பாடலாசிரியர் கருணாகரன் பாடலில்.. ஹேமந்த் மதுகர் இயக்கும் திரைபடம்… சைலன்ஸ்

உலகின் விழியாய் உண்மையின் மொழியாய் வாழும் அன்பு ஊடக நண்பர்களே! என்றும் எனக்கு ஆதரவும், அரவணைப்பையும் வழங்கும் சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்த கடிதம் வாயிலாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மாதவன், அனுஷ்கா, அஞ்சலி ,மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில்…. இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையில்…. ஹேமந்த் மதுகர் இயக்கும் திரைபடம்… #சைலன்ஸ். சஸ்பென்ஸ், த்ரில்லராகவும், மென்மையான ஆழமான அன்பின் மறுமொழியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த சைலன்ஸ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஐந்து பாடல்களை நான் எழுதி உள்ளேன். முதல் பாடல்…. காதலன் காதலி மீதுள்ள ஈர்பை கூறும் பாடல் “நீயே நீயே நான் காணும் உலகம் நீயே….” பாடியவர் : அலப்ராஜ் இரண்டாவது பாடல்…. காதலன் மீது காதலி ,காதலி மீது காதலன் அன்பை உணர்த்தும் பாடல்…. “முதல்…

Read More

“வெற்றி” இயக்குநர் அஞ்சனா அலி கானின் புதிய படைப்பு !

ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது…. இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது…

Read More

அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர் இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரை, மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம். சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக…

Read More

135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..!

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கின. சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்துவித…

Read More

ஊரடங்கு காலத்தில் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் உதவியை வழங்கிவரும் “அம்மா மூவி அசோசியேஷன்”

இயற்கையாக உருவான பேரிடர் கொரானா வைரஸ் இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கிபோனது இதன் காரணமாக அனைத்து தொழில்களும் தொடர்ந்து நடத்த இயலாமல்முடக்கப்பட்டதுதிரைப்படத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றானது தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள ‘அம்மா மூவி அசோசியேசன்’ தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு ஏப்ரல் 2020 முதல் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை உதவிகளை ஐந்தாவது மாதமாக செய்து வருகிறது மக்களை ஆளும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், அதனை அமுல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவருகிறது. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லாததுடன் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும்…

Read More

ஏடிஜிபி விஜயகுமார் எழுதிய வீரப்பனின் கதை படமாகிறது

வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது. துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது. இந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜ்யகுமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். எங்கள் மீது…

Read More

துல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்

தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சக்கைப்போடு போட்டது. அதனால் தமிழில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என சந்தோசப்பட்டார். ஆனால் அவரே அதை க் கெடுத்துக்கொண்டார். மலையாளத்தில் வரனே அவஷ்யமுண்டு என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் ஒரு நாய்க்குப் பிரபாகரன் எனப்பெயர் வைத்திருந்தனர். இதனால் தமிழர்கள் கொந்தளித்தனர். அந்தப்படம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தில் துல்கரும் சிக்கினார். நிச்சயமாக துல்கர் நினைத்திருந்தால் அப்படியொரு பெயரை நாய்க்கு வைக்க வேண்டாம் எனத்தடுத்திருக்கலாம். ஏனோ அவர் செய்யவில்லை. அந்தக் காரணமா என்னவென்று தெரியவில்லை. இப்போது கோடியக்கரை என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ஒரு நாய்க்குப் பெயர் துல்கர் என வைத்துள்ளனர். இந்தக் கோடியக்கரைப் படத்தை பாயின்ட் காலிமர் பிலிம்ஸின் ருத்ரம்…

Read More

இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில்…

Read More

நகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்!

“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். ‘தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்’ என நமக்கு அடிக்கடி…

Read More

சீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’

ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது. ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கலங்கடித்த துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் ‘பேட்ட’ என்ற…

Read More