டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் , பிளாக்ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் , ரியோ ராஜ்- மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது” … இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு , ஒரு உலக சாதனையை புரிந்துள்ளது … இதன் மூலம் , “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் “ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது … இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு…
Read Moreராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)
‘கரவளி’ (Karavali) பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் குருதத்த கனிகா (Gurudatta Ganiga )– ராஜ் B. ஷெட்டி உடன் இணைந்து, ‘ஜுகாரி கிராஸ்’ படத்தை துவங்கியுள்ளார் ! பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி! சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் பிரபல நாவலை படமாக்கும் மிக தைரியமான முயற்சியில் களமிறங்கியுள்ளார். முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த…
Read Moreஇந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025ஐ மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அவிச்சி கல்லூரி இணைந்து சென்னையில் தொடங்கின
ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டு 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 வியாழக்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டது. ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தென் பகுதி அலுவலகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும் தாக்கத்தை உண்டாக்கும் சினிமாவின் கதைசொல்லல், பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர அனுபவங்களைக் கொண்டாடுவதன் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார ஒத்துழைப்பையும் மக்களிடையேயான தொடர்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தஜிகிஸ்தான்,…
Read Moreகாந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !, 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை !!
தமிழ்நாட்டில் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் அதிரடி வசூல் வேட்டை இன்னும் தொடர்கிறது! ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா சேப்டர் 1” படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள், நிரம்பிய திரையரங்குகள் என காந்தாரா சேப்டர் 1, தமிழ்நாட்டில் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த மனதை கவரும் பாடல்கள், அரவிந்த் S. காஷ்யப் ஒளிப்பதிவில் ஆச்சரியபட வைக்கும் காட்சிகள் , மற்றும் ரிஷப் ஷெட்டியின் ஆற்றல் மிகு…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!
ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது. இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும் மனம்கொண்டவராக கொண்டாடப்படும் சிரஞ்சீவி, திலக் வர்மாவை அன்புடன் வரவேற்று, கௌரவிக்கும் விதமாக அவரின் தோளில் சால்வை…
Read Moreநல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது, “ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள்…
Read Moreஅக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் மெஸன்ஜர் திரைப்படம்
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.…
Read Moreபார்வதா என்டர்டெய்ன்மென்ட் – கென் கருணாஸ் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது
பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொலியாக வெளியிடப்பட்டிருக்கிறது. ‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கென் கருணாஸ் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்து இயக்குகிறார். இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கருப்பையா C ராம் தயாரித்திருக்கிறார். பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்த திரைப்படம் உருவாகிறது. இது ஒரு ஜாலியான பள்ளிக்கூடம் பின்னணியின் உருவாகிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கென் கருணாஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே தயாரிப்பாளர் கருப்பையா C ராம் ஏற்கனவே இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த சண்முகம் சலூன் என்ற…
Read Moreதமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில் புதிய பொறுப்பு: ரக்பி வளர்ச்சிக்கு திரு செந்தில் தியாகராஜனின் தொடரும் அர்ப்பணிப்பு
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் திரு செந்தில் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சீனியர் Vice President ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இந்திய ரக்பி சங்கத்தின் பொதுச் செயலராக பணியாற்றி வருகிறார் மற்றும் இந்தியாவில் ரக்பி மற்றும் கபடி விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக இருக்கிறார். ரக்பி பிரீமியர் லீக்கை தொடங்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார், அதன் முதல் சீசனில் சென்னை புல்ஸ் அணி கலந்து கொண்டது. அந்த அணியில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற வீரர்கள் இருந்தனர். மேலும், சுஹைல் சந்தோக் உடன் இணைந்து தமிழ்நாடு கபடி லீக்கை துவக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். சர்வதேச அளவில் ரக்பி செவன்ஸ் லீக்கை மேம்படுத்துவதிலும், இந்த விளையாட்டுகளின் தரத்தை உலகளவில் உயர்த்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார்.
Read More“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘டியூட்’ உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘டியூட்’ திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ‘ஊரும் பிளட்டும்…’ முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல…
Read More