சல்லியர்கள் – திரை விமர்சனம்

  விடுதலைப் புலிகளின் மருத்துவ அணிக்குத்தான் சல்லியர்கள் என்று பெயர். போர் சமயத்தில் காயம் பட்ட வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது இந்த சல்லியர்கள். இந்தப் போரில் குண்டடி பட்டு உயிருக்கு போராடும் விடுதலை புலிகளை மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்றினர் என்பது தான் மனிதநேயத்தின் மகத்துவம் சொல்லும் வரலாறு. இப்படி உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது ஆளும் அரசின் அதிகாரப்பார்வை விழுகிறது. அவர்களை அழிக்க முயல்கிறது.அந்தத் தாக்குதல்களை மருத்துவமனை சல்லியர்கள் குழு எப்படி எதிர்கொண்டது என்பது கிளைமாக்ஸ். சிங்களப் படையை எதிர்த்து போரிடும் புலிகள் காயமடைந்தால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய போர்க்களத்தில் பதுங்குகுழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அப்படி அமைக்கப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி,ஓய்வு ஒழிச்சலின்றி அதே நேரம் கொஞ்சமும் சலிப்பின்றி…

Read More

டியர் ரதி – திரை விமர்சனம்

ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம். எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் அவருக்கே உரிய கூச்ச சுபாவம் குறுக்கே வந்து தடை பண்ணி விடும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ என்னவோ அவரை தேடி வந்த 2 காதல் கூட பிரேக் அப்பில் முடிகிறது. இப்படி இரண்டு காதல் கைவிட்டு போனதில் விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறார். பெண்களிடம் அவருக்கு இருக்கும் இப்படியான கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக அவரது அலுவலக நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு முதன் முதலாக கூச்ச சுபாவம் விலகி நட்பு பாராட்ட தோன்றுகிறது. அதனால், அந்தப் பெண்ணுடன் நட்பை தொடர விரும்புபவர், அவருடன்…

Read More

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக…

Read More

ஹால் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கும் The Madras Story தயாரிப்பு & வினியோக நிறுவனம்!

காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்!!! திரு. அபிமன்யு அவர்களால் துவங்கப்பட The Madras Story தயாரிப்பு & விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளது. ஜூபி தாமஸ் தயாரிப்பில், ஷேன் நிகம் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள இந்த ஹால், படத்தின் மூலம் வீரா இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனதை கவரும் இசையை தந்திருக்கிறார் வி. நந்தகோபன். மென்மையான, சொல்லப்படாத காதலை, வண்ணமயமான காட்சிகள், இனிமையான இசை மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களின் மூலம் இப்படம் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்மஸ் வெளியீடாக அமைந்துள்ள ஹால், குடும்பங்களுக்கும் காதல் ஜோடிகளுக்கும் இதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும். 🍿 காதலும் ஒன்றுபட்ட உணர்வுகளும் கொண்ட கொண்டாட்டமான இந்த திரைப்படம், திரு. அபிமன்யு…

Read More

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!

தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகராக விஜய் மேற்கொள்ளும் இறுதி படம் என்பது…

Read More

இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’

VV Entertainments நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice – stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. பெண்கள் மாணவர் நலன் டீன் Dr. வதனா ரூபா வரவேற்புரை வழங்கினார். தி அமெரிக்கன்…

Read More

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது. ‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out…

Read More

தி பெட் – திரைப்பட விமர்சனம்

நாம் தூங்க பயன்படுத்தும் ஒரு பெட் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பெட் கதை சொல்வது போல் படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் குழு வீக் எண்ட் கொண்டாட்டம் என்ற பெயரில் அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று வர திட்டமிடுகிறார்கள். .அவர்களுடன் பாலியல் தொழிலாளி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அறை எடுத்து தங்குகிறார்கள் மதுவருந்தி போதை தலைக்கேறிய நேரத்தில் சிருஷ்டி டாங்கே மீது நண்பர்கள் காமப் பார்வை வீச,நாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் காதல் பார்வை வீசுகிறார். அவரை அடைய நண்பர்கள் தவிக்க, ஸ்ரீகாந்த் யாரும் தொட முடியாதபடி அவர்களை போதையில் தூங்க போட்டு விடுகிறார். இந்நிலையில் திடீரென்று சிருஷ்டி காணாமல் போகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக… கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை இந்த…

Read More

’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!

’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும். ‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக விருப்பம் இருப்பதாக சொல்கிறார். அர்த்தமுள்ள கதைகள்தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்கிறார்…

Read More

‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது. படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, டி…

Read More