நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப். சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில்…

Read More

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !!

தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை…

Read More

”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், ‘சரியான நேரத்தில் வெளி வருவதாக’ முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ தெரிவித்துள்ளார். லண்டன் திரையிடலின் போது, டிஜிட்டல் ஸ்பை பத்திரிகையிடம் ஜாரெட் கூறுகையில், “செயற்கை தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாக இருக்கும் வேளையில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். இந்த படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில் அந்தசமயத்தில் பெரிதாக யாரும் செயற்கை தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. இப்போது ஏஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.…

Read More

ரஜினி ரசிகர்கள் காலை 6.30 மணிக்கு கேட்கும் ” மனிதன்” படக்காட்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் ஏ.வி. எம். நிறுவனம் தயாரித்த மனிதன் படம். மனிதன் திரைப்படம் 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வைரமுத்துவின் வைரவரிகளில் சந்திர போஸ் இசையில் வெளி வந்த படம்தான் ” மனிதன்”. ரஜினி திரை உலகிற்கு வந்து 50 வருட பொன் விழாவான இந்த வருடத்தில் ” மனிதன்” திரைப்படம் வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகப் பெரிய கொண்டாட்டமான தீபாவளியாக நினைக்கிறார்கள். அக்டோபர் 10 ஆம் தேதி ” மனிதன்” படம் ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. அதை அடுத்து பெங்களூருவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பி.என். புராவில் உள்ள ” புஷ்பான்ஜலி ” திரையரங்கிற்கு…

Read More

தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது

ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை புரொடியூசர் பஜார் நடத்தவுள்ளது. ஆங்கிலத்தில் பி2பி (B2B) என்று அழைக்கப்படும் தொழில்துறை நிகழ்வான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட், இந்திய திரைப்பட மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், வி எஃப் எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளுக்கான பிரத்யேக வர்த்தக மையமாக செயல்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில்…

Read More

“முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு என்னுடைய ‘டீசல்’ படம் வெளியாவதில் மகிழ்ச்சி”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

வளர்ந்து வரும் வெற்றிகரமான இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 17 அன்று ‘டீசல்’ படம் வெளியாக இருக்கிறது. துள்ளலான ஹிட் பாடல்கள், கண்ணைக் கவரும் விஷூவல் என படம் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தஸ்வாவின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண். நிகழ்வில் ஊடகங்களை ஹரிஷ் கல்யாண் சந்தித்து பேசியதாவது, “நல்லதொரு கமர்ஷியல் எண்டர்டெயினர் படமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ’டீசல்’ அமையும். முதன்முறையாக தீபாவளி பண்டிக்கைக்கு என்னுடைய படம் வெளியாவதால் நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிச்சயம் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம். ரசிகர்களுடன் சேர்ந்து இந்த தீபாவளிக்கு படம் பார்க்க நானும் ஆவலுடன் உள்ளேன்” என்றார். சென்னை தஸ்வா ஸ்டோர்…

Read More

“பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்!

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்! அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை,…

Read More

நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் ‘ட்யூட்’ பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால் பட வேலைகள் தொடங்கினோம். ‘ட்யூட்’ படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப்…

Read More

இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது!

இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள் வெடித்து, பசுமையான எதிர்காலத்தை சந்ததிகளுக்கு விட்டு செல்வோம். 84 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தியாளர்களில் ஒன்று. 1937 ஆம் ஆண்டு பிரீமியர் பட்டாசுகளாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தரமான மற்றும் புதுமையான பட்டாசு உற்பத்தியாளராக வளர்ந்துள்ளது. பாரம்பரியத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து இணைத்து, கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்கிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அதாவது, 1945 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளாக இயங்கி வரும் வடிவேல் பைரோடெக்ஸ், உலகின் புரட்சிகரமான கண்டுபிடிப்பான ‘பசுமை பட்டாசு’ வகையை சேர்ந்த சீட்ஸ்டார் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்லாது, கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவை தாவர…

Read More

காந்தாரா அத்தியாயம் 1 – திரை விமர்சனம்

அதிகார வர்க்கத்திற்கும் தெய்வபக்தியுடன் வாழும் ஆதி பழங்குடிகளுக்கும் நடக்கும் மோதலைப் பற்றி பேசிய காந்தாரா திரைப்படம் 2022-ல் வெளிவந்து பெரும் வெற்றியை அரவணைத்துக் கொண்டது. அதன் நீட்சியாகவே இந்தப் படம். அதாவது இரண்டாம் பாகத்தின் முன்பாகம் இது. இதிலும் குலதெய்வம் இடம் பிடிக்கிறது. பக்கத்து தேசத்தில் உள்ள மன்னனின் பேராசை இருக்கிறது. தங்கள் பக்க நியாயத்துக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கு மேலாக மிரட்டும் கிளைமாக்ஸ் இருக்கிறது. தங்கள் காட்டில் விளையும் பொருட்களை சந்தையில் விற்று பணம் பார்க்கும் மக்களுக்கு பக்கத்து தேச அரசனால் தொல்லை ஏற்படுகிறது. இதனால் அந்த மக்களின் தலைவன் தொல்லை கொடுத்த படை வீரர்களை பெண்டெடுத்து அனுப்புகிறான். இதன்பிறகு மன்னர் சமாதான பேச்சு வார்த்தை நடத்துகிறார். சமாதானம் என்ற பெயரில் சதி நடப்பதை தெரிந்து கொண்ட காட்டுப்பகுதி மக்கள் தலைவன் ஆடும்…

Read More