சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் அளவு என்பார்கள். இங்கே நம் கதையின் நாயகி அந்த எல்லையை கூட தாண்டி விடுகிறார். லட்சியத்தை நோக்கிய அவரது பயணத்தில் அவரது முயற்சிகள் அனைத்தும் முத்துக்கள் ஆனதா என்பதை சொல்லும் படம் இது. நாயகி ஜான்விகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். அவளது தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதால் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றுவதை லட்சியமாக வைத்திருக்கிறார். அறிவோடு அழகு, அழகோடு அறிவு. இதுதான் ஜான்விகா என்னும் போது அவர் மீது காதல் அம்புகள் வீசப்படாமல் இருக்குமா… வீசுகிறார்கள். பூங்கொத்தை வழங்கி காதல் சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் அவர்களின் காதல் வீச்சுகளை கடந்து செல்கிறார் ஜான்விகா. விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். எகிப்தில்,…
Read Moreஅதர்ஸ் – திரை விமர்சனம்
சாலையில் திட்டமிடப்பட்டு ஒரு விபத்து நடக்கிறது. தலை குப்புற விழுந்து நொறுங்கும் அந்த வாகனத்தில் வந்த நால்வரும் இறந்து போகிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள்.ஒருவர் ஆண் . காவல்துறை விசாரணையில் இறந்த அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள். அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் என்பது தெரியவர, விசாரணை மேலும் சூடு பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விசாரணை கருத்தரிப்பு மையமாகச் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே ஐ வி எஃப் எனப்படும் In Vitro Fertilization முறையில் கருத்தரிப்பு செய்யப்படும் செயல்பாடுகளில் மோசடிகள் இருப்பது அம்பலமாகிறது. அதன் மூலம் கருவைச் சுமக்கும் பெண்களும், கருவில் உள்ள குழந்தைகளும் அபாயத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது. சட்டவிரோத ஸ்டீராய்டுகள், முறைகேடான கொடையாளர்கள் மற்றும் ஊழல் நிறைந்த கருவுறுதல் என்று போகிறது. இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?இறந்துபோனவர்களுக்கும்…
Read Moreவட்டக்கானல் – திரை விமர்சனம்
கொடைக்கானலில் உள்ள ஒரு எழில் கொஞ்சும் காட்டுப்பகுதியே வட்டக்கானல். இந்த வனப்பகுதி யில் வளரும் ஒரு வகை மேஜிக் மஷ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக் காளான் தான் இந்த கதையின் மையம். ஆர் கே சுரேஷ் அந்தப் போதைக் காளான் செடிகளைப் பயிரிட்டுக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பார்க்கிறார். அவர் ஆதரவற்ற மூன்று சிறுவர்களை அடியாட்கள் ரேஞ்சுக்கு வளர்த்து தனது தீவிர விசுவாசிகளாக வைத்திருக்கிறார். (துருவன் மனோ, கபாலி விஸ்வந்த்,விஜய் டிவி சரத் ஆகியோர்.) அவர்களும் வளர்ப்பு தந்தையின் மீது உயிராய் இருக்கி றார்கள். அப்பா, அப்பா என்று அவர் சொன்னபடி கேட்கிறார்கள். அவர் சொல்கிற ஆட்களை அடித்து நொறுக்குகிறார்கள். அவரது நிழல் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்நிலையில் தனது கணவனைக் கொன்றுவிட்டு சொத்தை அபகரித்துச் சுருட்டிக் கொண்டதற்காக பல ஆண்டுகளாக ஆர்கே சுரேஷைப் பழிவாங்க…
Read Moreநாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !
மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார். தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம். இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில், பெரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இயக்குநர் அபிஷேக் நாமா தலைமையில் உருவாகும் இந்தப் படம், பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக இருக்கும். ஆழமான ஆன்மீக கருப்பொருளுடன் கூடிய வணிக…
Read More“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப்…
Read Moreநடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ்…
Read Moreசேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!!!
இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். ‘ஆட்டோகிராப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன்,…
Read Moreலாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் ‘பிரமயுகம்’!
நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான ‘பிரமயுகம்’ (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 – பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும். ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய ‘பிரமயுகம்’ திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ்…
Read Moreடான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது!
’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும். டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது. இந்தப் படத்தில் எல்லே ஃபேன்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி ஆகியோருடன் திறமையான பல நடிகர்களும் நடிகத்துள்ளனர். படம் பற்றி நடிகர் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பிரிடேட்டர் ஃபிரான்சைஸின் இந்தப் படத்தைப் பார்த்து…
Read Moreகிடாக்கறி விருந்து வைத்து பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்
பைசன் படம் வெற்றியை படத்தில் பணியாற்றிய ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க்கத்தில் துருவ், அனுபமா, ரெஜிஷா, அமீர் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு பிடித்த படமாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் லாபகரமான படமாகவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் படக்குழுவினர் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து இந்த படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது உதவிய, பணியாற்றிய விளையாட்டுவீரர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் இயக்குனர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டு கிடா விருந்து உபசரிப்போடு , ஊர்மக்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடினார். மாரிசெல்வராஜின் படங்களில் தனது ஊர் மற்றும் கிராமத்து அசல் மனிதர்களை தனது திரைக்குள் கொண்டுவருவதை வழக்கமாகக்கொண்டுள்ளர். அந்த வகையில் பைசனின்…
Read More