சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் – ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்…ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன. மமிதா…

Read More

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே…

Read More

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்ரல் 10 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில், செல்வராகவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த சிறப்பு வெளியீடு சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது. 70 விநாடிகள் கொண்ட இந்த டீசர், படத்தின் சுவாரஸ்யமான உலகை ஒரு சிறிய பார்வையாகக் காட்டுகிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த டீசரில், ஒரு சிறுமி, ஒரு ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான voiceover உரையாடல் இடம்பெறுகிறது. அதனுடன் இணைந்துள்ள…

Read More

மலேஷியாவில் மனிதநேயமும் சாதனையும்: டத்தோ அப்துல் மாலிக்கிற்கு “தேசம் ஐக்கான் விருது”

மலேஷியா நாட்டில் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ் நாட்டிலிருந்து தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆன்டனி, டி. இமான் போன்ற இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளை மலேஷியாவில் பல முறை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜனநாயகன் படத்தின் மலேஷிய நாட்டு வினியோக உரிமையையும் இவரது மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை, மிகப் பிரமாண்டமாக முறையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். சமீபத்தில் மலேஷியாவின் பல பகுதியிலிருந்தும் ஆதரவற்ற 4000 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை நேரிடையாக வழங்கியுள்ளார். டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி “தேசம் ஐக்கான் விருது” அண்மையில் வழங்கப்பட்டது.

Read More

திருமதி லதா ரஜினிகாந்த் – தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ் கே எஸ் – S K S’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா – அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘எஸ் கே எஸ் – S K S ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நட்சத்திர நடிகருமான லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் Dr. சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே எஸ் திரைப்படத்தில் Dr. சாய் பிரபா மீனா, தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். M.C. பால்பாண்டி – ஜூஜூ மற்றும் முத்து ( JuJu & Muthu )…

Read More

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘நமோ ரே – NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான நாராயணனை இந்த உணர்ச்சிபூர்வமான இசை படைப்பு கொண்டாடுகிறது. பக்தி- நம்பிக்கை- மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்க முயற்சிக்கிறது. நாகபந்தம்… அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர்களின் தயாரிப்பில் உருவான ‘நாகபந்தம் ‘ வளமான கதை சொல்லல் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட ஒரு சினிமா பயணமாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இது இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க தொழில் துறை கலைஞர்களின் பங்களிப்பைக்…

Read More

சின்னத்திரை ஹிட்டிலிருந்து சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்

தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன். சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். பள்ளிக் காலத்திலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புத் தேடிப் போராடினார். ஆரம்பத்தில் சிறிய…

Read More

‘கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி (Nora Fatehi )

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கே டி : தி டெவில் – K D : The Devil ‘ திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கே வி என் புரொடக்ஷன்ஸ் – KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌ விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்…

Read More

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும்        ” மரகதமலை ” படம் பிடிக்கும் இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை!!

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ” மரகதமலை “ அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார். இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும்…

Read More

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து

இந்திய இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து அவர் பேசியதாவது: “வைரமுத்து ஞானபீட விருது பெற்றார் என்று சொல்லப்படுவதைக் காட்டிலும், இது தமிழுக்கே ஞானபீடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார். மேலும், “கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது,” என்றும் கூறினார். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், MDMK தலைவர் திரு. வைகோ, மக்களவை உறுப்பினர்கள் மாண்புமிகு ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ட்விட்டர் (X) தளத்தில் நடிகர் கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் திரு. ஜி.கே. வாசன், திரு. வேல்முருகன், திரு.…

Read More