ஹார்டின் – விமர்சனம்…

கதை… ஜெய்ப்பூரில் கதை தொடங்குகிறது.. தன் நண்பர் மணியுடன் தமிழ்நாட்டு சுவையுடன் ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் சனந்த்.. அங்கு உணவருந்தும் வாடிக்கையாளராக வருகிறார் நாயகி இமையா.. நாயகனின் திறமையை கண்டு ஒரு கட்டத்தில் காதலிக்கிறார் காதலி.. லவ் வெளிப்படுத்தும் போது நாயகன் ஏற்கனவே நான் காதல் வலியில் இருக்கிறேன்.. உன்னை என்னால் காதலிக்க முடியாது என மறுக்கிறார்.. கல்லூரி நாட்களில் மடோனாவை காதலித்ததை சொல்கிறார்.. ஆனால் அவள் என்னை பிரிந்து விட்டாள் என்றும் சொல்கிறார்.. முதலில் மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் இமையாவின் காதலை ஏற்று இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாராகி வருகிறார்கள்.. அந்த சூழ்நிலையில் நாயகனுக்கு திடீரென விபத்து ஏற்படுகிறது.. அப்போது கிட்டத்தட்ட கடந்த 5-6 வருடங்களில் நடந்ததை மறந்து விடுகிறார்.. முன்னாள் காதலி மடோனாவின் நினைவு மட்டுமே அவருக்குள் இருக்கிறது……

Read More

கான் சிட்டி – விமர்சனம்…

கதை… 1990 காலகட்டங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கும் கதை இது.. மின்சார வாரியத்தில் கரண்ட் பில் வசூலிக்கும் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.. இவரின் உயர் அதிகாரிகளாக வி டிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ். இவருக்கு இருக்கும் ஏகப்பட்ட கடன் தொல்லை பிரச்சினையால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையை எவருக்கும் தெரியாமல் இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் விட்டு அதன் மூலம் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. மேலும் இந்தத் தொகையை வைத்து நண்பருடன் இணைந்து பிசினஸ் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க… வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு டிரஸ் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அர்ஜின் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்.. அதுபோல மற்றொரு பக்கம் நாயகி அன்னா பென்…

Read More

அந்தரன் (HUNTER) – விமர்சனம்

கதை… நாயகி இவானா வருண்.. இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனை காதலிக்கிறார்… திருமணம் வரை அந்த காதல் சென்றாலும் திடீரென அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. இதனால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து வாழ்கிறார் இவானா.. வருடங்கள் செல்ல செல்ல உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என அப்பா வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்… அப்போது பார்க்கும் ஒரு பையனும் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான்.. அடுத்ததாக வேறு ஒருவரை பார்க்கும் போதும் அவரும் யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.. அப்படியானால் நாயகிக்கு எதிராக செயல்படுபவர் யார்? நாயகியை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள முன் வந்தாலோ அவரை கொல்லும் கொலையாளி யார்.? என்பது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் பிரஜின்.. அவருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது..…

Read More

அங்கீகாரம் விமர்சனம்.. 4.5/5… மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்ற (அசால்ட்) வீரன்

கதை… நாயகன் கே ஜே ஆர் (ராஜேஷ்).. ஓட்டப்பந்தய வீரன்.. இவருக்கு ஒரு தங்கை.. அம்மா ரமா தூய்மை பணியாளர்.. தன் தலைமுறையோடு தூய்மை பணி முடிவு எட்டட்டும்.. நீ நம் தாயகத்திற்காக ஓடினால் மட்டுமே நம் குடும்பம் அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என தன் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்கிறார்.. இதனால் கடும் பயிற்சிகளுக்குப் பிறகு பெரும் அற்பணிப்புடன் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு நேஷனல் லெவலில் செலக்ட் ஆகிறார் நாயகன் கே ஜே ஆர்.. ஒரு கட்டத்தில் காலில் அடிப்படவே இவரால் ஓட முடியாத சூழ்நிலை.. அப்பொழுது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இவர் விண்ணப்பம் செய்கிறார்… ஆனால் விபத்து காரணமாக உன்னால் கலந்து கொள்ள முடியாது என்று உயர் அதிகாரிகள் இவரை அனுமதிக்கவில்லை.. ஆனால் வாய்ப்பு கொடுங்கள் நான் நிரூபித்து…

Read More

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது. Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாடுகளையும், கலாச்சாரங்களையும் தாண்டி ‘பாகுபலி’ எவ்வாறு மக்களின் மனதில் இடம்பிடித்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், உலகின் பல பகுதிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்தார். “இத்தாலியில் கூட மக்கள் என்னை பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு நான் அறப்பணிக்காகச் சென்றபோதும்,…

Read More

விறுவிறுப்பான அரசியல் திரில்லரான ‘கராத்தே பாபு’ படத்தில் தவ்தி ஜிவால், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆகஸ்ட் 28 அன்று ‘கராத்தே பாபு’ திரையரங்குகளில் வெளியாகும்…

Read More

பிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்! 

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது. கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர். இறுதியில், பாரம்பரிய கிராம விருந்துடன் விழா நிறைவடைந்து.…

Read More

*நடிகர்கள் ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

*நடிகர் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* ’96 ‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌ இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட…

Read More

*எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ்*

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது, தனஞ்செயன் சாருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார்.…

Read More

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான…

Read More