இந்திய இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து அவர் பேசியதாவது: “வைரமுத்து ஞானபீட விருது பெற்றார் என்று சொல்லப்படுவதைக் காட்டிலும், இது தமிழுக்கே ஞானபீடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார். மேலும், “கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது,” என்றும் கூறினார். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், MDMK தலைவர் திரு. வைகோ, மக்களவை உறுப்பினர்கள் மாண்புமிகு ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ட்விட்டர் (X) தளத்தில் நடிகர் கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் திரு. ஜி.கே. வாசன், திரு. வேல்முருகன், திரு.…
Read MoreZHEN STUDIOS தயாரிப்பில், GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா “நீ Forever” மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது !!
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள “நீ Forever” திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள…
Read Moreதொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்!
சென்னை, மார்ச் 13, 2026: ஜேப்பியார் பல்கலைக்கழகம் சார்பில் ’தொழில்துறைக்குள் வளாகமா அல்லது வளாகத்திற்குள் தொழில்துறையா?’ என்ற தலைப்பில் ’Jeppiaar Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னணி கல்வியாளர்கள், தொழில்துறையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், மனிதவள நிபுணர்கள் மற்றும் புதுமையாளர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். கல்வி அறிவையும், தொழில்துறை அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் கற்றல் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம். இதுமட்டுமல்லாது தொழில்துறையுடன் இணைந்த பாடத்திட்டங்கள், அனுபவ அடிப்படையிலான கற்றல், திறன் மேம்பாடு, புதுமையான சூழல் மற்றும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நடைமுறைகள் ஆகியவை குறித்தும் இந்த விவாதம் இருந்தது. ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர்…
Read MoreOTT மற்றும் பட வெளியீட்டை ஒழுங்குபடுத்த ‘ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டி’ அமைக்க திரைத்துறை ஒருமித்த தீர்மானம்
தமிழ்த் திரைப்படத்துறையின் நலன் கருதி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் அவர்களின் தலைமையில், செயலாளர்கள் திரு.எஸ்.கதிரேசன், திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் திரு.கமலக்கண்ணன், இணைச்செயலாளர் திருமதி.சுஜாதா விஜயக்குமார், பொருளாளர் திரு.என்.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் தலைவர் திரு.கேயார், தமிழத் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.டி.ஜி.தியாகராஜன், செயலாளர் திரு.டி.சிவா, பொருளாளர் திரு.தனஞ்செயன் தயாரிப்பாளர்கள் திரு.ஆர்.பி.சௌத்ரி, திரு.ஐசரி கணேஷ், திரு.சந்திரபிரகாஷ் ஜெயின், திரு.ஏ.எல்.அழகப்பன், திரு.பிரமிட் நடராஜன், திரு.ஏ.எம். ரத்னம், திரு.முகேஷ் மேத்தா மற்றும் தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.திருப்பூர் சுப்ரமணியம், செயலளார் திரு.ரோகினி பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் திரு.அருள்பதி, மற்றும் நிர்வாகிகள் மற்றும் திரையுலகை சார்ந்த பலரும் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 14.03.2026 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை தனியார்…
Read More‘சிறை’ வேறு மொழியில் வெற்றியை அடைந்திருக்குமா?- இயக்குநர் வெற்றிமாறன் சந்தேகம்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க…
Read Moreகொலை சேவல் – விமர்சனம்
கதை… கலையரசன் & தீபா இருவரும் கணவன் மனைவி.. ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இவர்களின் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கின்றனர்.. அங்கு ஒரு காட்டுப் பகுதிக்கு செல்லும்போது தீபாவுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது.. ஏதோ தமக்கு தவறு நடக்கப் போகிறதோ என்ற மனநிலை வருகிறது.. அந்த காட்டுப்பகுதியில் என்ன நடந்தது.? தீபாவின் மனநிலை அப்படி மாறுவது ஏன்.?கலையரசன் என்ன செய்தார்?என்பதெல்லாம் திகிலூட்டும் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… KALAIYARASAN – காளி DEEPA BALU – அனுசுயா BALA SARAVANAN – குமார் கலையரசன் & தீபா பாலு இருவரும் தம்பதிக்கு பொருத்தமான தேர்வு.. நடிப்பில் நல்ல ஒரு மெச்சூரிட்டி…. நண்பராக வரும் பால சரவணன் ஆங்காங்கே கொஞ்சம் காமெடி செய்திருக்கிறார்.. ஆனால் படத்தின் நீளத்தை நீட்டிக்க இவரின் காமெடி தேவைப்பட்டதா…
Read Moreகெணத்த காணோம் – விமர்சனம்
கதை… நாயகன் யோகி பாபு.. ஒரு கோயில் பூசாரி.. இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லவ்லின் காதலிக்கிறார்கள்.. இவர்களின் காதலுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும் ஒரு நிபந்தனை விதிக்கிறார் நாயகியின் அப்பா.. உங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் என் மகளை உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.. இதனால் பெண் கிடைக்காமல் தவிக்கிறார் யோகி பாபு.. அப்போது ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் போது அங்கு ஆராய்ச்சி செய்யும் ஒருவர் யோகி பாபு நிலத்தில் (வீட்டில்) தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்.. இதனையடுத்து ஊர் மக்கள் அங்கே கிணறு வெட்ட சொல்கின்றனர்.. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் யோகி பாபு.. அது என்ன என்பதுதான் சுவாரசியமான கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… யோகி பாபு லவ்லின் காதல் கதைக்கு ஒட்டவில்லை.. யோகி பாபு எடுக்கும்…
Read Moreகாட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது
சென்னை, மார்ச் 13, 2026: ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் ” முத்து என்கிற காட்டான் ” வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது. இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது . முத்துவின்…
Read More*இந்திய ரேசிங் ஜாம்பவான்கள் ஒன்றிணைந்த தருணம்!*
சர்வதேச ரேசரும் நடிகருமான அஜித் குமார் தற்போது மகிந்திராவின் ஃபார்முலா ஈ ரேஸ் கார் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இந்த பிராண்டின் ஃபார்முலா ஈ போட்டியாளரால் ஈர்க்கப்பட்ட சிறப்பு பதிப்பான எலக்ட்ரிக் ஆரிஜின் ஈஎஸ்யுவி காரை நடிகர் அஜித் குமார் தனக்கு சொந்தமாக்கியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் உள்ள ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான சோதனை ஓட்டத்தில், அஜித் குமார் ஜென் 2 ஸ்பெக் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ரேஸ் காரை ஓட்டினார். அப்போது சீசன் 7 உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அவர் பெற்ற அனுபவம், அவரது தொழில்முறை ரேசிங் பயணத்துக்கும் பிஈ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை தேர்வு செய்ததற்குமான தொழில்நுட்ப இணைப்பை காட்டுகிறது. இந்த தேர்வு மூலம் இந்தியாவின் இரண்டு ரேசிங்…
Read More“நான் ‘அசுரன்’ படத்துல சொன்னதை தவிர எல்லாத்தையும் பண்ணிருக்க.!”- கென்னை கலாய்த்த தனுஷ்
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.’யூத்’ திரைப்படத்தை முதல் பாடலான ‘முட்ட கலக்கி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பறந்தனே பெண்ணே’ பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான ‘ஆச புள்ள’ வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன்…
Read More