ஆரஞ்ச்வுட் வழங்கும் ’ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024’!

சென்னை, இந்தியா – அக்டோபர் 2024 – ஃபேஷன், கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்ற முன்னணி பத்திரிக்கையான ப்ரோவோக் லைஃப்ஸ்டைல், நவம்பர் 2 மற்றும் 3, 2024 ஆகிய தேதிகளில் ஆரஞ்சுவுட் வழங்கும் ’ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024’ ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இரண்டாவது வருடமாக நடக்கும் இந்த விழாவின் வசீகரிக்கும் தீம், ’Where Elegance Meets Art’ என்பதாகும். நிகழ்வு நடக்கும் மாலை வேளை, பங்கேற்கும் அனைவருக்கும் மறக்க முடியாததாக அமைய மகிழ்ச்சியான கலை நிகழ்ச்சிகள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும் வழங்கப்படுகிறது. நவம்பர் 2, 2024: புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ஷோபனா சந்திரகுமார், கர்நாடக இசைக்கலைஞர் ஸ்ரீ அபிஷேக் ரகுராமுடன் இணைந்து நடத்தும் கலைநிகழ்ச்சி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையும். கலைத் துறையில் சிறந்த…

Read More

அமரன் – திரை விமர்சனம்

2014 இல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதை. அதை சினிமாவுக்கான சமரசம் இன்றி அதேநேரம் இதயம் நெகிழும் விதத்தில் தந்ததற்காக படக்குழுவுக்கு முதலில் ஒரு ஹாட்ஸ் ஆப். பள்ளியில் படிக்கிற காலம் தொட்டு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவன் முகுந்த்தின் கனவு. கல்லூரி காலத்தில் அதை செயல்படுத்த முனையும் போது தான் ஒரு பக்கம் பெற்றோரின் எதிர்ப்பு. இன்னொரு பக்கம் முகுந்த் காதலிக்கும் மலையாள பெண்ணின் குடும்பம் இதற்காகவே பெண் தர மறுக்கிறது. எதிர்ப்பை சரி செய்து காதலியை ஒருவழியாக கரம் பிடிக்கும் முகுந்த், அடுத்தடுத்த பதிவு உயர்வுகளில் மேஜர் ஆகிறார். அன்பு மனைவி அழகு குழந்தை என மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் காஷ்மீர் தீவிரவாதிகளை களை எடுக்க…

Read More

பிரதர் – திரை விமர்சனம்

எளிதான தலைப்பில் வந்திருக்கும் அக்கா தம்பி பாசக் கதை. எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி. அவரது பாசமிகு அக்கா பூமிகா. அக்கா திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகள் என்று செட்டிலாகி விட… தம்பி ஜெயம் ரவியோ அனுதினமும் தனது லா பாயிண்ட்டில் பெற்றோருக்கு தலைவலி தர, ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு அதுவே நெஞ்சு வலியில் முடிய, பதறிப் போய் ஊட்டியில் இருந்து ஓடிவரும் அக்கா, தம்பியை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துப் போகிறார். அங்கே ஒரு ஆறு மாத காலம் தங்க வைத்து தம்பியை திருத்தி அனுப்பி வைப்பதாக அப்பாவுக்கு வாக்கு கொடுக்கிறார். ஆனால் போன இடத்தில் ஜெயம் ரவியின் லா பாயிண்ட் இன்னும் பிரச்சனையாகிறது. எதற்கும் எல்லாவற்றுக்கும் டைம் டேபிள் போட்டு வாழும் அந்த குடும்பத்தில் இருந்து அக்கா குடும்பம் பிரிய தம்பியே…

Read More

லக்கி பாஸ்கர் – திரை விமர்சனம்

தீபாவளிக்கு பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கிறார் இந்த லக்கி பாஸ்கர். கதை 1990 இல் தொடங்குகிறது. அதிகாலை வாக்கிங் முடித்து பால் பாக்கெட் வாங்க வரும் துல்கர் சல்மானை சுத்தி வளைக்கும் சிபிஐ. அப்படியே அவரை வங்கிக்கு அள்ளிக் கொண்டு போகிறது. அவரது வங்கிக் கணக்கை சோதனையிடும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வங்கி கணக்கு இருப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் இருந்தால் அதிர்ச்சி சகஜம் தானே. ஒரு வங்கி உதவி பொது மேலாளர் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி என்ற வினாக் குறியுடன் தொடங்கி வியப்புக் குறியுடன் முடிகிறது படம். மும்பையில் பல பல வங்கியில் மாதம் ரூ. 6000 சம்பளத்தில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு கடனாக இருப்பதோ ரூ 16,000. அடுத்து வரவிருக்கும் உதவி மேலாளர் பிரமோஷனில் சம்பளம் டபுள் ஆகும்.…

Read More

பிளடி பெக்கர் – திரை விமர்சனம

தமிழ்த் திரைக்கு எப்போதாவது இம்மாதிரியான கதைக்களம் சிறப்பு சேர்க்கும். அப்படியொரு படம் இது. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட நாயகனுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் நினைவு நாளையொட்டி 25 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடாகிறது. இந்த 25 பேரில் ஒருவனாக நமது நாயகனும் அழைக்கப்பட, போகிறான். அங்கே வயிறார சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு ஆசை. இந்த பங்களாவுக்குள் ஒரு முறையாவது போய் வந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. பல கட்டுப்பாடுகளை தாண்டி அந்த பங்களாவுக்குள் நுழைகிறான் நாயகன். அங்கே ஒரு நிஜ பேயையும் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் சில பணப்பேய் களையும் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நாயகன் அங்கிருந்து உயிரோடு திரும்பி வர முடிந்ததா என்பது திகு…

Read More

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன்…

Read More

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும், ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!

ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் “ஹேப்பி எண்டிங்” ரொமாண்டிக் காமெடி திரைப்பட, டைட்டில் டீசர் வெளியீடு !! ‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.…

Read More

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில்ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.. சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என…

Read More

ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் உருவாகி இருக்கும் மெஸன்ஜர்

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு…

Read More

தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024) நேற்று மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது . நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த நிருபரான திரு கங்காதரன் அவர்களுக்கு சங்கம் சார்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நினைவு…

Read More