சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி ஆசிரியராக நடிகர் மதன் நடித்திருக்கிறார். தென் தமிழகத்து மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டையும் நிஜ கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் இந்தப்படம் பேசுகிறது. நிஜத்தில் மனத்தில் கணேசனுக்கு உதவிய ஆசிரியர்தான் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்கள். இன்று இயக்குனர் மாரிசெல்வராஜ் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து படக்குழுவின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Read Moreமுதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது! இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்.., “அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை, இந்திய…
Read Moreஅருண்ராஜா காமராஜின் சீடர் இயக்கியுள்ள ‘டியர் ஜீவா’ ; டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு
தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார். இந்த படம் டென்ட் கொட்டாய் ஓடிடி…
Read Moreதக்ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்
காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக பிரார்த்தனை செய்தார். அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான *காசிக்கு (வாரணாசி)* பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். தக்ஷன காசியிலிருந்து காசிவரை அவரின்…
Read Moreகொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔
தீபாவளி பண்டிகையில் வானம் ஆயிரம் பட்டாசுகளாலும் வாண வேடிக்கையாலும் ஒளிர்ந்தாலும் கொகொவுக்கு மனதில் ஒரே ஒரு ஆசைதான். அது எந்தவிதமான பட்டாசு சத்தமும் இல்லாமல், பயமில்லாமல் கிகியை பாதுகாப்பது! உலகமே பட்டாசு சத்தத்தால் அதிரும்போது அவர்கள் இருவருக்கும் நீங்கள் தரும் மிகச்சிறந்த பரிசு அவர்களை பாதுகாப்பதுதான். இந்த தீபாவளியை சற்றே வித்தியாசமாக கொண்டாடுவோமே! உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு அமைதியான பாதுகாப்பான இடம் ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்து உங்கள் அன்பை காண்பியுங்கள். ஏனெனில், செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் மட்டும்தான் உலகம்! எங்கள் சிறிய குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பத்திற்கு, அன்பு நிறைந்த தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்! கிகி & கொகொவின் தீபாவளி வாழ்த்துக்கள் 🐾 உங்கள் கொண்டாட்டங்கள் பிரகாசமாகவும், உங்கள் அன்பு நிறைந்தவர்களை பாதுகாப்பாகவும் வைத்திருங்கள். அதுதான் உண்மையான கொண்டாட்டம்.
Read Moreநடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது
சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான அசோர்ட், சென்னையின் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அதன் புத்தம் புதிய கடையைத் திறப்பதன் மூலம் தெற்கில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. 15,211 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆல்-நியூ ஸ்டோர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமகால பாணி மூலம் ஃபேஷன் சில்லறை விற்பனையை மேம்படுத்தும் அசோர்ட் இன் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக இருக்கும். பிரமாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நடிகையும் இளைஞர்களின் ஐகானுமான கிருத்தி ஷெட்டி அசோர்ட் கடையைத் திறந்து வைத்து, ரசிகர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் உரையாடி, நகரத்தின் டைனமிக் மற்றும் ஃபேஷன்-ஃபார்வாட் ஸ்பிரிட்டைக் கொண்டாடினார். அசோர்ட் என்பது இந்தியாவின் ஒரே ஃபேஷன் நியோஸ்டோர் ஆகும், இது குளோபல் டிரெண்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில்…
Read Moreதமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் சுவாரஸ்யம்
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,வழக்கம்போல் சென்னை பிரசாத் லேப்பில் சிறப்பாக நடந்தது. 2025ம் ஆண்டு சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன்( தமிழ்நாடு வீட்டுவசதிவாரியதலைவர், நடிகர் சங்க துணைத்தலைவர்) மற்றும் நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரகவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். விழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்‘, முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு மாமனிதர்.அரசு அதிகாரிகள், கட்சி…
Read Moreகம்பி கட்ன கதை — திரை விமர்சனம்
அப்பாவி மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் நாயகன் நட்டி நட்ராஜ் கையில் பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்று கிடைக்க, அதை காட்டுப்பகுதி ஒன்றில் குழி தோண்டி புதைத்து வைக்கிறார். வைரக்கடத்தலு க்காக போலீஸ் அவரை கைது செய்கிறது. கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறது. சிறை வாசம் முடிந்து வெளியே வரும் நட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடம் அரசியல்வாதி ஒருவரால் அபகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் கோவில் ஒன்றையும் அரசியல்வாதி கட்டி வைத்திருக்கிறார். இப்போது வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொள்கிறார். சாமியாராக இருந்து கொண்டே வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த முயற்சியில் அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பதை…
Read Moreடீசல் – திரை விமர்சனம்
2014-க்கு முந்தைய காலகட்டத்தில் கதை நடக்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து, வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அங்குள்ள மீனவ மக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட ராட்சத குழாய், மீனவர்களின் மீன் தொழிலையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. அந்த திட்டத்திற்கு எதிராக போராடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். இதனால் அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் மீனவர்களில் சிலர், அதே கச்சா எண்ணெயை திருடுவதை தொழிலாக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் திருட்டை வளர்த்துவிடும் சில பண முதலைகளின் சதித் திட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை அறிந்து கொள்ளும் நாயகன் அந்த சதிதிட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவர் வெற்றி பெற்றாரா? சதி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் தொழில் அதிபரால்…
Read Moreடியூட் – திரை விமர்சனம்
காதலுக்கும் அதை போற்றும் அன்புக்கும் நடுவே போடப்பட்ட மெல்லிய முடிச்சு தான் இந்த படம். நாயகனின் மாமா அமைச்சராக இருக்கிறார். அவரது அழகு மகள் நம் நாயகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நாயகனோ, சிறு வயது முதல் நாம் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். எனவே உன் மேல் எனக்கு காதல் வராது’ என்கிறார். இதை ஏற்றுக்கொண்ட நாயகியும் கடந்து போகிறாள். ஆறு மாதம் கடந்து போன நிலையில் தன் மீது உயிராக இருக்கும் மாமா பெண்ணை மணந்தால் என்ன என்கிற எண்ணம் நாயகனுக்குள் எட்டிப் பார்க்க, மாமாவிடம் தன் விருப்பம் சொல்கிறான். அவருக்கும் தங்கை மகனுக்கு தன் பெண்ணை கொடுப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்க, இப்போது மாமா பெண் புதுசாக ஒரு கட்டையை போடுகிறாள். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை…
Read More