செயற்கை தொழில்நுட்பம் வெறும் கருவியாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேற்பட்டதாக எப்படி இனி மாற இருக்கிறது என்பதை ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது நமக்கு அறிமுகம் இல்லாதவரை நமக்கு அது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த இருக்கும் ஐஐடி மாணவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். டிஸ்னியின் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் ஐஐடி பாம்பே மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது. படத்திலிருந்து உத்வேகம் பெற்று, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கற்பனை மற்றும் கேமிங் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்வை உருவாக்கினர். அற்புதமான ஹை எனர்ஜி LED நடன நிகழ்ச்சியும் அங்கு நடந்த லேசர் நிகழ்ச்சியும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகமான ’டிரான்:…
Read Moreமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இணைந்துள்ளார். தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ், (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை…
Read Moreநயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள் அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.…
Read Moreபரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Foot Steps Production தயாரிப்பில்,
Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் S சிவராமன் பேசியதாவது.., இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில்…
Read Moreநடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!
தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் ‘சின்னத்தாயி’ படத்தில் இருந்து ‘நான் ஏரிக்கரை…’ பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. இந்தப் பாடலையும் படத்தையும் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் ‘ரெட் ஃபிளவர்’ மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் விக்னேஷ் நன்றி தெரிவித்துள்ளார். “இதுபோன்ற காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெலோடி பாடலை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி. அவரது…
Read Moreகம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா உரைகள்:
👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள். இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை…
Read Moreஇசை நிறுவனத்தைத் துவங்கிய ஐசரி கணேஷ்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது. “இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K.…
Read Moreஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் ‘மிராய்!
ஃபேண்டஸி- ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள ‘மிராய்’ அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும். விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள ‘மிராய்’, மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக ‘மிராய்’ இருக்கும். இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்க, நடிகர்…
Read Moreநெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!
விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது. இந்தத் தொடரில் ரகசியம், சந்தேகம் மற்றும் பல வகையான உணர்வுகளும் காட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் தொடர் சைபர்கிரைம் மிஸ்ட்ரியுடன் குடும்பங்களின் ஆழமான உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறது. நாம் பாதுகாப்பு எனக் கருதும் இடமே நமக்கு ஆபத்தாக மாறும்போது நம்பிக்கை, ஏமாற்றுதல் மற்றும் வாழ்தல் எப்படி சிக்கலாகிறது என்பதைப் பற்றிய கதையாகவும் இது இருக்கும். இந்த நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தொடர் இறுதிவரை உங்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘தி கேம்’ தொடரின் உண்மையான பவர் பிளேயர் ஷ்ரதா ஸ்ரீநாத் தான். அவர் கதையை…
Read Moreவரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்
MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரை விட்டு ஓடிப்போகும்…
Read More