அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !! குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அக்கரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது.. இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர்…
Read Moreஅட்லி – ரன்வீர் சிங் நடனத்துடன் களைகட்டிய இயக்குநர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் சினிமாத் துறை தவிர்த்து, தெலுங்கு, மலையளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோரும் சேர்ந்து சந்தோசமாக நடனமாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த…
Read Moreஅபாகஸ் கிராண்ட் மாஸ்டர் ச்ரபேஷ் நடிக்கும் “சிற்பி” திரைப்படம்
AR Productions என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சிற்பி என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபாகஸ் கிரான்ட் மாஸ்டர் சரபேஷ் இந்த திரைபடத்தில் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் முத்துக்குமார், வினோத் சாகர், அரோல் சங்கர், பூமிகா ஷெட்டி, ரோஜா ஸ்ரீ, பாப்ரி கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தின் மூலக்கதை செந்தில் ஜெகன்நாதனின் எவ்வம் என்ற சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. திரைக்கதை எழுதி படத்தை சிவகணேஷ் இயக்கி வருகிறார். இவர் தமிழில் சிங்கபெண்ணே, போலீஸ் டயரி ஆகிய வெப் தொடர்களை ZEE5 சேனலுக்காக இயக்கியவர். இது மட்டுமில்லாமல் கன்னடத்தில் 8 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கிச்சா சுதீப் தயாரித்த ஜிகர்தண்டா, ரவிச்சந்திரன் நடித்த ஆ திருஷ்யா…
Read More’ஜெயிலர் 2 வின் கதை என்னவென்று எனக்குத் தெரியாது’ – நடிகர் வசந்த் ரவி
வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள். இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் ”என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது…
Read Moreமே 3ல் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின் “சபரி”
இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர். எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம்…
Read Moreஅக்ஷய் குமார் வருகையால் “கண்ணப்பா” உண்மையான பான் இந்தியா படமாகியிருக்கிறது – விஷ்ணு மஞ்சு
விஷ்ணு மஞ்சுவின் பான் இந்தியா திரைப்படம் ‘கண்ணப்பா’-வில் இணைந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விஷ்ணு மஞ்சுவின் காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’ மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, ‘கண்ணப்பா’ திரைப்படம் மூலம் இந்திய சினிமா வரலாற்றுக்கு மிகப்பெரிய காவியத் திரைப்படத்தை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் முதல் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் இந்திய அளவில் புகழ்பெற்று இருப்பதோடு, படத்தின் அனைத்து பணிகளும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அந்த வகையில், பிரபாஸ், மோகன் லால், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடிக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் மற்றொரு முன்னணி இந்திய நட்சத்திரமான பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இணைந்துள்ளார். மேலும், ‘கண்ணப்பா’…
Read Moreஏப்ரல் 22-ம் தேதி முதல் சோனி எல்ஐவி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல் சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிராந்திய அளவிலான உணவுகளுக்கான சமையல் உலகை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் சோனி எல்ஐவி அலைவரிசை பெருமை கொள்கிறது. மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் வியக்க வைக்கும் மாபெரும் வெற்றியை அடித்தளமாக கொண்டு அவைகளின் பிராந்திய அளவிலான இந்நிகழ்ச்சிகள், இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சுவையான சமையல் திறன் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம். மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை வெறுமனே சமையல் நிகழ்ச்சிகளல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களது மற்றும் இப்பிராந்தியங்களது உணவு முறைகளின் சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும்…
Read More14 -வது பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், புகழ்பெற்ற இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அங்கீகரித்துள்ளது. இந்த நிகழ்வு பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டார். பட்டதாரி மாணவர்களுக்கு, தொடர்ச்சியான கற்றல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார். சமூகத்திற்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில்…
Read More”நடிகர் மோகன் நடிக்க வந்துவிட்டார். இனி அவர் மார்க்கெட் என்னவென்று தெரியும்” – ஹரா இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.
நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு Official Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥 தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில்… தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம்…
Read More”மல்லர் கம்பம்” கற்றிருக்கும் என் மாணவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் – மாஸ்டர் ராகவா லாரன்ஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர் ….…
Read More