இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீரிஸின் அசத்தலான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய சந்தையில் ஒரு டிரக்கில் உணவகத்தை அமைப்பதற்காகத் திரும்பும் நான்கு சிறுவர்களின் கதாபாத்திரங்களை டிரெய்லர் காட்டுகிறது. தற்போது புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை இடத்தில் வியாபாரம் செய்யாமல், சொந்தமாக ஒரு கடையை அமைக்க தீர்மானிக்கின்றனர். நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும், நடிகர் ஷாம் ஒரு மோசமான குண்டர் கும்பலின் தலைவராக தோன்றுவதையும் இந்த டிரெய்லர் நமக்குக் காட்டுகிறது. இந்த பரபரப்பான தொடரில் குக்கு வித் கோமாளி புகழ் புகஜ் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி…
Read Moreநந்தமுரி மோக்ஷக்ஞ்யா அறிமுகாமகும் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது!
சுதாகர் செருகூரியின் SLV சினிமாஸ் & எம் தேஜேஸ்வினி லெஜண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் வழங்க, பிரசாந்த் வர்மாவுடன் நந்தமுரி மோக்ஷக்ஞ்யா அறிமுகாமகும், பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நந்தமுரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமுரி தாரக ராமராவின் பேரனும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள வரும், ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்ஷக்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.…
Read MoreGOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – விமர்சனம் 3.75/5
கதை… விஜய்யின் மனைவி சினேகா.. இவர்களுக்கு ஒரு மகன்.. சினேகா 2வது குழந்தைக்காக கர்ப்பிணியாக காத்திருக்கிறார். பிரசாந்த் மனைவி லைலா.. இவர்களுக்கு ஒரு மகள்.. விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர். ஒரு நாட்டிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதியையும் பிடிக்க SAT squad டீம் களம் இறங்குகிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் தனது 2வது ஹனிமூனுக்காக சினேகா மற்றும் தனது மகனுடன் தாய்லாந்த் செல்கிறார் விஜய்.. அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனை சமயத்தில் தன் மகனை தொலைத்து விடுகிறார்.. இதனை எடுத்து விஜய்யை பிரியும் சினேகா 15 ஆண்டுகளாக தன் மகளை மட்டும் வளர்த்து வருகிறார். அதன் பிறகு…
Read More‘டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!
இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் பெரியோர்களால் நிச்சியிக்கபட்ட திருமணம் இனிதே நடைபெற்றது. ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் நேற்றிரவு (செப்டம்பர் 4, 2024) வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இன்று காலை (செப்டம்பர் 5, 2024) திருமணமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் கலை, தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண், முனீஷ்காந்த், பிக்பாஸ் ராஜு, இயக்குநர் விக்னேஷ் ராஜா, இயக்குனர் விஷால் வெங்கட், பால சரவணன், காளி வெங்கட், மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில்…
Read Moreகல்வித் தூண்களான ஆசிரியர்களைக் கொண்டாடும் “ஐயை ஐயா” பாடல்!!
நமது வாழ்வை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் பாடலாக “ஐயை ஐயா” பாடல் வெளியாகியுள்ளது. அபிநாத் சந்திரனின் மதுரை குயின் மிரா பள்ளி தயாரித்துள்ள இப்பாடலை, ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க, பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். ஐலாவின் குரலில் ஒலிக்கும் இப்பாடல், கல்வியில் மட்டுமல்லாது மாணவர்களைத் தனி நபர் ஆளுமைகளாகவும், பொறுப்பான குடிமக்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை எடுத்துரைக்கிறது. செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடல் கல்வியாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. “ஐயைஐயா” இப்போது அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியாகியுள்ளது. விரைவில் இப்பாடலின் காணொளி பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியிடப்படும். Song link 🔗 https://lnkfi.re/AiyaiAiyaa
Read Moreபிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் !
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.. பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது. தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது. மும்பை—செப்டம்பர் 05, 2024— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் நகைச்சுவை-இணையத் தொடரான தலைவெட்டியான்…
Read More‘வாழை’ படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி – நடிகர் ஜே எஸ் கே
‘வாழை’ படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற ‘வாழை’ திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஜே எஸ் கே. இது குறித்து பேசிய அவர், “இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் ‘வாழை’ படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் தங்களது விமர்சனங்களில்…
Read Moreஎதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் “ஜீவன் நீயே”, பாடல் வெளியானது!!
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது. துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள…
Read Moreசென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 !
வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 நடைபெற்றது இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா சந்தீப்ஆனந்த், டாக்டர் சந்தீப் ஆனந்த் விழாவை துவங்கி வைத்தார்கள். 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி, கன்னடம் மற்றும் இந்திய பிற மொழிப்படங்களும், ஆங்கில மொழிப்படங்களும், பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் தமிழ்…
Read Moreஅதிரடியான பான் இந்தியா திரைப்படம், “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர்!!
பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ப்ரீ-லுக்கை வெளியிட்டு படத்தின் விளம்பர பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த போஸ்டர், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகத்தின், ஒரு கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. போஸ்டரில் கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தை பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதை காணலாம். போஸ்டரின் கலைவடிவமைப்பு பசுமையாகவும், சிக்கலான அமைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது…
Read More