தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் சுவாரஸ்யம்

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,வழக்கம்போல் சென்னை பிரசாத் லேப்பில் சிறப்பாக நடந்தது. 2025ம் ஆண்டு சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன்( தமிழ்நாடு வீட்டுவசதிவாரியதலைவர், நடிகர் சங்க துணைத்தலைவர்) மற்றும் நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரகவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். விழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்‘, முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு மாமனிதர்.அரசு அதிகாரிகள், கட்சி…

Read More

கம்பி கட்ன கதை — திரை விமர்சனம்

  அப்பாவி மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் நாயகன் நட்டி நட்ராஜ் கையில் பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்று கிடைக்க, அதை காட்டுப்பகுதி ஒன்றில் குழி தோண்டி புதைத்து வைக்கிறார். வைரக்கடத்தலு க்காக போலீஸ் அவரை கைது செய்கிறது. கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறது. சிறை வாசம் முடிந்து வெளியே வரும் நட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடம் அரசியல்வாதி ஒருவரால் அபகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் கோவில் ஒன்றையும் அரசியல்வாதி கட்டி வைத்திருக்கிறார். இப்போது வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொள்கிறார். சாமியாராக இருந்து கொண்டே வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த முயற்சியில் அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பதை…

Read More

டீசல் – திரை விமர்சனம்

2014-க்கு முந்தைய காலகட்டத்தில் கதை நடக்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து, வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அங்குள்ள மீனவ மக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட ராட்சத குழாய், மீனவர்களின் மீன் தொழிலையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. அந்த திட்டத்திற்கு எதிராக போராடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். இதனால் அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் மீனவர்களில் சிலர், அதே கச்சா எண்ணெயை திருடுவதை தொழிலாக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் திருட்டை வளர்த்துவிடும் சில பண முதலைகளின் சதித் திட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை அறிந்து கொள்ளும் நாயகன் அந்த சதிதிட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவர் வெற்றி பெற்றாரா? சதி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் தொழில் அதிபரால்…

Read More

டியூட் – திரை விமர்சனம்

காதலுக்கும் அதை போற்றும் அன்புக்கும் நடுவே போடப்பட்ட மெல்லிய முடிச்சு தான் இந்த படம். நாயகனின் மாமா அமைச்சராக இருக்கிறார். அவரது அழகு மகள் நம் நாயகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நாயகனோ, சிறு வயது முதல் நாம் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். எனவே உன் மேல் எனக்கு காதல் வராது’ என்கிறார். இதை ஏற்றுக்கொண்ட நாயகியும் கடந்து போகிறாள். ஆறு மாதம் கடந்து போன நிலையில் தன் மீது உயிராக இருக்கும் மாமா பெண்ணை மணந்தால் என்ன என்கிற எண்ணம் நாயகனுக்குள் எட்டிப் பார்க்க, மாமாவிடம் தன் விருப்பம் சொல்கிறான். அவருக்கும் தங்கை மகனுக்கு தன் பெண்ணை கொடுப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்க, இப்போது மாமா பெண் புதுசாக ஒரு கட்டையை போடுகிறாள். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை…

Read More

உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”

டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , பிளாக்‌ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் , ரியோ ராஜ்- மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது” … இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு , ஒரு உலக சாதனையை புரிந்துள்ளது … இதன் மூலம் , “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் “ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது … இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு…

Read More

ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

‘கரவளி’ (Karavali) பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் குருதத்த கனிகா (Gurudatta Ganiga )– ராஜ் B. ஷெட்டி உடன் இணைந்து, ‘ஜுகாரி கிராஸ்’ படத்தை துவங்கியுள்ளார் ! பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி! சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் பிரபல நாவலை படமாக்கும் மிக தைரியமான முயற்சியில் களமிறங்கியுள்ளார். முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த…

Read More

இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025ஐ மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அவிச்சி கல்லூரி இணைந்து சென்னையில் தொடங்கின

ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டு 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 வியாழக்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டது. ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தென் பகுதி அலுவலகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும் தாக்கத்தை உண்டாக்கும் சினிமாவின் கதைசொல்லல், பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர அனுபவங்களைக் கொண்டாடுவதன் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார ஒத்துழைப்பையும் மக்களிடையேயான தொடர்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தஜிகிஸ்தான்,…

Read More

காந்தாரா சேப்டர் 1  –  தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !,  2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை !!

தமிழ்நாட்டில் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் அதிரடி வசூல் வேட்டை இன்னும் தொடர்கிறது! ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா சேப்டர் 1” படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள், நிரம்பிய திரையரங்குகள் என காந்தாரா சேப்டர் 1, தமிழ்நாட்டில் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த மனதை கவரும் பாடல்கள், அரவிந்த் S. காஷ்யப் ஒளிப்பதிவில் ஆச்சரியபட வைக்கும் காட்சிகள் , மற்றும் ரிஷப் ஷெட்டியின் ஆற்றல் மிகு…

Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது. இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும் மனம்கொண்டவராக கொண்டாடப்படும் சிரஞ்சீவி, திலக் வர்மாவை அன்புடன் வரவேற்று, கௌரவிக்கும் விதமாக அவரின் தோளில் சால்வை…

Read More

நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!

கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது, “ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள்…

Read More