைத் தொடர்ந்து நடக்கும் சம்பவஙகள் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் எப்படி தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது, என்பதை த்ரில்லும் மர்மமும் கலந்து பேசியிருக்கும் திரைப்படமே “மெரி கிறிஸ்துமஸ்”. ஆல்பர்ட் என்கின்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.  அவருடைய திரைப்பயண வரலாற்றில் இப்படி ஒரு கதாபாத்திரம் அவர் செய்ததாக நினைவில்லை.  புதிரான மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம். தன் பாக்கெட்டில் எப்பொழுதும் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் காட்டி, தன் காதலியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தருணம் அலாதியானது.  அதுபோல் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு சந்தித்த மரியாவாகிய கத்ரீனா கைஃப் பேராபத்தில் சிக்கிக் கொள்ளும் போது, தன்னிலை மறந்து போய் உதவ முன்வந்து, பின்னர் தடுமாறி பின் தங்கும் இடத்தில்…

Read More

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகியிருக்கும் ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்

மும்பை டிசம்பர் 24 2023 – இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) – ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமைக்குரிய உரிமையாளராகியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஏனைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் பட்டியலில் ராம்சரணும் இணைந்திருக்கிறார். இந்த பட்டியலில் அக்ஷய் குமார் (ஸ்ரீநகர்) அணிக்கும், ஹிர்த்திக் ரோஷன் (பெங்களூரு) அணிக்கும், அமிதாப்பச்சன் (மும்பை) அணிக்கும் உரிமையாளராக இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் நாடு முழுவதும் இந்த போட்டிக்கான ஆர்வத்தை கூட்டாக உயர்த்தியிருக்கிறது. ஐ எஸ் பி எல் உடன் ராம்சரண் இணைந்திருப்பது சாதாரணமான பார்ட்னர்ஷிப் அல்ல. இது நிஜாம் நகரத்தில் உள்ள வீரர்களுக்குள் இருக்கும்…

Read More

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்’. இந்தத் திரைப்படத்தில் அவருடன் ‘ஜெயிலர்’ ஹர்ஷத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம்…

Read More