விஷ்ணு விஷால் பிறந்தநாளில் தமிழகம் மற்றும் பாண்டியில் அன்னதானம் வழங்கி அசத்திய அவரின் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர் தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’…

Read More

டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஜூலை 26 முதல் “சட்னி சாம்பார்” வெஃப் சீரிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. ‘சட்னி – சாம்பார்’ டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும்…

Read More

பத்திரிக்கையாளர்களை சந்தித்த வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலய் சச்தேவு

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே…

Read More

பூரி ஜெகன்நாத் ராம் பொதினேனியின் “டபுள் ஐஸ்மார்ட்” படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாபர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் ஸ்டெப்பா மார் அபார வரவேற்பைப் பெற்றது. இன்று, படத்தின் இரண்டாவது சிங்கிள் மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது. காசர்லா ஷ்யாம் எழுதிய பாடல் வரிகள் ஹைதராபாத் ஸ்லாங்கைப் பின்பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பார்ட்டி பாடலுக்கு மணிஷர்மாவின் பூர்வீக நாட்டுப்புற இசையமைப்பு மற்றும்…

Read More

SIIMA 2024ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான பரிந்துரை பட்டியல் ரேஸில் முந்தும் “ஜெயிலர்”

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 – SIIMA 2024 வெளியிட்டுள்ளது.‌ இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், ” 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா (…

Read More

1000 கோடி வசூலித்து சாதனை படைத்த பிரபாஸின் கல்கி 2898 AD

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!! பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய…

Read More

மஞ்சுவாரியரின் ஃபுட்டேஜ் திரைப்படத்தை வழங்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப்

தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் “ஃபுட்டேஜ்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, “ஃபுட்டேஜ்” டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது. மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல்…

Read More

ஐசரி கணேஷ், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் – 2

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் போல் காக்க’, ‘பி டி சார்’ என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான…

Read More

தஞ்சைக்கு புதிய அடையாளமாய் துவங்கப்பட்ட “லாங்வால்” வணிக வளாகம்

தஞ்சையில் லாங்வால் வணிக வளாக துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா நேற்றைய தினம் (10.04.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவை தமிழக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய, “டி.ஆர்.பி. ராஜா பேசுகையில் தமிழகத்தில் முக்கிய நகரமாக தஞ்சையை மாற்றுவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். தஞ்சை நகரில் தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. விவசாய பெருங்குடி மக்கள் உள்ள இந்த பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் இந்த மால் மிகப்பிரம்மாண்டமாக 200000 சதுர அடியில் உருவாகியுள்ளது.…

Read More

ராம்சரணின் 16வது படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படமான #RC16 ல் கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் இணைந்துள்ளார். RRR இன் உலகளாவிய வெற்றி, முன்னணி நட்சத்திரமான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. உப்பேனா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் அறிமுகமான பரபரப்பான இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் தனது 16வது படத்திற்காக ராம் சரண் இணைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் உயர்தர தொழில்நுட்பத்துடன், மிகப்பெரும் பட்ஜெட்டில், பெரிய கேன்வாஸில் #RC16 படத்தினை பிரமாண்ட திரைப்படமாக…

Read More