ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ரஜினி கிஷனும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் மகள் த்விவிகாவும் காதலிக்கிறா ர்கள். காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததும் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன. அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பின்னணியில் மணப் பெண்ணின் தாலி இருக்கிறது. அந்த தாலி கணவனை நெருங்க விடாமல் துரத்துகிறது. கூ ச்சலிடுகிறது. ‘எவண்டா எனக்கு இந்த தாலியை கட்டியது?’ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. அப்படியானால் இது ஆவியின் சேட்டையா என்ற கேள்வி எழும் அல்லவா. உண்மையில் அந்த தாலி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதை கட்டிய பிறகு மணமகளிடம் அந்த எதிர்பாராத மாற்றம் ஏன்? கேள்விகளுக்கு விடை எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், நடனம்,சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து…
Read Moreரேகை – இணையத் தொடர் விமர்சனம்
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மர்ம நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எம்.தினகரன் உருவாக்கிய வெப் சீரீஸ் ‘ரேகை.’ யூகிக்க முடியாத திருப்பங்களோடு, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய புலனாய்வு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 6 எபிசோட்களையும் ஒன்றாக பார்த்தாலும், நேரம் போனதே தெரியாதவாறு விறு விறு கதையமைப்பு இ தன் சிறப்பம்சம். ஒவ்வொரு எபிசோட்டிலும் ஒரு திருப்பம், அதன் மூலம் நகரும் கதையின் அடுத்த கட்டம் ஏழாவது எபிசோடு வரை திரில்லருக்கு குறையாத கதை அமைப்பு இதன் சிறப்பம்சம். கதையில் நிகழும் கொலை சம்பவங்களை அறிவியலோடு இணைத்து காட்சிகளை வடிவமைத்த விதம் இன்னும் ஸ்பெஷல். சரி, விமர்சனத்திற்கு வருவோம். ஆண்கள் விடுதி குளியல் அறையில் இளைஞன் ஒருவன் செத்துக் கிடக்கிறான். குளியலறை உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருக்கும் நிலையில் அது தற்கொலையாகத் தானே…
Read Moreதுல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின்…
Read Moreவெள்ளக் குதிர — திரை விமர்சனம்
நடுத்தர குடும்பத்தின் அனுதின போராட்ட வாழ்க்கையில் நொந்து போகும் நாயகன், ராங் ரூட்டில் போயாவது சீக்கிரமே செட்டில் ஆக வேண்டும் என்றஎண்ணத்தில் இருக்கிறார். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டதில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாகிறது. இந்த நிலையில் தனது மனைவி மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் நேரம் மீண்டும் சட்ட விரோதமான தொழிலை செய்யத் தொடங்குகிறார். விசேஷங்களுக்காக மட்டுமே அங்கே தயாரிக்கப்படும் போதை தரும் மூலிகை ரசத்தை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரிக்கும் வேலையை ரகசியமாக செய்து வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை…
Read Moreரிவால்வர் ரீட்டா — திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தை தாங்குகிறார். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவருடையது. .புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் தாதா சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. அதை பயன்படுத்தி அவரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கூட்டம். ஒரு நாள் வழக்கமான புரோக்கர் ஒருவரின் அழைப்பில் விலைமாதுவை சந்திக்க வரும் இடத்தில் அவரைப் போட்டுத் தள்ள திட்டம் தயாராகிறது. ஆனால் நடந்தது வேறு. தவறுதலாக அவர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கீர்த்தி சுரேஷும் அவரது குடும்பமும் சேர்ந்து அவரை தாக்க, தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும்…
Read Moreஇயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்ட “அனலி” ஃபர்ஸ்ட் லுக்
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குனர் திரு.கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால்…
Read Moreகே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான…
Read More’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், இயக்குநர் வி.இசட்.துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.…
Read MoreIFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” படத்திற்கு சிறப்புத் திரையிடல் மரியாதை
உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் *56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)* வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு பெருமையுடன் திரையிடப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வில்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,உட்பட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். லைகா புரொடக்ஷன்ஸின் படைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச மேடைகளில் கவனம் பெறுவது பெருமைக்குரிய சாதனையாகும். மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள லைகா புரொடக்ஷன்ஸின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் இரண்டு நாட்களுக்கு முன்பு IFFI மேடையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read Moreஃப்ரைடே — திரை விமர்சனம்
வழக்கமான கூலிப்படை கதை. அதை வழக்கத்துக்கு மாறாக திரில்லருடன் சுவாரஸ்யம் இணைத்து தந்திருக்கிறார்கள். மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு தாராளமாக அதிரடி தடாலடி என வலம் வருபவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார். அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. இதனால் கட்சி எம் எல் ஏ வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஒருவரை இவரே ஆள் வைத்து போட்டுத் தள்ளுகிறார். அவரது நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன். நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டு தள்ளியவன், அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக சேர்கிறார். தனது…
Read More