NEUBERG DIAGNOSTICS UNVEILS FIRST CUTTING-EDGE NATIONAL REFERENCE LABORATORY IN CHENNAI AND ANNOUNCES ITS ENTERING INTO INTEGRATED DIAGNOSTIC SPACE Chennai, 01 December, 2023: Neuberg Diagnostics, a leading diagnostic healthcare chain with a strong presence across India, South Africa, UAE, and the USA, has unveiled its state-of-the-art national reference laboratory which houses Genomics, Transplant Immunology, Molecular Diagnostics, Proteomics and Metabolomics testing along with integrated diagnostics in Chennai. This cutting-edge facility, hailed as “Chennai’s new Healthcare landmark,” represents India’s First state of art total lab automation solution utilizing the Abbott GLP System, alongside…
Read Moreஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU)ன் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஸ்கிரீனிங் முகாம்
பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஆண்களிடம் ஏற்படுத்துவதற்காக சென்னையை சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) நிறுவனம் பொதுமக்களுக்கு ஒரு இலவச ஸ்கிரீனிங் முகாமை வெற்றிகரமாக நடத்தியது . சென்னையில் ஒரு பல்சிறப்பு மருத்துவமனை இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த முகாமை முதல் முறையாக நடத்தியது பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது சென்னை, 01st டிசம்பர் 2023; இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு நிபுணரும், சென்னையின் மிகப்பெரிய நெப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவத்துறை சிறப்பு மையமுமான ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) சென்னை, அவர்கள் நடத்திய ஆண்களின் பாலியல் ஆரோக்கிய ஸ்கிரீனிங் முகாம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சுகாதார முன்முயற்சி மற்றும் ஆண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட…
Read Moreஅன்னபூரணி சினிமா விமர்சனம்
பிறக்கும் போதே நாக்கின் சுவை முடிச்சிகளில் அதீத உணர்வுகளுடன் பிறக்கும் ஒரு பிராமணக் குழந்தையான அன்னபூரணி, அதே காரணத்தால் சுவை மீதும் உணவு மீதும் அதிக நாட்டம் கொள்ளுகிறாள். உணவு மீது கொண்ட நாட்டம் நாளடைவில் சமைப்பதிலும் திரும்ப, உணவு சமைத்துக் கொடுப்பது எவ்வளவு பெரிய தொண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளும் அன்னபூரணி இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக தான வருவேன் என்று உறுதி எடுக்கிறாள். சிறுமியாக இருக்கும் போது அவள் சமைப்பதற்கு ஆதரவும் அரவணைப்பும் காட்டிய குடும்பம், அவள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும் போது , தங்கள் குலத்தை காரணம் காட்டி அவளுக்கு தடை போடுகிறது. தன் குடும்பத்தை மீறி தன் இலட்சியத்தை அடைவதில் இருக்கும் தடைக்கற்களை மீறி அன்னபூரணி ஜெயித்துக் காட்டினாளா..? என்பதே இந்த “அன்னபூரணி” திரைப்படத்தின் கதை.…
Read Moreபார்க்கிங் சினிமா விமர்சனம் :
இரு குடித்தனங்கள் வசிக்கும் ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பில் இருக்கும் சிறிய பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையால் இரு நல்ல மனிதர்கள் எப்படி மிக மோசமான மிருகங்களைப் போல் மாறுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு தவறை உணர்ந்து திருந்தினார்களா..? இல்லை அந்த ஈகோவிற்கு தங்களை பலி கொடுத்தார்களா..? என்பதை விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் பேசி இருக்கும் திரைப்படம் தான் “பார்க்கிங்”. ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசாங்க ஊழியர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). நகராட்சி அலுவலகத்தில் வி.ஏ.ஓ வாக பணிபுரியும் அவர் நேர்மைக்குப் பெயர் போனவர், அதே போல் தனக்கு இருக்கும் ஒற்றை மகளை செல்வ செழிப்புடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவிற்காக சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து, பார்த்துப் பார்த்து செலவழித்து,…
Read More”குய்கோ” சினிமா விமர்சனம்
தனது 30 வருட பத்திரிக்கைத் துறைப் பணி மற்றும் அனுபவத்தை தொடர்ந்து அருள் செழியன் முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம் “குய்கோ”. அருள் செழியன் 2016ம் ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை” திரைப்படத்தின் கதாசிரியராக பணியாற்றியவர் என்பது நினைவு கூறத்தக்கது. ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக இருந்ததோ அதே போன்று “குய்கோ” திரைப்படமும் ஒரு வித்தியாசமான காண்பனுவத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருந்தது என்பதிலும் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்கான படமாக “குய்கோ” இருக்கின்றது என்பதிலும் படம் பார்த்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இயக்குநருக்கு பழைய தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது. தான் கதை எழுதிய திரைப்படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்ற பெயரை அவர்தான் சிபாரிசி செய்தாரா..? என்பது தெரியவில்லை. அல்லது அப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன…
Read More‘சபாநாயகன்” – ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப் சென்ற அனுபவத்தைக் கொடுக்கும் – அசோக்செல்வன்
அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinemas சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும்…
Read Moreசந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது.. இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை…
Read Moreதிருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்றது விநாயக ஊர்வலம்
ஸ்டைலிஷான கேரக்டரில் மகேஷ்பாபு நடிக்கும் SSMB28 அடுத்த ஆண்டு ஜனவரி 13 அன்று வெளியாகிறது
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனித்துவம் வாய்ந்த கேரக்டர்கள் மூலம் புகழ் பெற்றவர். இவர் ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்து வரும் SSMB28 திரைப்படம் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் கூட்டணியில் ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28. இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும். இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பை மெருகேற்றி, இதுவரையில்…
Read Moreசத்யராஜ் நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தில் இசைமைப்பாளராகும் பாடகர்
திரைப்பட பாடலாசிரியர் கு.கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றி வரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஸ்ரீபதி, சதீஷ் சரண் இயக்கத்தில், சைமன் கிங் இசையமைப்பில் அசுரன் புகழ் அம்மு அபிராமி மற்றும் கோமல் சர்மா கதாநாயகிகளாக நடித்துள்ள…
Read More