கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது!!

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ~ ~ ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சமூகப்…

Read More

தளபதி விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கா முட்டை, விசாரணை முதலாக பல வெற்றிப்படங்களை வழங்கிய வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விமல், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில்,…

Read More

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக…

Read More

ஆந்திர வெள்ளம்: ரூ.1 கோடி நன்கொடை கொடுத்த நடிகர் அல்லு அர்ஜூன்!

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உடைமகளை இழந்தவர்களுக்கு உதவ ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றார். ”ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் துன்பம் குறித்து நான் வருத்தமடைகிறேன். இந்த சவாலான நேரத்தில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்குகிறேன். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் நான் இறைவனிடம் வேண்டுக் கொள்கிறேன்” என்று அல்லு அர்ஜுன்…

Read More

நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம்  தங்க_மெடல் வழங்கியது!

தென்னிந்திய #நடிகர்_சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் (08.09.2024) இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் முத்துக்காளைக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் பொறிக்கப்பட்ட தங்க மெடல் வழங்கப்பட்டது! படித்து பட்டம் பெற்ற தனக்கு, நடித்து பெயர் வாங்க காரணமான நடிகர் சங்கம் தங்க மெடல் வழங்கியது, யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் நடிகர் முத்துக்காளை! நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், செயலாளர் விஷால், கார்த்திக், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார் நடிகர் முத்துக்காளை!

Read More

இயக்குநர் விக்யாத் இயக்கிய ‘ யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது.

சாண்டல்வுட்டின் இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழா…. இயக்குநர் விக்யாத் இயக்கிய ‘ யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது. கணேஷ் – ரமேஷ் கூட்டணியில் உருவான ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் முதல் காணொளி வெளியீடு கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.…

Read More

அப்பா மீடியா தயாரித்துள்ள “எங்க அப்பா” மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18’ம் தேதி வெளியாகிறது!

அப்பா மீடியா தயாரித்துள்ள “எங்க அப்பா” மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18’ம் தேதி வெளியாகிறது! இதில் ஐந்து வயது குழந்தை லக்‌ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடித்துள்ளார். தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹை லைட். பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு ‘எங்க அப்பா’ ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை ‘வருங்கால கதாநாயகி’ என பாராட்டி, வாழ்த்தினார்கள்! எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனீஷா சதீஷ்! கேரளா மற்றும் தமிழகத்தின் கண்கவரும் அழகிய காட்சிகளோடு, “எங்க அப்பா” செப்டம்பர் 18’ம் தேதி வருகிறார்!

Read More

“சுப்ரமண்யா”, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது. விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது. நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக…

Read More

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்

தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’ மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது. இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான…

Read More

“லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்!!

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும். பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார். குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.…

Read More