சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர். கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது… “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது.…

Read More

டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின்…

Read More

ZOY Is Building the Future of Menstrual Care While Driving Awareness Around Cycle Wellness Beyond Periods: ZOY Is Reimagining Menstrual Care Through Thoughtful Innovation and Holistic Wellbeing

Link to campaign film: https://youtube.com/shorts/afcrAddFD6s?si=CwBEc8TbGkrNq4uU   As conversations around women’s health continue to evolve, a new category is beginning to emerge Cycle Wellness. While menstrual care has traditionally focused on managing periods, cycle wellness encourages women to better understand the different phases of their cycle, hormonal fluctuations, energy levels, emotional wellbeing and overall health throughout the month. ZOY, the feminine and menstrual healthcare brand founded by Maheshwari Moorthy and co-founded by Samantha Ruth Prabhu, is helping lead this shift by building awareness around cycle wellness and encouraging women to move…

Read More

குடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்” – அர்ஜுன் தாஸ்

ஹீத் லெட்ஜரின் ஜோக்கர் என் ஃபேவரைட் வில்லன்” – அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர்…

Read More

அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா நடத்திய “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்”

தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, **100 பேச்சாளர்கள் 100 தலைப்புகளில் ஒரே தலைவரைப் பற்றி சொற்பொழிவாற்றிய “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்”** நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை, செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகை ஜெயசித்ரா, இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.   

Read More

சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. ‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து…

Read More

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் பி லிட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா நடிக்கும் படம் அட்டாக்கர் . அறிமுக இயக்குனர் தாமோ நாகபூஷனம் எழுதி இயக்குகிறார் இவர் இயக்குனர் பா.இரஞ்சித், இணை இயக்குனராக பணியாற்றியவர். சமீபத்தில் இந்தபடத்தின் படபூஜை நடைபெற்றது , அதனை தொடர்ந்து இன்று அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே துவங்கியது. ஜினிமா மீடியா எண்டர்டெய்ண்மெண்ட் நிர்வாக இயக்குனர் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் மற்றும் பா.இரஞ்சித் கிளாப் போர்டு அடித்து துவங்கிவைத்தனர். பவிஷ், மற்றும் மைம் கோபி இருவரும் நடிக்கும் முதல் காட்சியை தனது இணை இயக்குனருக்காக ஆக்சன் சொல்லி துவங்கி வைத்தார் பா.இரஞ்சித். வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் தென்னிந்திய மானிலங்களில் நடைபெறவிருக்கிறது.     

Read More

ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி

வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி தொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் சில உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முழு அனுபவத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் நிகழ்வில் பேசுகையில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், “இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை…

Read More

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

சென்னை, ஜூன் 21, 2026: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பி்த்தனர். பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வில் இந்தியாவின் செல்வாக்கு பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் இசையை கொண்டாடப்பட்டது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவினர் அனிருத்தின் பிரபலமான பாடல்களை உற்சாகத்துடன் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு அந்த மாலைப்பொழுது தொடங்கியது. டிஜே தீபிகா தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ‘ராக்ஸ்டார்’ அனிருத் வருகைக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனிருத் மேடைக்கு வந்தார்.…

Read More

மக்கள் தலைவா விமர்சனம்.. அரசியல் நையாண்டி கலாட்டா

கதை… ரவி மரியா… ஊரைக் காக்க உருவான சங்கம் அது நாங்க இல்ல என்பது போல… ஊர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ரவி மரியா அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த பிரச்சினையை பற்றி பேச மாட்டார்.. இப்படியாக பணம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.. ஒரு கட்டத்தில் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கியதால் ஒரு ஆட்டோக்காரர் பிரச்சினை செய்கிறார்.. இந்தப் தொடர்பான வீடியோ ரவிக்கு கிடைக்க அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைகிறார்.. இவரின் சாமர்த்தியத்தை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி நீ அரசியலுக்கு வா உனக்கு பின்புலமாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லி பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கிறார்.. அரசியல் ஆசை கண்ட ரவி மரியா உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்.…

Read More