நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் திரு.பூமிநாதன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக இணைய தளத்தையும் நடிகை ஶ்ரீலீலா தொடங்கி வைத்தார். அத்துடன் ஏவியேஷன் படிப்பில் இணைந்த முதல் 10 மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்களையும் ஶ்ரீலீலா தனது கரங்களால் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் அவரது திரையுலக வெற்றி தொடர்பான ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய ஶ்ரீலீலா, மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும், மேம்பாடு அடைந்துவரும் கேட்டரிங் துறையில், மாணவர்களின் வெற்றிக்கு தயார்படுத்தும் சென்னையின் அமிர்தாவின் செயல்பாடுகளை பாராட்டினார். சென்னைஸ் அமிர்தாவின்…
Read Moreபுனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்கும் ‘தீராப்பகை”
ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த ” நினைவெல்லாம் நீயடா” ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற இவர் தமிழில் “கேஸ் நம்பர் 13″, ” ஜோக் 101″ உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார் ஹரிப்ரியா. பிரம்மாண்டமான பார் செட்டில் படமாக்கப்பட்டுள்ள சரக்கு பாடலுக்கு பிரபல நடிகை மேக்னா நாயுடு படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருக்கிறார். இவர்களுடன்…
Read Moreகல்கி 2898 கிபி திரைப்படத்தை கொண்டாடும் ரசிகர்களால் அமோக வசூல் சாதனை
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும்,…
Read More”எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும்.” – நடிகை நயன்தாரா
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, “பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின…
Read Moreஎன்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும்” – சன்னி லியோன்
ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், “இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், “காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. ‘யாத்திசை’ படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் காயத்ரிக்கு நன்றி”. எடிட்டர் வெங்கட்ராமன், “எடிட்டாக இந்தப் படம்…
Read Moreரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’
ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது. ரொமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகியிருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது.
Read Moreநெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது
ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத்குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டாடா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து பல படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘டிஎன்ஏ’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவரான அதர்வா முரளியின் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
Read Moreஜி.வி.பிரகாஷ் இசையில் துல்கரின் “கொல்லாமல் கொல்லாத கோவக்காரி’ பாடல்
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது! ‘மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் வெற்றிக்காக நடிகர் துல்கர் சல்மான் பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இப்பொழுது அவருடைய நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படம் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசரில் துல்கர் சல்மானின் வசீகரிக்கும் தோற்றம் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது, படத்தில் இருந்து தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் சிங்கிள் ’கொல்லாதே’ பாடலை இன்று (ஜூன்…
Read Moreஹிப் ஹாஃப் ஆதி மற்றும் டி.இமான் வெளியிட்ட இரண்டாவது சிங்கிள்
விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது! விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் ‘தீரா மழை…’ நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘தீரா மழை…’ பாடலுக்கு பாராட்டு…
Read Moreபிரபல நடிகரை தன் திருமணத்திற்கு அழைத்த வரலட்சுமி
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ்! நடிகை வரலசுட்மி- நிக்கோலய் சச்தேவ் ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்த் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் ஜோடி நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஜோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் உரையாடி மகிழ்ந்தனர். இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை கூறி, திருமணத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை வரலட்சுமி பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Read More