அமெரிக்க மற்றும் கனடா நாட்டில் அனிருத்யின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி

 இந்திய சினிமாவில் இன்று மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் என்றால் அது ராக் ஸ்டார் அனிருத் என்பது அனைவருக்கும் நாம் அறிந்த விஷயம். இவரின் இசையில் வரும் பாடலுக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இவரது இசையில் வந்த பாடல் அனைத்தும் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக இவரின் இசைக்கு இன்றைய இளைஞர்கள் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இது இவரின் இசை கச்சேரிக்கும் உண்டு உலகில் பல்வேரு நாட்டில் இவரின் இசை கச்சேரிக்கு நடந்து உள்ளது குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய்,லண்டன் போன்ற நகரங்களில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது அதன்படி தற்போது இவர் இசைக்கச்சேரி அமெரிக்க நகரில் நான்கு மாகாணத்தில் நடக்கிறது அதோடு கனடா நாட்டிலும் ஒரு இசை கச்சேரி நடக்க…

Read More

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ தீபாவளிக்கு தள்ளிவைப்பு – ‘தரத்தை மேம்படுத்த கால தாமதம்’

இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்களும், திரையுலக பிரியர்களும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வைரலான ஹிட் மெல்லிசை பாடலான ’ஸ்ரீமதி காரு’ பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதலில் இந்தப் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுதியான அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ’லக்கி பாஸ்கர்’ படத்தை சுற்றி இருக்கும் எதிர்பார்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன்…

Read More

ஏலியன்: ரோமுலஸ் தொடக்க வார இறுதியில் உலகளவில் $ 110 மில்லியனைத் தாண்டியது!!

ரிட்லி ஸ்காட்டின் சின்னமான ஏலியன் உரிமையானது பல தசாப்தங்களாக பார்வையாளர்களை பயமுறுத்துகிறது மற்றும் கவர்ந்திழுக்கிறது. ஏலியன்: ரோமுலஸ், 20th செஞ்சுரி ஸ்டுடியோவின் சமீபத்திய தவணை, இந்த அறிவியல் புனைகதை திகில் தொடரின் நீடித்த சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது, அதன் வெளியீட்டு வார இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் செயல்திறனை வழங்குகிறது. அதன் தொடக்க வார இறுதியில், ஏலியன்: ரோமுலஸ் உள்நாட்டில் $41.5 மில்லியன் வசூல் செய்து, முழு ஏலியன் உரிமையில் இரண்டாவது-அதிக-வசூல் செய்த முதல் இடத்தைப் பிடித்தது. சர்வதேச டிக்கெட் விற்பனையில் கூடுதலாக $66.5 மில்லியனால் இந்த ஈர்க்கக்கூடிய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டது, இது உலகளாவிய மொத்தத்தை $108 மில்லியனாகக் கொண்டு வந்தது. ஏலியன்: ரோமுலஸ் அசல் படங்களை மிகவும் திகிலடையச் செய்ததன் சாராம்சத்தைப் பிடிக்க முடிந்தது, அதே நேரத்தில் தொடரில் புதிய…

Read More

இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட இசைக்கோர்வை..

  நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி ,பாரதிராஜா,தம்பிராமையா,நாசர்,கருணாகரன்,ஶ்ரீமன்,இளவரசு,சாம்ஸ்,சந்துரு,அனன்யா,ரேஷ்மா,வடிவுக்கரசி,…நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் திரைப்படத்திற்காக சீதாராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை உருக வைக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக ஹங்கேரியில் உள்ள புத்தா பெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளார். அது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரு.மாணிக்கம் படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்து உள்ளார்கள்.வைரல் வீடியோவிற்கு. https://youtu.be/sGkejhfN1B4 

Read More

அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் !!

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது! ஒரு திரைப்படத்திற்கான பங்களிப்பு முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களையும் தாண்டி துணை நடிகர்கள் மற்றும் அவர்களின் வலுவான கதாபாத்திரங்களின் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இதன் மீது நேர்மையான நம்பிக்கை காரணமாக, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களின் நடிப்பையும் சிறப்பிக்கும் வகையில் அவர்களின் கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் தருவாயில் படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதில் படக்குழு முனைப்புடன் உள்ளது. இந்த வரிசையில் நடிகர்கள் கணேஷ் மற்றும் தஸ்ரதியும் இணைந்துள்ளனர். இயக்குனர் மகிழ் திருமேனி கூறும்போது, “கணேஷ் மற்றும் தஸ்ரதியின் கதாபாத்திரங்கள் சிறியதாக இருந்தாலும் படத்தின் கதைக்கு முக்கியமானவை. அதனால்,…

Read More

பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா!

   *பன்னாட்டு திரை பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழாவில் இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) சிறப்பு விருந்தினர் விஜய் சேதுபதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன.* பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்கும் நோக்கத்தில் பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் இயக்குநர் திரு.வெற்றிமாறன் அவர்களால் 19-08-2022 அன்று நிறுவப்பட்டது. இந்நிறுவனம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி இன்று மேற்கண்ட படிப்புகள் துவங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன், நிறுவனத் தலைவர் வெற்றிமாறன்,ஆர்த்தி வெற்றிமாறன் மற்றும் பேராசிரியர் ராஜநாயகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமிகு.வளர்மதி…

Read More

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா!!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், நடிகர் விக்ரம், இயக்குநர் பா. ரஞ்சித், விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து…

Read More

‘சூரியின் ‘கருடன்’ பட வெற்றி கூட்டணியுடன் இணையும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்

  கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஹாட்ரிக் கமர்சியல் ஹீரோ’ சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரி -பிரசாந்த் பாண்டியராஜ் -லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்தத் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா!!

கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில்முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார். மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றுவதற்கு உதவுவதற்காகவும் லைஃபை என்று அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக போர்ட்லேண்ட் வணிக இதழால் அங்கீகரிக்கப்பட்டார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பியதால் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவரது நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில்…

Read More

லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘வேட்டையன்'(தலைவர் 170) திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது. இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில்  2.0,தர்பார்,சமீபத்தில் வெளியான  லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும். அதே போல இன்னொரு அதிரடியான கூட்டணியான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திர இருவரும் பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு நான்காவது…

Read More