’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகை மிதிலா பால்கர், “‘ஓஹோ எந்தன் பேபி’ ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்”. நடிகை அஞ்சு குரியன், “‘ஓஹோ எந்தன் பேபி’ ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். நிச்சயம் நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு…

Read More

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், இணையும், பான் இந்தியா திரைப்படத்த்தின் படப்பிடிப்பு தொடங்கியது !!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதன் முறையாக இணையும் பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது. இந்த மிக பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். சார்மி கௌர் இப்படத்தை வழங்குகிறார். தெலுங்கு திரையுலகின் லக்கி சார்ம் எனக் கொண்டாடப்படும் சம்யுக்தா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகர்கள் தபு மற்றும் விஜய் குமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், விஜய் சேதுபதி, சம்யுக்தா மற்றும் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தொடர்ந்து எந்த இடைவெளி இல்லாமல் நடைபெற உள்ளது. இயக்குநர்…

Read More

ரிஷப் ஷெட்டி பிறந்த நாளையொட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது – இப்படம் வரும் அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வருகிறது!

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. 2022 ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்களைத் தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் (கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மெகா ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம்) அடுத்ததாக தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1 – தற்போது இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் ப்ரீக்வலில், ரிஷப் ஷெட்டி இதுவரை பார்த்திராத ஒரு அதிரடி தோற்றத்தில் வெளிவந்திருக்கும் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதென அறிவித்துள்ளனர் – இது ரிஷபின் பிறந்தநாளுக்கான சிறந்த பரிசாக அமைந்துள்ளது! காந்தாரா: Chapter 1 திரைப்படம், அந்தக் கதையின் தோற்றத்தை சொல்வதோடு,…

Read More

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் – திரை விமர்சனம்

32 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீபன் பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் திரைப்படம் டைனோசர் மீதான பிரமிப்பை ரசி கனுக்குள் விதைத்தது. தொடர்ச்சியாக இதே பின்னணியில் வந்த டைனோசர்கள் கதையில் இது ஏழாவது பாகம். இந்த கதைப்படி நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு ஏற்ற விதத்தில் இல்லாமல் போக, தற்போதுள்ள டைனோசர்கள் கடலிலும் அடர்ந்த காடுகளை கொண்ட தீவுகளிலும் வாழத் தொடங்கி விட்டன. இதில் இன்னொரு ஆச்சரியமாக பறக்கும் டைனோசர்களும் உண்டு. மூன்று வகைகளிலும் அபாயம் இந்தப் பறக்கும் டைனோசர் தான். ஓங்கு தாங்கான அதன் உயரம், பயமுறுத்தும் தோற்றம், அதன் பார்வையில் சிக்கி விட்டால் அடுத்த கணமே அதன் வாய்க்குள் சமாதி தான். இப்படி உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும் அதைத் தேடி பயணப்படுகிறது ஒரு குழு. தீவுகளுக்குள் இருக்கும் டைனோசர்களின் டி…

Read More

“அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு?” – பட விழாவில் சசிக்குமார்!!

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் பேசியதாவது… விஜய் கணபதி பிக்சர்ஸ் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பிடித்த படத்தைத் தருவோம். நாயகன் சசிகுமார் சார் இப்படத்திற்காகப் பார்த்துப் பார்த்து அத்தனை விஷயங்கள் செய்து தந்தார். இயக்குநர் சத்ய சிவா அருமையாக படத்தை எடுத்துள்ளார். லிஜோ மோல் அற்புதமாக நடித்துள்ளார் எல்லோரும் இந்த பாத்திரத்திற்கு அவரைத்தான் சொன்னார்கள். ஜிப்ரான் சார் தன் இசையால் சீட்…

Read More

துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு!!

மும்பை, ஜூலை 6, 2025 : ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ் , ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மர்மம் – துணிச்சல் – அதிரடி ஆக்சன் காட்சிகள் – ஆகியவை கலவையாக இடம்பெற்று கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதற்கு ஷாஷ்வத் ஆற்றல்மிக்க இசையை வழங்கி இருக்கிறார். ஜாஸ்மின் சான்ட்லஸின் குரலும்,…

Read More

பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !!

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன்…

Read More

சமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்க போகிறேன்… நடிகர் மன்சூர் அலிகான்!

“அகம் பிரம்மாஸ்மி” ஆல்பம் அதற்கு முன்னோட்டமாக எடுத்துள்ளேன். சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்கள் பயன்படுத்தி ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆல்ப பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!   ‘ராஜாதி ராஜ ராஜ குலத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ படத்தில் பாடல்கள், இசை, நான் அமைத்திருந்தேன். வாணி ஜெயராம், சந்திரபோஸ், சொர்ணலதா, டி.எஸ்.ராகவேந்தர் ஆகியோரை பாட வைத்திருந்தேன். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். ‘டிப் டாப் தமிழா’ ஆல்பம் இசையமைத்து வெளியிட்டேன். தமிழ் என் தாய் மொழி. மூத்த மொழி, தொன்மையான மொழி. கலைஞனுக்கு மொழி, இனம், நாடு வித்யாசம் கிடையாது. அந்த வகையில் சமஸ்கிருதத்தில் ஜதி பிடித்திருந்தது. பரதநாட்டியம், குச்சிப்புடி நடன அசைவுகளுக்கும், சிவ தாண்டவம் ஆடவும் சமஸ்கிருதம் பொருத்தமாக இருந்தது. அதனால்…

Read More

ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து நடிகர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய அண்ணன் விஷ்ணு விஷால் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்றுதான் சினிமா பயணத்தைத் துவங்கினேன். இந்த படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான்.…

Read More

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங்…

Read More