லெவன் – திரை விமர்சனம்

சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதுவும் ஒரே சாயலில். இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது வெளியில் போடும் முறையை கையாளும் சைக்கோ ஒவ்வொரு முறையும் எந்த தடயமும் இல்லாமல் தப்பி விடுகிறான். இதனால் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். இதற்கிடையே கொலைகளும் தொடர்கிறது. இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதன் பிறகு வழக்கு காவல்துறை அதிகாரி நவீன் சந்திராவிடம் போகிறது. ஆனால் அவர் பொறுப்பேற்ற பிறகும் கொலைகள் தொடரவே செய்கிறது. காவல்துறை மீது மண்ணை தூவி விட்டு கொலைகளை தொடரும் அந்த கொலையாளி பிடி பட்டானா? தொடர் கொலைக்கான அவன் மோட்டிவ் என்ன என்பது கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ். இருக்கட்டும். இந்த படத்துக்கும் லெமன் என்ற தலைப்புக்கும்…

Read More

HIT 3′ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் ‘HIT 3’. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. “இந்த பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது” என்றார். நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். “அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்‌ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ்பிரேஷன்”. நேஷனல் லெவல் பாக்ஸர்…

Read More

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது – மாறாத மர்மங்கள் காத்திருக்கின்றன!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இருக்கப் போகிறது. முன்னதாக வெளியான முதல் லுக் போஸ்டர் மற்றும் “சொல்லிடுமா” என்ற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. மர்மம் மிக்க கதையம்சம் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களால், படம் பரபரப்பான திரை அனுபவத்தை தர உள்ளது. மேலும், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். தன் நடிப்பால் தமிழ் திரை உலகில் புதிய வில்லனாக முன்னிறைவார்…

Read More

ராமின் ‘பறந்து போ’ ஜூலை 4-ல் ரிலீஸ்!

தனித்துவமான கதைச் சொல்லல் மூலம் சினிமாத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம். அவரது அறிமுகப் படமான ‘கற்றது தமிழ்’ உண்மையான அன்புக்கும் சமூகத்தின் அழுத்தத்திற்கும் இடையில் இருக்கும் ஒருவனின் கதையை பேசியது. அடுத்ததாக தந்தையின் உன்னதமான அன்பை ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘பேரன்பு’ திரைப்படங்களும், சமூகத்தின் உண்மை முகத்தை உரக்க பேசிய ‘தரமணி’ படமும் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாரட்டுக்களை குவித்த அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது ஃபீல் குட் திரைப்படமான ‘பறந்து போ’ ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது. பல உணர்வுப்பூர்வமான தருணங்களை இந்தப் படம் ரசிகர்களுக்குக் நிச்சயமாக கொடுக்கும். நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல்…

Read More

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன. இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில்…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

சென்னை, மே 13, 2025: ’ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார். ஜியோஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டபோது ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இந்த செய்தி வைரலானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ’ஹார்ட்பீட்…

Read More

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன்,நைனார் எழுதியுள்ளனர்.கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது. இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்…

Read More

‘நரி வேட்டை’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்.!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் வருகிற மே 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற அபின் ஜோசப் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அழுத்தமான கதை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான கதைசொல்லலுடன் தரமான நடிப்பை வழங்கும் கலைஞர்களுடன் சிறப்பான அனுபவத்தை வழங்கவுள்ளது. ‘நரிவேட்டை’ திரைப்படத்தில் டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன் ஆகியோருடன் பிரியம்வதா…

Read More

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ள சீமானின் ‘தர்மயுத்தம்’

‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்” ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.. இத்திரைப்படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன், சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில், இயக்குநர்கள் சேரன், சுந்தர்.சி, சீனு ராமசாமி, எச்.வினோத், சசிகுமார், தயாரிப்பாளர்…

Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி…

Read More