மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !

~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம்…

Read More

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் நடைபெறுகிறது !!

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) வரும் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள், 5 ஆண்டு இடைவெளி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் நோக்கம், உலக மாஸ்டர்ஸ் தடகளத்தின் வழியாக போட்டித் திறனின் மூலம் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே ஆகும். முதலில் இந்தோனேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி, ஜூலை 2025-இல் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னை இயல்பான தேர்வாக அமைந்தது. இதற்கு முன்னர் 2000, 2006-ஆம்…

Read More

நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் நடிகர் லாரன்ஸ். அந்த வகையில், தற்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் லாரன்ஸ். இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மல்லர் கலையில் அசத்தும் மாற்றுத் திறனாளிகளோடு வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இரண்டு கை, கால்கள் நன்றாக இருப்பவர்களே மல்லர் கம்பத்தில் பேலன்ஸ் செய்து ஏறுவது கடினம். அதில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பது எவ்வளவு சவாலான விஷயம். ஆனால், அந்த சவாலை செய்கிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் வாழ்வாதாரம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் பார்க்கிறார்கள். அதனால், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள், விழாக்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளிலும்…

Read More

படையாண்ட மாவீரா – திரை விமர்சனம்

பாட்டாளி மக்கள் கட்சி எம் எல் ஏ காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரை மொழியில் தந்திருக்கிறார்கள். ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வது தான் வரலாறு. அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி சரிவர அறிந்திராத மக்கள் கொண்டிருந்த எண்ணங்களை முழுசாக மாற்றுமா … மாற்றி இருக்கிறது இந்த படம் ‘ பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காடுவெட்டி குரு. .தான் பிறந்த சமூகத்துக்காக மட்டுமின்றி பட்டியலின மக்களின் உரிமைக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் சிமெண்ட் ஆலையை கொண்டு வருவதற்காக அரியலூர் பகுதி மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களை அடித்து துரத்த, அதற்கு நியாயம் கேட்கிறார். அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களை எதிர்த்து போராடுகிறார். சாராயக்கடையை திறந்தே தீருவேன் என்று அதிகாரத் தொனியில்…

Read More

KISS – திரை விமர்சனம்

நமது நாயகன் கவினுக்கு ஒரு விசேஷ பவர். எங்காவது காதல் ஜோடிகள் முத்தமிடுவதை பார்த்தாலே அவர்களின் பிந்தைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மின்னலாக வந்து போகும். அதனால் காதல் என்றாலே அவரை யும் அறியாமல் ஒருவித பயம் வந்து விடுகிறது. ஒருவேளை நமக்குள்ளும் காதல் வந்துவிட்டால் நம் பிந்தைய கதை தெரிய வரும். அது விபரீதமாக இருந்து விட்டால் எஞ்சியுள்ள நாட்கள் நரகமாகிவிடும். அதனால் தேடி வந்த காதலையும் போ போ என்கிறார் ஆனால் இதையெல்லாம் | தாண்டி அவருக்குள் பூ பூக்கிறது காதல். ஒரு சந்தர்ப்பத்தில் காதலி நம் நாயகனுக்கு அன்பாய் ஒரு முத்தம் தர… இப்போது நாயகனின் பார்வையில் காதல் ஜோடிகளான இவர்களின் எதிர்காலம் கண்முன் வந்து போகிறது.அது மோசமான எதிர்காலத்தை காட்டுகிறது. இதனால் பயந்து போகும் நாயகன் காதலுக்கு டாட்டா காட்டி…

Read More

சக்தித் திருமகன் – திரை விமர்சனம்

தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. பணமிருந்தால் எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விடுவார். வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஆட்டையை போடும் ஒருவர், அமைச்சருக்கே நெருக்கமானவராக இருந்தாலும் அவரும் விஜய் ஆண்டனிடம் சிக்கினால் கதை கந்தல் தான். அவரது அடுத்தடுத்த அணுகுமுறையில் ஓடோடி வந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைப்பார். இப்படி கிடைக்கிற கமிஷனில் சில பல சமூக சேவைகளையும் ஓசைப்படாமல் செய்து வருகிறார். இந்திய அளவில் இதே வேலையைச் செய்து அடுத்த குடியரசுத்தலைவர் இவர் தான் என்ற இடத்தில் இருக்கும் காதல் ஓவியம் கண்ணனுக்கும் ( ஒரிஜினல் பெயர் சுனில் கிருபாளினி) விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது.. அது ஏன்? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்லியிருப்பது தான் இந்த சக்தித்…

Read More

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.

வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது.. எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது.  சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து…

Read More

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது சட்டபள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது.

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 20/09/2025 நடைபெற்றது. தலைமை விருந்தினராக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி. திரு என். கோட்டீஷ்வர்சிங் , கெளரவ விருந்தினராக மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி. திரு.ஆர்.மகாதேவன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. எம். நிர்மல் குமார், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.கே. இளந்திரையன், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. திரு.டி.பரத சக்கரவர்த்தி, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி.ஆர்.கலைமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் திரு. எம் .எஸ். அமல்ராஜ்…

Read More

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் “வெற்று காகிதம்”!

மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா தயாரிப்பில், மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகிறது ‘வெற்று காகிதம்’. தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது ‘வெற்று காகிதம்’. தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஹீரோ தக்‌ஷன் விஜய்! தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை மகிழ் குழுவினர் இயக்குகின்றனர். ஒளிப்பதிவு திலீபன், கலை கார்த்திக், சீனு, சண்டைப் பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, பழனி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் சி.பியூலா மகிழ். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘வெற்று…

Read More

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது. காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி…

Read More