ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். ரெட்ரோ படத்தில் சூர்யா,…

Read More

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

‘ஒரு அடார் லவ்’ படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார். நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு…

Read More

விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் யோகி பாபு, தன்னுடைய சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமையக்கூடிய ஏஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பன்முகத் திறமை கொண்ட நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஆறுமுககுமார் எழுதி இயக்கி தயாரிக்கிறார். தயாரிப்பு நிறுவனமாக 7Cs எண்டர்டெயின்மெண்ட் செயல்படுகிறது. இது ஒரு சாதாரண காமெடி வேடமல்ல. யோகி பாபு இந்தக் கதையில் முழு படத்திலும் பயணம் செய்யும் கதாபாத்திரமாக, பல உணர்ச்சிப் பக்கங்களை வெளிப்படுத்தும் விதமாக நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களில் மிகவும் நீண்ட நாட்கள் (60+ நாட்கள்) படம் பிடிப்பில் ஈடுபட்டிருப்பது இந்தப் படத்தில்தான். ஏஸ் படம், யோகி பாபுவின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக் கொண்டு வரும் ஒரு முக்கியமான படமாக அமைய இருக்கிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த…

Read More

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி…

Read More

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள இருவரின் முதல் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில், படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பவர்ஃபுல்லான கதாப்பாத்திர தோற்றத்தை வெளியிட்டது. இன்று படக்குழு அழகு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வசீகரிக்கும் புன்னகையுடன் கார் ஜன்னலை எட்டிப்பார்த்தபடி அவர் அந்த போஸ்டரில் இருக்கிறார். அவரது வசீகரிக்கும் பார்வை கவிதைத்துவமாக அமைந்துள்ளது. 1950களின் மெட்ராஸின் பரபரப்பான தெருக்களோடு செட் அமைக்கப்பட்டு ‘காந்தா’ படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ராணா டகுபதி தலைமையிலான ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்தப் படம்…

Read More

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார். எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும்…

Read More

கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ” அம்பி “

மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள்…

Read More

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது “ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்” நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார். ஒரு புதிய சினிமா அனுபவத்தை ‘நாக் நாக்’ திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன்…

Read More

மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்…தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்* *-இயக்குநர் ஜஸ்டின் பிரபு வருத்தம்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. நிறைய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்து வெற்றி காணும் “உத்ரா புரொடக்சன்ஸ்- (ஹரி உத்ரா ) ‘வேம்பு’ படத்தை மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ படம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான வேம்பு, சிறந்த நடிகருக்கான விருதை ஹரிகிருஷ்ணனும், சிறந்த…

Read More

மலையாள திரையுகினருக்கு வழங்கப்படும் சிறந்த விருதான ‘மலையாளம் புரஷ்காரம் 1200’ விருது வென்ற நடிகர் சம்பத் ராம்!

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில், மலையாள திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ’தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சம்பத் ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.…

Read More