தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!

புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும் சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து…

Read More

அகண்டா 2: தாண்டவம் படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன்  திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”.   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ,  ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.  எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில்…

Read More

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம். மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய்…

Read More

காந்தா – திரைவிமர்சனம்

திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘இதுதான் படம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆழமும் அகலமும் ஆன ஒரு படைப்பு இந்த காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் கொடி கட்டி பறப்பவர் டி.கே.மகாதேவன். (துல்கர் சல்மான்).அவரை தனது படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி). முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தேடி வர, அதுவரை அவர் நடித்த 10 படங்கள் தொடர் வெற்றியில் இணைகின்றன. இப்போது பல ஆண்டுகளுக்குப் பின் குரு சிஷ்யன் இருவரும் பிரபல படநிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணைகிறார்கள். அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம். முன் போல் இல்லை அவர். தனது இன்றைய இமேஜ்க்கு தக்கபடி கதையில் சில…

Read More

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியானது!

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான ‘தேரே இஷ்க் மே’ ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. ‘தேரே இஷ்க் மே’ இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. காதல் ஒரு காவியமாக உயர்கிறது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. டீஸர் மற்றும் மனதை வருடும் இசையின் வலுவான வரவேற்புக்கு பிறகு, ‘தேரே இஷ்க் மே’ படத்தின் இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில், இந்த டிரெய்லர் சங்கர்…

Read More

1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது !!

LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார். படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். 1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின்…

Read More

அனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனந்தா என்பது ஒரு திரைப்படைப்பு இல்லை ஒரு இறை படைப்பு. என்னுடைய திரையுலக பயணத்தில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளேன், அதில் இறைவனைப் பற்றி அதிகம் எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே எழுதிய பாடல் என்றால் அது இந்த படத்தில் தான். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு…

Read More

கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட ‘நடு சென்டர்’ சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகிறது!

எனர்ஜி, எமோஷன் என இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற பள்ளிக்கால கூடைப்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘நடு சென்டர்’ வெப்சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைய்லரில் வாழ்வில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு, நட்பு மற்றும் விளையாட்டால் ஏற்படும் மாற்றம் என இந்தத் தொடரின் உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறது. தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 17 வயது பிகே, தவறான நடத்தைக்காக உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். வன்முறை மற்றும் ஒழுக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மோசமான பள்ளிக்கு பிகே மாற்றப்பட்டு அங்கு பொருந்த போராடுகிறான். அப்போது அவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வைஸ் பிரின்சிபிள் ஊக்குவிக்க அவனது வாழ்வு மாறத் தொடங்குகிறது. கட்டுக்கடங்காத மாணவர்களை கொண்ட பள்ளியில் கூடைப்பந்து அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிகே-வின்…

Read More

நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் ‘ரெளடி & கோ”- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!

கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி & கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது. முன்பு சித்தார்த் நடித்த ஆக்‌ஷன் கதையான ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை ரொமாண்டிக் காமெடி கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை ‘ரெளடி & கோ’ அழைத்து செல்ல இருக்கிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இந்தக் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும்…

Read More

“வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” பொது உறவு நிகழ்ச்சி

வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை வளாகத்தில், ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் “வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” என்ற தலைப்பில் பொது உறவு நிகழ்ச்சி 05.11.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபாகர் ராஜ், ஃபங்ஷனல் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் My Health School நிறுவனர் கலந்து கொண்டு, “ஆரோக்கியமான மனநிலைக்கான ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி பேராசிரியர் டாக்டர் எம். சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில், இறுதி ஆண்டு பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் — பாரத் குமார், பாலமுருகன், ரஃபிக் பகி, மகேஷ் கேஷப், சித்திக் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட…

Read More