பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது ‘செலிபிரிட்டி ஷோ ‘என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய்ச் சேர்கிறது, எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ‘பரிசு’ திரைப்படத்தைக் கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக்காட்டியுள்ளனர். சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது.சின்னச் சின்ன சலனங்களுக்கும் பருவக்கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை இது. படத்தின் கதை…
Read Moreகேம் ஆப் லோன்ஸ் – திரை விமர்சனம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் ஆன்லைன் ஆஃப் ஒன்றில் கடன் வாங்குகிறான் நாயகன். அந்த கடனால் அவன் எதிர்கொள்ளும் நெருக்கடியை கதை யாக்கி இருக்கிறார்கள். கடன் கொடுத்த வங்கியில் இருந்து தேடி வந்த இருவர் லட்சங்களில் இருக்கும் கடனை கட்ட முடியாவிட்டால் தற்கொலை ஒன்றே அதற்கு தீர்வு என்று மெதுமெதுவாக நாயகன் மனதை மாற்ற முயல் கிறார்கள். மனைவிக்ku தெரியாமல் வாங்கிய கடன் என்பதால் தற்கொலை செய்து கொண்டால் கூட அந்த கடனை மனைவி கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அழுத்தம் தருகிறார்கள். விடாப்பிடியான அவர்களின் வார்த்தை ஜாலத்தில் குழப்ப மனநிலைக்கு போன நாயகன், அவர்கள் தந்த அழுத்தத்தின் பேரில் தற்கொலை செய்து கொண்டானா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியானவர்…
Read Moreஅதிரடி மாஸ் என்டர்டெயினர்: ‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
நடிகரும், இயக்குநருமான பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது. பசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்ஸ் (Basil Joseph Entertainments) மற்றும் டாக்டர் அனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் (Doctor Ananthu Entertainments) இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான மாஸ் என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘மின்னல் முரளி’ படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான அருண் அனிருதன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் மூலம், டொவினோ தாமஸ், பசில் ஜோசப், சமீர் தாஹிர், மற்றும் அருண் அனிருதன் அடங்கிய ‘மின்னல் முரளி’ கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது. படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அக்டோபர் மாத…
Read Moreபைசன் — திரை விமர்சனம்
வன்முறை வாடிக்கை ஆகிப் போன தென் மாவட்ட கிராமம் ஒன்றில் இருந்து தடைகளை உடைத்து தனது லட்சியமான கபடி விளையாட்டில் தேசத்துக்கே பெருமை தேடித் தந்த ஒரு இளைஞன் கதை. தென் மாவட்டங்களில் 90-களில் நடந்த சமூக மோதல்கள் அந்தப் பகுதி மக்களை குறிப்பாக இளைஞர்களை ரொம்பவே பாதித்தது. பல இளைஞர்களின் எதிர்காலம் அரிவாள் வீச்சில் முடிந்து போனது. இப்படிப்பட்ட கிராமத்திலிருந்து தனது கபடி கனவை நனவாக்க போராடும் ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். அந்த நாயகனாக துருவ் விக்ரம் படம் முழுக்க நடிப்பால் வியாபித்து நிற்கிறார். அவரை நடிகராக ஒரு காட்சியில் கூட பார்க்க முடியவில்லை. அந்த கபடி வீரன் கேரக்டரில் வீறு கொண்ட வேங்கையாக சீறிப் பாய்கிறார். கபடி விளையாடக்கூடாது என்று சத்தியம் வாங்கும் தந்தையி டம் அவர் சத்தியம் செய்யும்…
Read Moreபைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் அவர்களை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி ஆசிரியராக நடிகர் மதன் நடித்திருக்கிறார். தென் தமிழகத்து மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டையும் நிஜ கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் இந்தப்படம் பேசுகிறது. நிஜத்தில் மனத்தில் கணேசனுக்கு உதவிய ஆசிரியர்தான் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்கள். இன்று இயக்குனர் மாரிசெல்வராஜ் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து படக்குழுவின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Read Moreமுதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது! இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்.., “அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை, இந்திய…
Read Moreஅருண்ராஜா காமராஜின் சீடர் இயக்கியுள்ள ‘டியர் ஜீவா’ ; டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு
தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார். இந்த படம் டென்ட் கொட்டாய் ஓடிடி…
Read Moreதக்ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்
காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக பிரார்த்தனை செய்தார். அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான *காசிக்கு (வாரணாசி)* பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். தக்ஷன காசியிலிருந்து காசிவரை அவரின்…
Read Moreகொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔
தீபாவளி பண்டிகையில் வானம் ஆயிரம் பட்டாசுகளாலும் வாண வேடிக்கையாலும் ஒளிர்ந்தாலும் கொகொவுக்கு மனதில் ஒரே ஒரு ஆசைதான். அது எந்தவிதமான பட்டாசு சத்தமும் இல்லாமல், பயமில்லாமல் கிகியை பாதுகாப்பது! உலகமே பட்டாசு சத்தத்தால் அதிரும்போது அவர்கள் இருவருக்கும் நீங்கள் தரும் மிகச்சிறந்த பரிசு அவர்களை பாதுகாப்பதுதான். இந்த தீபாவளியை சற்றே வித்தியாசமாக கொண்டாடுவோமே! உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு அமைதியான பாதுகாப்பான இடம் ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்து உங்கள் அன்பை காண்பியுங்கள். ஏனெனில், செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் மட்டும்தான் உலகம்! எங்கள் சிறிய குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பத்திற்கு, அன்பு நிறைந்த தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்! கிகி & கொகொவின் தீபாவளி வாழ்த்துக்கள் 🐾 உங்கள் கொண்டாட்டங்கள் பிரகாசமாகவும், உங்கள் அன்பு நிறைந்தவர்களை பாதுகாப்பாகவும் வைத்திருங்கள். அதுதான் உண்மையான கொண்டாட்டம்.
Read Moreநடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது
சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான அசோர்ட், சென்னையின் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அதன் புத்தம் புதிய கடையைத் திறப்பதன் மூலம் தெற்கில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. 15,211 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆல்-நியூ ஸ்டோர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமகால பாணி மூலம் ஃபேஷன் சில்லறை விற்பனையை மேம்படுத்தும் அசோர்ட் இன் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக இருக்கும். பிரமாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நடிகையும் இளைஞர்களின் ஐகானுமான கிருத்தி ஷெட்டி அசோர்ட் கடையைத் திறந்து வைத்து, ரசிகர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் உரையாடி, நகரத்தின் டைனமிக் மற்றும் ஃபேஷன்-ஃபார்வாட் ஸ்பிரிட்டைக் கொண்டாடினார். அசோர்ட் என்பது இந்தியாவின் ஒரே ஃபேஷன் நியோஸ்டோர் ஆகும், இது குளோபல் டிரெண்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில்…
Read More